இந்த வசனத்தில் இயேசு இந்த சிறியரில் ஒருவனுக்கு இடறல் உண்டாக்குகிறவன் எவனோ அவனுடைய கழுத்தில் எந்திரக் கல்லைக் கட்டி அவனை சமுத்திரத்தின் ஆழத்தில் அமிழ்த்துகிறது நலம் என்றார். இதன் விளக்கம் என்னவென்றால் சிறுபிள்ளையையோ, சிறுபிள்ளையைப்போல் களங்கமற்ற சுபாவம் கொண்ட விசுவாசியையோ ஆவிக்குரிய பிரகாரமாக அழித்தால், அதாவது வழிதடுமாறச் செய்தால் அவன் கிறிஸ்துவின் மாபெரும் கோபத்துக்குள்ளாவான் என்பதாகும்.