இயேசு மலையின் மேலேறி இரவு முழுவதும் தேவனை நோக்கி ஜெபம் பண்ணி
பின் காலையில் தம்முடைய சீஷர்களை அழைத்து அவர்களில் 12 பேர்களைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பெயரிட்டார். அவர்கள் யாரென்றால் பேதுரு என்று பெயரிட்ட சீமோன், அவன் சகோதரனாகிய அந்திரேயா, யாக்கோபு, யோவான், பிலிப்பு, பர்த்தொலொமேயு, மத்தேயு, தோமா, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு, செலோத்தே என்னப்பட்ட சீமோன், யாக்கோபின் சகோதரனாகிய யூதா, துரோகியான யூதாஸ்கோரியோத்து என்பவர்கள்.