மனுஷர் தங்களைப் புகழ வேண்டும் என்ற நோக்கத்துடனோ, அல்லது சுயநல நோக்கத்துடனோ, நன்மையானக் காரியங்களைச் செய்தால் தேவனிடமிருந்து பாராட்டையோ, பரிசுகளையோ பெற முடியாது. நீங்கள் ஒருவருக்குக் கொடுக்கும் போது அந்தரங்கமாக வலதுகை செய்கிறதை இடது கை அறியாததுபோலக் கொடுக்க வேண்டும். அப்பொழுது அந்தரங்கத்தில் பார்க்கிற பிதா வெளியரங்கமாய் உங்களுக்குப் பலன் அளிப்பார் என்று இயேசு கூறுகிறார். ஆண்டவருக்கு மகிமை செலுத்துகிறோம் என்ற போர்வையில் தங்களுக்கே மகிமையைத் தேடிக்கொள்ளுகிறவர்கள் மாய்மாலக்காரர்கள் என்று அழைக்கப் படுகிறார்கள்.