Menu Close

ஓய்வு நாள் பற்றி இயேசு: மத்தேயு 12:1-8 மாற்கு 2:23-28 லூக்கா 6:1-5

ஓய்வுநாள் என்பது மோசேயின் சட்டத்தின்படி வாரத்தின் ஏழாவது நாள். சாதாரண வேலைகள் அனைத்தையும் நிறுத்தி அனைவருக்கும் ஒய்வு கொடுக்கும் நாள். அந்த நாளில் அனைவரும் ஆண்டவரைத் தொழுது கொள்ள வேண்டும் – யாத் 20:10 உபா 5:14 இயேசு ஒருபோதும் ஓய்வுநாளில் ஓய்வெடுக்கும் கொள்கையை ரத்துசெய்து நீக்கிவிடவில்லை. யூதத்தலைவர்கள் ஓய்வுநாளைத் தவறாகப் பயன்படுத்தியதைத் தான் இயேசு கண்டித்தார். மத்  12:1-8 ஓய்வுநாள் ஒவ்வொருவருடைய உடல்நலத்துக்கும், ஆவிக்குரிய நலத்துக்கும் தரப்பட்டுள்ளது என்று இயேசு கூறுகிறார் – மத் 2:27 இந்தக் கற்பனை விலக்கப்பட்டதாகக் வேதாகமத்தில் எங்குமே குறிப்பிடப்படவில்லை.

ஒரு வயலின் வழியாகச் சென்றால் அதின் சில கதிர்களைக் கைகளால் கொய்து உண்பது அந்நாட்டின் வழக்கப்படி சரியானதுதான் – உபா 23:24,25 ஓய்வுநாளில் அவ்வாறு செய்வது தவறு என்பதே பரிச்சேயரின் வாதம் ஆகும். இப்பகுதியில் இதற்கான ஐந்து பதில்களைக் கர்த்தர் கொடுத்துள்ளார். தாவீதும் அவனோடிருந்தவர்களும் பசியாயிருந்த போது கர்த்தருடைய சந்நிதியிலிருந்து எடுக்கப்பட்ட ஆசாரியர் தவிர வேறொருவரும் புசிக்கத்தகாத தேவசமூகத்து அப்பங்களைப் புசித்ததை (1சாமு 21:1-6) இயேசு சுட்டிக்காட்டினார். இந்நிகழ்ச்சியில் தாவீதைக் கர்த்தர் தண்டிக்கவில்லை என்பதையும், சீடர்களைக் குற்றம் சாட்டினால் தாவீதைக் குற்றவாளி என்றும் கூற வேண்டும்  என்றும் உணர்த்தினார். இயேசு சட்டதிட்டங்களை எதிர்த்துப் பேசவில்லை. அவற்றை செயல்படுத்தும்போது இரக்கத்தொடு செயல்பட வேண்டும் என்று எடுத்துரைத்தார். ஓய்வுநாளை நியமித்த கர்த்தர் அந்நாளுக்கென்று மனிதர் ஏற்படுத்திய பாரம்பரியங்களை மாற்றுவதற்கும், நீக்குவதற்கும் அதிகாரம் உடையவராயிருக்கிறார் – கொலோ 1:16

Related Posts