மீன் பிடிக்கும் தொழிலிருந்து மனிதரைப் பிடிக்கும் உயர்வான தொழிலுக்கு ஏற்படுத்தப்பட்ட பேதுரு (மத் 4 : 18 – 20) மீண்டும் பழைய தொழிலுக்குச் சென்றார். அவர் கூறினவுடனே தோமா, நாத்தான்வேல், செபெதேயுவின் குமாரர், அவருடைய சீஷரில் வேறு இரண்டு பேர் அனைவரும் தங்கள் அழைப்பை மறந்து தாங்களும் வருவதாகக் கூறி மீன் பிடிக்கச்சென்றனர். இரவு அவர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை. விடியற்காலையில் இயேசு கரையிலே நின்று “பிள்ளைகளே புசிக்கிறதற்கு ஏதாகிலும் உங்களிடத்தில் உண்டா என்றார்” அதற்கு அவர்கள் ஒன்றுமில்லை என்றனர்.
இயேசு அவர்களை நோக்கி படகுக்கு வலதுபுறமாய் வலைகளைப் போடுங்கள், அப்பொழுது உங்களுக்கு மீன்கள் கிடைக்கும் என்றார். அப்படியே அவர்கள் போட்டு திரளான மீன்களைப் பிடித்தனர் முதலில் பேதுருவுக்கு அவர் இயேசு என்று தெரியவில்லை. இயேசுவுக்கு அன்பாயிருந்த சீடன் “அவர் கர்த்தர்” என்று கூறினவுடன் பேதுரு அவரிடம் செல்வதற்கு கடலிலே குதித்தான்.