Menu Close

இயேசுவும், சாத்தானும்

  • இயேசு ஞானஸ்நானம் பெற்ற பின் பிசாசினால் சோதிக்கப்படுவதற்கு ஆவியானவரால் வனாந்தரத்திற்குக் கொண்டு போகப் பட்டார். அங்கு அவர் ஒன்றும் புசியாமல் நாற்பது நாட்கள் இருந்தார். அப்போது அவருக்குப் பசி உண்டாயிற்று. ஏவாளை வஞ்சித்தது போல இதுவே நல்ல சந்தர்ப்பம் என சாத்தான் நினைத்தான். குழந்தையாயிருக்கும்போது ஏரோது ராஜாவின் மூலம் கொல்ல நினைத்தான். ஆனால் தேவன் குழந்தையையும் பெற்றோரையும் எகிப்துக்கு அனுப்பி விட்டதால் அவனது முயற்சியில் தோல்வியுற்றான். ஆனால் இப்போது இயேசுவின் பசியை அறிந்து முதன்முதலில்
  • மத் 4:3 “நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்” என்றான்.
  • இயேசு தமது வல்லமையைப் பயன்படுத்தி கற்களை அப்பங்களாக மாற்றி தன் பசியைத் தீர்த்துக்கொள்வார் என்று நினைத்தான். ஆனால் சாத்தானின் ஆலோசனைக்கு இயேசு செவி கொடுக்காமல்,
  • மத் 4:4 “மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே” என்றார்.

இரண்டாவதாக பிசாசு பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின் மேல் அவரை நிறுத்தி,

  • மத் 4:6 “நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதே எழுதியிருக்கிறதே என்றான்.” அதற்கும் இயேசு இணங்காமல் வார்த்தையினால்,
  • மத் 4:7 “உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்றும் எழுதியிருக்கிறதே” என்றார்.
  • சாத்தான் இன்னும் அவரை விடாமல் மூன்றாவது முறையாக
    மத் 4:8,9 “சாத்தான் இயேசுவை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்ஜியங்களையும் அவைகளின் மகிமையையும் இயேசுவுக்குக் காண்பித்து:”
  • “நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்து கொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன் என்று சொன்னான்.”
  • அப்பொழுது இயேசு உதாரத்துவமாக, மத் 4:10 “அப்பாலே போ சாத்தானே; உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனை செய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.”

Related Posts