இயேசு சீமோன் வீட்டிற்கு வந்தபோது அவனுடைய மாமி கடும் ஜுரத்தில் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டார். இயேசு அவளிடத்தில் குனிந்து ஜுரம் நீங்கும்படி கட்டளையிட்டார். அவள் உடனே ஜுரம் நீங்கப்பெற்று அவருக்குப் பணிவிடை செய்தாள். இதேபோல் கர்த்தரிடம் நன்மையைப் பெற்றவர்கள் நன்றியுடன் அவருக்குப் பணிவிடை செய்ய வேண்டும்.
பலபல வியாதியுடையவர்களை இயேசுவினிடத்தில் கொண்டு வந்தார்கள். இயேசு அவர்கள் ஒவ்வொருவர் மேலும் தன் கைகளை வைத்து அவர்களை சொஸ்தமாக்கினார். பிசாசுகளும் “நீர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” என்று சத்தமிட்டு அவரை விட்டு புறப்பட்டது.
இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில்: பேதுருவின் தாய் இயேசுவால் சுகம் கிடைத்தவுடன் பணிவிடை செய்தது போல நாமும் இயேசுவிடமிருந்து அற்புதத்தையோ, சுகத்தையோ பெற்றுக் கொண்டோமானால் அதன்பின் அவருடைய ராஜ்ஜியம் விரிவடைய, ஆத்மாக்களை இயேசுவண்டை வழிநடத்த பாடுபடுவோம்.