Menu Close

பெரிய விருந்து பற்றிய உவமை – லூக்கா 14 : 15 – 24

இந்த உவமை இயேசு இஸ்ரவேலரையும் அவர்கள் நற்செய்தியைப் புறக்கணித்த தையும் பற்றி கூறியது. ஆனால் இன்று சபைகளுக்கும் , ஒவ்வொரு விசுவாசிகளுக்கும் இது பொருந்தும். இந்த உவமையின் பொருள் தேவன் பரலோக மகிமையோடு வரப்போகும் உயிர்த்தெழுந்த நாளைப் பற்றியது. அதாவது தமது பரிசுத்தவான்களாகிய மக்களை பரலோகத்திற்குச் அழைத்துச் செல்ல கிறிஸ்து திரும்பி வரும் நாளைக் குறிப்பதாகும் லூக்கா
14 : 14, 15

விருந்துக்கு சம்மதித்து பின்னால் ஒவ்வொருவரும் சாக்குப்போக்குகள் சொல்லி வராமல் இருந்து விட்டவர்கள், முதலில் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு இரட்சிப்படைந்தவர்கள், பின்னால் கிறிஸ்துவின் மேலும் பரலோக ராஜ்ஜியத்தின் மேலும் அன்பை இழந்து தேவனற்றவர்களாகி விட்டவர்களைக் குறிக்கும். அப்படிப்பட்ட மக்கள் தங்கள் இரகசியங்களை பரலோக காரியங்கள் மீது வைக்கத் தவறியவர்கள் – லூக்கா 14 : 17 – 20 இவர்கள் கிறிஸ்துவின் வருகையை எதிர்நோக்காதவர்கள் கொலோ 3 : 1 – 4  இவர்களுடைய நம்பிக்கையும்,
வாழ்க்கையும் இவ்வுலக காரியங்கள் மீது மையமாக இருக்கின்றன. அவர்கள் மேலான நாட்டையோ, பரலோக ராஜ்ஜியத்தையோ விரும்பவுமில்லை, எதிர்பார்க்கவுமில்லை –
எபி 11 : 16

ஒருவரும் விருந்துக்கு வரவில்லை என்றறிந்த வீட்டெஜமான் கோபமடைந்து ஊழியக்காரனை நோக்கி பட்டணத்தின் தெருக்களிலும், வீதிகளிலும் போய் ஏழைகளையும், ஊனரையும், சப்பாணிகளையும், குருடரையும் கூட்டிவரக் கூறினான். அதன்படி கூட்டி
வந்தனர். மனந்திரும்பும்படியும் நீரினாலும், ஆவியினாலும் பிறக்கும்படியும், நற்செய்தி பணி செய்யும்படியும் கர்த்தர் கொடுத்துள்ள அழைப்பை ஏதேனும் காரணத்தைச் சொல்லி ஏற்றுக்கொள்ளாத அநேகர் இறுதியில் தேவனுடைய அரசிற்குச் செல்லாமல் போக நேரிடும். கிறிஸ்தவரல்லாதவர்கள் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு ஆவியில் அனலுள்ளவர்களாக நற்பணி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தேவனுடைய அரசிற்குச் செல்வர்.

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் இயேசுவால் அழைக்கப்பட்ட, தெரிந்து கொள்ளப்பட்ட நாம் தேவன் நமக்கு வைத்திருக்கும்  இலட்சியங்களை நோக்கி செயல்பட்டு தேவ ஆசிகளைப் பெறுவோம்.

Related Posts