Menu Close

மீன் வலையை பற்றிய உவமை – மத்தேயு 13 : 47 – 50

பரலோக ராஜ்ஜியத்தை கடலிளிருந்து சகலவிதமான மீன்களையும் வாரிக்
கொள்ளும் வலைக்கு ஒப்பாயிருப்பதாக இயேசு கூறுகிறார். வலையில் இழுக்கப்பட்ட
மீன்களை நல்லவைகள் வேண்டாதவைகள் என்று பிரித்தெடுப்பார்கள். நல்லவைகளை கூடையில் சேர்ப்பார்கள். வேண்டாதவைகளைக் கடலில் தூக்கி எரிந்து விடுவார்கள்.

அதுபோல அக்கிரமக்காரர்கள் அனைவரும் முதலில் பிரித்தெடுக்கப் படுகிறார்கள். நீதிமான்கள் இரண்டாவதாக கூட்டிச் சேர்க்கப்படுகிறார்கள். (வெளி 19 : 11 முதல் 20 : 4 வரை)

இது உபத்திரவ காலத்தின் முடிவில் நடைபெறும். (மத் 24 : 29 31 வெளி 19 : 11 – 20 : 4)
அக்கிரமக்காரர் நரகத்தில் தள்ளப்படுவர். இதிலிருந்து தேவனுடைய ராஜ்ஜியத்தில் இருக்கும் அனைவருமே தேவனுடைய உண்மையான பிள்ளைகள் அல்ல என்பதை இயேசு வற்புறுத்திக் கூறுகிறார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில் தேவனது நியாயத்தீர்ப்புக்கு முன் நிறுத்தப் படுவோம் என்ற பயமும், பக்தியும் நமக்கு வேண்டும். நாம் மனந்திரும்பி இயேசுவை ஏற்றுக் கொண்டு பரலோகம் செல்ல ஆயத்தப்படுவோம்

Related Posts