Menu Close

இரண்டு குமாரர்கள் பற்றிய உவமை – மத்தேயு 18 : 12 – 14 லூக்கா 15 : 4 – 6

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். அவர்களிடம் தகப்பன் தன் திராட்சத்தொட்டத்துக்குச் சென்று வேலை பார்க்கச் சொன்னான். மூத்தவன் மாட்டேன் என்று சொல்லி பின் மனஸ்தாபப்பட்டுப் போனான். இளையவன் போகிறேன் என்று சொல்லியும் போகவில்லை. இவர்களில் யார் தன் தகப்பனின் சித்தப்படி செய்தவன் என்று இயேசு கேட்டதற்கு அவர்கள் மூத்தவன் என்று பதிலளித்தனர். இயேசு அவர்களிடம் “நீதிமார்க்கமாய் வந்த யோவான்ஸ்னானகனை நீங்கள் விசுவாசிக்கவில்லை ஆயக்காரரும் வேசிகளுமே விசுவாசித்தார்கள். அதேபோல ஆயக்காரரும், வேசிகளுமே உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்ஜியத்தில் பிரவேசிக்கிறார்கள் என்றார்.”

தான் ஒரு பாவி என்று உணராமலும், இயேசுவிடம் பாவமன்னிப்பைப் பெற்றுக் கொள்ளாமலும் இருக்கின்ற கிறிஸ்தவர்கள் பரலோக அரசிற்குள் செல்ல இயலாது – யோவான் 3 : 3 — 5 பல கொடிய பாவங்கள் செய்தபோதிலும் அவற்றிலிருந்து மனந்திரும்பி இயேசுவிடம் பாவமன்னிப்பைப் பெற்றுக்கொண்டவர்கள் பரலோக ராஜ்ஜியத்திற்குள் பிரவேசிப்பர்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் தகப்பனின் சித்தம் செய்த மகனைப் போல நமது தகப்பனாகிய இயேசுவின் சித்தத்தின்படி செயல்படுவோம்

Related Posts