Menu Close

கனிகொடாத அத்திமரம் – லூக்கா 13:6–9

பிலாத்து சில கலிலேயருடைய இரத்தத்தை அவர்களுடைய பலிகளோடு கலந்திருக்
கிறான் என்று சிலர் இயேசுவிடம் கூறினார். இதைக்கேட்ட இயேசு இந்த உவமையைக்  கூறினார். ஒருவன் தன் திராட்சத் தோட்டத்தில் ஒரு அத்திமரத்தை நட்டிருந்தான் என்றார். பொதுவாக திராட்சத்தோட்டத்தில் மரம் நடுவதில்லை. ஆனால் இதில் மரம் நடப்பட்டிருப்

பதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அவ்வாறே தேவன் விசுவாசிகளாகிய நம்மை மற்றவர்களின்
நடுவில் வாழும்படி வைத்திருக்கிறார். தோட்டத்தின் சொந்தக்காரர் மூன்று வருஷமாய் அந்த மரத்தில் கனி காய்க்காததால் அதை வெட்டிப்போடு என்று தன் தோட்டக்காரனிடம் கூறுகிறான். ஆனால் அந்த தோட்டக்காரன் சிறிதுகாலம் தவணை கொடுக்கும்படி கேட்டுக்கொண்டான்.

நமக்காக இயேசு பிதாவாகிய தேவனிடம் வேண்டுதல் செய்கிறபடியால் நாம் இன்றும் இருக்கிறோம். இதை உணர்ந்து இனியாகிலும் நற்செயல்கள் செய்வதிலும் ஆவியின் கனி நம்மில் காணப்படுவதிலும், ஆத்துமா ஆதாயம் செய்வதிலும் கவனமாக இருப்போமாக. இல்லாவிடில் கனிகொடாத மரம் வெட்டப்பட்டு தீயினால் எரிக்கப்படுவதுபோல நரகத்திற்குச் செல்ல நேரிடும் – மத்தேயு 3 : 10

அத்திப்பழக்காலமாயிருந்தும் வழியோரம் நின்றபடி அடர்ந்த இலைகளால் தனக்குள் கனி  இருப்பது போல் காட்டிக்கொண்டு மக்களை ஏமாற்றி வந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். கனியற்ற வாழ்வை கர்த்தர் வெறுக்கிறார் என்பதைக் காட்டினார் – யோவான் 15 : 2  மாயமான வாழ்வை கர்த்தர் அறவே வெறுக்கிறார் – மத்தேயு 23 : 14, 15, 16

இந்த அத்திமரத்தின் உவமை முக்கியமாக இஸ்ரவேலரைக் குறிக்கிறது – ஓசி 9 : 10,
யோவே 1 : 7 இயேசுவை விசுவாசிப்பதாகக் கூறிவிட்டு பாவத்தை விட்டு விலகாதிருக் கிறவர்களுக்கு இது பொருந்தும். ஒவ்வொருவருக்கும் மனந்திரும்புவதற்குப் போதுமான வாய்ப்பளிக்கிறார். அவர் என்றென்றைக்கும் பாவத்தைப் பொறுத்துக் கொண்டிருக்க மாட்டார். தேவனுடைய கிருபை எடுத்துக் கொள்ளப்படும் காலம் வரும். அப்பொழுது மனந்திரும்பாத பாவிகள் இரக்கமின்றித் தண்டிக்கப் படுவார்கள் – லூக்கா 20 : 16, 21 : 20, 24

இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடம் என்னவெனில்  தேவனுக்குக் கனி  கொடுக்கிறவர்களாகக் நாம் எப்பொழுதும் திகழ வேண்டும்.

Related Posts