Menu Close

மற்றவர்களை நியாயந்தீர்த்தல் பற்றி இயேசு: மத்தேயு 7:1-6 லூக்கா 6:43-45

முதலாவது நீங்கள் குற்றவாளிகளில்லை என்று ஆன பின் தான் மற்றவர்களை குற்றவாளிகளென்று கூறமுடியும் என இயேசு கூறுகிறார். தனது சொந்தக் குறைகளையும், குற்றங்களையும் நினையாமல் மற்றவர்களைப் பார்த்து குற்றம் சாட்டும் மனப்பான்மையை இயேசு கண்டிக்கிறார். விசுவாசிகள் மற்றவர்களைப் பரிசோதித்து அவர்களின் நடத்தையை சீர்படுத்த முயற்சிப்பதற்கு முன் தன்னைப் பரிசோதித்து தன் குற்றங்களைத் திருத்த வேண்டும் என்று இயேசு கூறுகிறார்.

இரண்டாவதாக நாம் மற்றவர்களை எவ்வாறு நியாயந்தீர்க்கப்படுகிறோமோ, அதற்கேற்றபடி நாமும் தேவனால் நியாயந்தீர்க்கப்படுவோம். மூன்றாவதாக இயேசு கூறும் காரணம் நம்முடைய கண்ணில் உத்திரம் இருக்கும் பொழுது நம்மால் தெளிவாக பார்க்க இயலாது. அப்படியிருக்கும் பொழுது நம் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எப்படி நீக்க முடியும் என்று இயேசு கூறுகிறார்.

தேவ சமூகத்தில் கதறி அழுது நம்முடைய உத்திரத்தை நீக்கியபின்பு (சங் 51:9—13, 66:18 நீதி 28:13) நம்முடைய பார்வை தெளிவாகி விடுவதினால் அதன்பின் நம் சகோதரனுடைய கண்ணில் உள்ள துரும்பை நீக்க முயற்சி செய்யலாம். நன்மை தீமையைப் பகுத்தறியவும் – எபி 5:14 ஆராய்ந்து நிதானிக்கவும் 1கொரி 2:15 சபை நடவடிக்கையாகத் தண்டனை கொடுக்கவும் 1கொரி 5:1-13 நாம் அழைக்கப் பட்டுள்ளோம்.

நாய், பன்றி ஆகியவைகளுடன் ஒப்பிடப்படும் மனிதர்கள் தேவனை அறியாதவர்கள் அல்ல, தேவனை அறிந்தும், சுவிஷேசத்தைக் கேட்டும் இயேசுவை ஏற்றுக்கொள்ளாதவர்களைக் குறிக்கிறது. தான் சாப்பிட்டதை கக்கி வெளியேற்றியதை மீண்டும் சாப்பிடும் தன்மையுள்ள நாய்கள் பின்மார்க்கத்தின் உருவகமானபடியால் அசுத்தமான மிருகமாகச் சொல்லப்படுகிறது. அதனால் தான் கிறிஸ்து “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது நல்லதல்ல” என்றார்.

பன்றிகளுக்கு முன்பாக ஏன் முத்தைப் போடக்கூடாது என்றால் பன்றி முத்தைப் பார்த்தவுடன் அது தனக்கு உணவு என்று சாப்பிடப் பார்க்கும். கடினமாக இருப்பதினால் உள்ளே ஏதேனும் பருப்பு இருக்கலாம் என்று உடைக்க முயற்சி செய்யும். முத்து உடையாது. அதனால் கோபத்தில் முத்தைப் போட்டவர்களைத் தாக்க முயற்சிக்கும் என்று இயேசு விளக்குகிறார்..

ஆனால் ஒருவன் நரகத்திற்குச் செல்வான் என்று நியாயந்தீர்ப்பது நாம் செய்யத்தகாததாகும். அவன் இறுதியில் மனந்திரும்ப வாய்ப்புண்டு. மேலும் ஒரு தவற்றைச் செய்கிறவன் அதைச் செய்யும் மற்றொருவனை குற்றஞ்சாட்டுவது மாய்மாலமாகும். இவ்வுலகில் அரசாங்கத்தில் நீதிபதியாக நியமிக்கப் படுகிறவர்கள் வழக்கின் முடிவில் குற்றவாளிகளுக்கு தீர்ப்பு சொல்வது தவறல்ல. அது அவர்கள் கடமை. மேலும் நமக்கெதிராகச் செய்யும் குற்றங்களை மட்டுமே மன்னிக்க நமக்கு அதிகாரமுண்டு. மற்றவர்களுக்கும், நாட்டுக்கும், சமுதாயத்துக்கும்,, தேவனுக்கும் எதிராகச் செய்யும் குற்றங்களை மன்னிக்க நமக்கு அதிகாரமில்லை – மத் 12:31,32

Related Posts