இயேசு உலகத்திற்கு ஒளியாக வந்தார். உலகத்தில் உள்ளவர் அனைவரும் வெளிச்சத்தில் வாசம் பண்ணவே விரும்புவர். ஆனால் பாவத்தால் தாங்கள் இருளில் மூழ்கிக் கிடப்பதை அறியாதிருக்கின்றனர். உலகிலிலுள்ள ஒவ்வொரு மனிதனும் பாவ இருளிலிருந்து ஒளியுள்ள இடத்திற்கு வர வேண்டுமென்றால் அவன் இயேசுவினிடத்தில் மட்டுமே வர வேண்டும். ஏனெனில் அவர் ஒருவரே உலகத்திற்கு ஒளியாக வந்தார். உலகம் முழுவதிலும் பாவ இருளில் இருப்போரை ஒளியின் பிள்ளைகளாக மாற்றுவதற்குரிய வல்லமை இயேசுவினிடத்தில் மட்டுமே இருப்பதால் அவர் உலகத்தின் ஒளியென அழைக்கப்பட்டார். இயேசுவைப் பின்பற்றுபவர்கள் எல்லாரும் பாவமாகிய உலகம், இருள், பிசாசிலிருந்து விடுவிக்கப் படுவார்கள் – 1 யோவான் 1 : 6, 7