இதை இயேசுவின்பாடு மரணத்தை நினைவுகூறும்படி செய்கிறோம். ஜீவஅப்பமானது
மரணத்தின் மூலம் பிட்கப்பட்டு ஆவிக்குரிய பசியுள்ள அனைவருக்கும் பங்கிடப்படுகிறது என்பதை சித்தரித்துக் காட்டுகிறது. தேவையுள்ள ஆத்மாக்களை சுத்திகரித்து புதிய வல்லமையை அவர்களுக்குக் கொடுக்கும்படியாக சிந்தப்பட்ட ஜீவனுள்ள அவருடைய இரத்தத்திற்கு வார்க்கப்பட்ட திராட்சரசம் அடையாளமாயிருக்கிறது. அப்பத்தையும், திராட்சரசத்தையும் உட்கொள்ளும்போது நாம் மெய்யாகவே விசுவாசத்தினால் அவருடைய ஜீவனைப் பெறுகிறோம். இது நமக்கு புதிய உற்சாகத்தைக் கொடுக்கிறது. இதில் பங்கு பெறுகிறவர்கள் சுத்திகரிக்கப்பட்டவர்களாய் இருக்க வேண்டும். இல்லையெனில் இயேசுவின் சரீரத்தைக் குறித்தும், இரத்தத்தைக் குறித்தும் குற்றமுள்ளவர்களாயிருப்பார்கள்.