Menu Close

கானா ஊரில் நடந்த அற்புதம்

இயேசுவும் சீடர்களும் கானாவூரில் ஒரு கல்யாணத்திற்கு அழைக்கப் பட்டிருந்தனர். இயேசுவின் தாயும் அங்கு சென்றிருந்தார்கள். அங்கு திராட்சரசம் குறைவுபட்டபோது இயேசுவின் தாய்   இயேசுவின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்கள். அதற்கு இயேசு “ஸ்திரீயே, உனக்கும் எனக்கும் என்ன, என்வேளை இன்னும் வரவில்லை.” என்றார். மரியாள் வேலைக்காரரை நோக்கி “அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதன்படி செய்யுங்கள்” என்றார். இயேசு வேலைக்காரரை நோக்கி அங்கிருந்த ஜாடிகளில் தண்ணீரை நிரப்புங்கள் என்றார். அவர்கள் ஜாடிகளை நிரப்பினர். பின் அதை பந்தி விசாரிப்புக்காரனிடத்தில்  கொண்டு போகச் சொன்னார். அவர்களும் அதன்படி செய்தனர். அந்த திராட்சரசம் முந்திக்கொடுத்த திராட்சரசத்தைவிட ருசி கூடியதாக இருந்தது. இவ்வாறு தனது முதலாம் அற்புதத்தை கானாவூர் கல்யாண வீட்டில் செய்து அந்த வீட்டின் தேவையை நிறைவு செய்தார். மணம், சுவை, நிறம் இல்லாத தண்ணீரை மணமுள்ள, சுவையுள்ள, நிறமுள்ள திராட்சரசமாக மாற்றினார். வேலைக்காரர் களும் கேள்வி கேட்காமல் உடனடியாகக் கீழ்படிந்தனர். முற்றிலும் கீழ்படிந்தனர்.
வெறும் தண்ணீரைத் திராட்சரசமாக்கியதன் விளைவாக அற்பமான காரியங்களைக் கொண்டு அதிசயமான காரியங்களைச் செய்யும் திறமையான சிற்பி இயேசு என அறியலாம்.. திருமணம் செய்வதை இயேசு அற்பமாக எண்ணியிருந்தால் கானாவூர் கல்யாண வீட்டிற்குச் சென்றிருக்க மாட்டார் – யோ 2:1—11

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவென்றால்: மணம், நிறம், சுவை இல்லாமலிருந்த தண்ணீரை சுவையுள்ளதாக, மணமுள்ளதாக நிறமுள்ளதாக   இயேசு மாற்றியதைப் போல, படிப்பில்லாத, அழகில்லாத, திறமையில்லாத நம்மையும் ஞானத்தையும், அறிவையும், திறமையையும் கொடுத்து இயேசுவால் மாற்ற முடியும்.    

Related Posts