இயேசு பிசாசுகளைத் துரத்தியதைப் பார்த்து பரிச்சேயர் பெயல்செபூலினால் துரத்துகிறார் என்று கூறும் பொழுது, இயேசு “எந்த பாவமும், எந்த தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும். ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை” என்றார். இந்தக் காலத்திலும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டு செயல்படுவதை, அந்நிய மொழியில் பேசுவதை, அற்புதங்கள் செய்வதை மறுத்துப் பேசுவதும், அதற்கு எதிராகப் பேசுவதும் அதை பிசாசின் செயல் என்று கூறுவதும் நடக்கின்றன. இது ஆவியானவருக்கு எதிராகப் பேசுவதாகும். இப்பாவத்திற்கு மன்னிப்பு கிடையாது. என்றென்றும் நித்திய தண்டனை உண்டு – மாற் 3:29 ஆவியானவரைக் குறித்துப் பேசுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஆவியானவரின் குரலை எதிர்த்துப் புறக்கணிப்பவர்கள், அவர்களை பாவமன்னிப்புக்கு வழிநடத்தும் ஒரே தெய்வீக சக்தியிலிருந்து தங்களை விலக்கிக் கொள்கிறார்கள். ஆவியானவரை எதிர்க்கும் போது ஆவியின் அக்கினியை அது அவித்துப் போடும். 1தீமோ 5:19 அதனால் இருதயம் கடினமாகிறது எபி – 3:8-13