Menu Close

சாத்தானின் சோதனையில் உள்ள சத்திய உண்மைகள்

  1. ஆவியானவர் இயேசுவை வனாந்தரத்திற்குக் கொண்டு போனார் என்பதிலிருந்து ஆவியானவர் ஒரு நபர் என்பதைக் காண்கிறோம்.
  2. இயேசு மனிதனாக வந்தபடியால் அவரும் சோதனைக்குட்படுத்தப்பட்டார் – எபி 2:18
  3. ஆவியானவர் சிலவேளைகளில் நாம் சோதிக்கப்படும்படி வழிநடத்துவார். நம்மைப் பொன்னாக விளங்கச் செய்வதற்காகவும் – யோபு 23:10, சத்துருவைத் தோற்கடிக்க நமக்கு வாய்ப்புத் தருவதற்காகவும் – லூக் 10:19, யாக் 4:7, நம்மால் தாங்கக்கூடிய சோதனைகளை அனுமதிக்கிறார் – 1கொரி 10:13
  4. முதலாவது கற்கள் அப்பங்களாகும்படி சொல்வது தமது தேவைக்காகவும், மாம்ச இச்சையை நிறைவேற்றுவதற்காகவும் அற்புதம் செய்யத் தூண்டுவதாகும் – 1யோ 2:16 இச்சோதனையில் இயேசு வேதவசனத்தால் வெற்றிகொண்டார்.
  5. இரண்டாவதாக மேலிருந்து கீழேவிழக் கூறுகிறான். நாம் தவறுதலாக விழும் சமயங்களில் தேவன் பாதுகாப்பது உண்மைதான். ஆனால் வேண்டுமென்று உயரத்திலிருந்து குதித்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். இதிலிருந்து தப்புவிக்க இயேசு வேதவசனத்தைத் தான் பயன்படுத்தினார்.
  6. மூன்றாவதாக இயேசுவுக்கு உலகின் மீது அதிகாரம் கொடுப்பதாகக் கூறியது பொய். அதை சாத்தானால் அளிக்க முடியாது. இயேசுவுக்குக் அதைக் கொடுப்பதற்கு சாத்தானுக்கு அருகதையில்லை. மேலும் இயேசு தேவனைத் தவிர மற்றவர்களைத் தொழுதுகொள்வது தவறு என்பதையும் வேதவசனத்தின் மூலம் கூறினார்.
    சாத்தான் தோற்கடிக்கப்பட்டதை அறிந்தவனாய், இயேசுவை விட்டுச் சென்றான். உடனே இயேசுவுக்கு தேவதூதர்கள் பணிவிடைசெய்தனர்.

Related Posts