ஆதியிலே வார்த்தை இருந்தது – யோ 1:1 இயேசு எப்பொழுதுமே இருந்தார், இருக்கிறார், இருப்பார். – வெளி 1:8,11, 2:8, 22:13 தேவனுடைய வார்த்தையாக இருந்த அவர் மனிதனாக வந்த போது இயேசு என்றழைக்கப்பட்டார் – யோ 1:14 சகலமும் தேவனுடைய வார்த்தை மூலமாய் உண்டாயிற்று – எபே 3:11, கொலோ 1:16, எபி 1:2 உயிருள்ள யாவும் அவரால் உருவாக்கப்பட்டு உயிர்பெற்றன. அவருடைய ஜீவன் ஒவ்வொருவருக்கும் ஒளியாயிருந்தது. சாத்தானின் ஆதிக்கத்திற்கும், பாவத்திற்கும் எதிராக கிறிஸ்துவின் ஒளி பிரகாசிக்கிறது. அவைகளால் ஒளியை மேற்கொள்ள முடியவில்லை. தேவனுடைய வார்த்தை மனிதனான போதும் தேவனாகவும் இருந்தார். தனது மகிமை போன்ற பண்புகளைக் குறைத்துக் கொண்டு மனிதனாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இடத்தில் வாழ்ந்தார்.