நம் உள்ளத்திலிருந்து புறப்படுபவைகளாகிய பொல்லாத சிந்தனைகள், விபச்சாரங்கள், வேசித்தனங்கள், கொலைபாதகங்கள், களவுகள், பொருளாசைகள், துஷ்டத் தனங்கள், கபடு, காமவிகாரம், வன்கண், தூஷணம், பெருமை, மதிகேடு இவைகளனைத்தும் மனிதனைத் தீட்டுப்படுத்தும். இருதயமானது திருக்குள்ளதும், மகா கேடுள்ளதுமாய் இருக்கிற படியால் அது பாவத்தை சேமித்து வைக்கும் இருப்பிடமாகச் செயல்படுகிறது. ஒருவன் வெளிப்படையாகப் பாவம் செய்வதற்கு முன்பு முதலாவது இருதயத்துக்குள் பாவம் செய்து விடுகிறான். இருதயம் முதலில் அசுத்தப்படுவதால் அதிலிருந்து புறப்படும் செயல்கள் அனைத்தும் அசுத்தமாய்ப் பிறக்கின்றன.