Menu Close

திரளான மீன்களைப் பிடிக்கச் செய்த அற்புதம்: லூக்கா 5:1-11

இயேசு கெனேசரேத் கடலருகே வந்தபோது திரளான ஜனங்கள் வேதவசனத்தைக் கேட்கும்படி நெருங்கினார்கள். அப்பொழுது இயேசு அங்கிருந்த பேதுருவின் படகில் ஏறி ஜனங்களுக்குப் போதகம் பண்ணினார். போதகம் பண்ணி முடித்தபின் ஆழத்தில் தள்ளிக் கொண்டுபோய் வலைகளைப் போடுங்கள்” என்றார். பேதுரு பரம்பரையாக மீன்பிடித்தொழில் செய்துவருபவன். அவனுக்கு இன்னகாலங்களில், இன்ன இடத்தில், எந்த வகை மீன்கள் கிடைக்கும் என்பது அத்துபடி. அப்படிப்பட்ட மனிதன் கூறுவது என்னவென்றால் “ஐயரே, இராமுழுவதும் பிரயாசப்பட்டு விட்டேன். ஒன்றும் கிடைக்கவில்லை. ”ஆனாலும்” உம்முடைய வார்த்தையின்படியே வலையைப் போடுகிறேன்” என்றான். பேதுரு தன் அனுபவ அறிவைப் பொருட்படுத்தாமல் ஆண்டவரின் சொற்களுக்கு மதிப்பளித்து மீண்டும் மீன் பிடிக்க முயற்சித்தார். ஆனால் இயேசு கூறியதைப்போன்று வலைகளைப் போடாமல் ஒரு வலை மட்டும் போட்டான். வலை கிழிந்த்துபோகத்தக்கதாக மிகுதியான மீன்களைப் பிடித்தனர்.
சீமோனின் படகில் இருந்து செய்தியளித்த இயேசு, தமக்குப் படகை அளித்த சீமொனுக்குப் பரிசாக அநேக மீன்களைக் கிடைக்கும்படி செய்தார். கர்த்தருக்கு உதவியவர்கள் பலனடையாமற் போவதில்லை.  தாங்கள் அன்று பிடித்த மீன்களை விற்றுப் பணம் சம்பாதிக்கும் விருப்பத்தை உதறித் தள்ளிவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள். இயேசுவைப் பின்பற்றுவதற்காக இழப்புகளைச் சந்திக்க ஆயத்தமாயிருக்க வேண்டும்.

இதனால் நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில்: கர்த்தருடைய வார்த்தையைக் கேட்டவுடன் பேதுரு எவ்வாறு கீழ்படிந்து திரளான மீன்களைப் பிடித்தானோ அதேபோல் நாமும் இயேசுவின் வார்த்தைக்குக் கீழ்படிந்து ஆசிகளைப் பெற்றுக்கொள்ள கெஞ்சுவோம். பேதுரு தனக்குள்ள படகை இயேசுவுக்குக் கொடுத்தது போல நாமும் நம்மிடம் இருப்பதை சந்தோஷத்துடன் இயேசுவிடம் கொடுக்கும் போது நாம் நினைத்துப் பார்க்கமுடியாத அற்புதங்களைப் பெறுவோம்.

Related Posts