Menu Close

மேய்ப்பர்களுக்கு நற்செய்தி

இயேசுவின் நற்செய்தியைத் தெரிவிக்க தேவன் முதலாவது தெரிந்து கொண்டவர்கள் வயலில் இருந்த மேய்ப்பர்கள். அவர்கள் மந்தையைக் காத்துக் கொண்டிருக்கையில் தேவதூதன் அவர்களுக்கு முன் தோன்றினான். கர்த்தருடைய மகிமை அவர்களைச் சுற்றிலும் பிரகாசித்தது. அவர்கள் மிகவும் பயந்தார்கள்.

  • லூக் 2:10-12 “தேவதூதன் அவர்களை நோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்.”
  • ”இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.”
  • “பிள்ளையை துணிகளில் சுற்றி, முன்னணியிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்”

உடனே பரமசேனையின் திரள் அந்த தூதனுடன் தோன்றி தேவனுக்கு

மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி தேவனைத் துதித்தார்கள். லூக் 2:13-14  தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்திற்குப் போனபின்பு உடனே மேய்ப்பர்கள் பெத்லகேமுக்கு விரைந்து வந்து முன்னணையில் கிடத்தியிருந்த பிள்ளையைக் கண்டு மகிழ்ந்து களிகூர்ந்தார்கள். மேய்ப்பர்கள் தங்களுக்குச் சொல்லப்பட்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி துதித்துக் கொண்டு திரும்பிப் போனார்கள்.- லூக் – 2:20.

Related Posts