இயேசு யோவானில் “நானே” என்று கூறிய 7 வார்த்தைகள் உள்ளன. இதில் “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என்று கூறியதன் விளக்கத் தைப் பார்க்கலாம். கிறிஸ்தவ வாழ்க்கையின் ஆரம்பமே சிலுவையில் அடிக் கப்பட்ட ஆட்டுகுட்டியானவரை பஸ்காவாக ஏற்றுக் கொள்வதில் தான் ஆரம்பமா கிறது. இயேசு உலகத் தோற்றத்திற்கு முன்பாகவே குறிக்கப்பட்டவர் என்று 1 பேதுரு 1 20ல் பேதுருவும், உலகத்தோற்றத்திற்கு முன் அடிக்கப்பட்ட ஆட்டுக்கு ட்டியானவரென்று வெளிப்படுத்தல் 13 : 8ல் யோவானும் கூறினார். பலிக்காகக் கொடுக்கப்படுகிற ஆட்டுக்குட்டி பழுதற்றதாக இருக்க வேண்டும் என்று யாத்திரா கமம் 12 : 3ல் கூறப்பட்டுள்ளது. நம்முடைய இயேசுவும் பழுதற்றவரென 1பேதுரு 1 : 19ல் பேதுரு கூறினார். பஸ்கா ஆட்டுக்குட்டியானது இஸ்ரவேலரின் மீட்புக்காக அடிக்கப்பட்டது. இயேசு மனுகுலத்தை பாவ சாபத்திலிருந்து மீட்க தன் ஜீவனைக் கொடுத்தார் (மத்தேயு 20 : 28) கர்த்தர் எகிப்தில் நிலைக்கால்களில் பூசப்பட்ட இரத்தத்தைக் கண்டு அந்த வீட்டிலுள்ளவர்களை அழிக்காமல் கடந்து போவேன் என்று கூறினார். அதேபோல் கர்த்தர் அவரது ஒரே பேரான இயேசுவின் இரத்தத்தைக் கண்டு தனது அடைக்கலத்தில் மறைத்துக் கொள்வார் (சங்கீதம் 91 :1) இயேசு மெய்யாகவே உயிர்த்தெழுத்து இன்றைக்கும் உயிரோடிருக்கிறார் ஏனென்றால் இயேசு,
வெளிப்படுத்தல் 1 : 18 “மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன், ஆமென்; நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” என்றும்
எபிரேயர் 2 : 14ல் “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும்,”
1 கொரிந்தியர் 15 : 55ல் “மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே?”
என்று வெற்றி முழக்கம் இட்டதினால் ரோம அரசாங்கம் குற்றமில்லாத இயேசுவு க்குப் பொய் சாட்சிகளை ஏற்படுத்தி (மத்தேயு 26 : 61) பகலில் கூட்ட வேண்டிய ஆலோசனை சங்கத்தை இரவில் கூட்டி, பிரதான ஆசாரியன் இயேசுவை ஆணை யிட வைத்து, அந்த ஆணையைக் கொண்டு அநியாயமாய்த் தீர்ப்பிட்டு (மத்தேயு 26 63), நீதிமன்ற அறையில் கூடித் தீர்ப்பிடாமல், பிரதான ஆசாரியனின் வீட்டில் கூடி அநியாயமாய்த் தீர்ப்பிட்டனர். பாவிகள் எல்லாம் சேர்ந்து இயேசுவை பாடுகளுக்குட்படுத்தினர். மதவாதிகள், மூப்பர்கள், ஆலோசனை சங்கத்தினர் அனைவரும் இயேசுவை பிலாத்திடம் ஒப்படைத்தனர் (மாற்கு 15 : 1).ஜனங்கள் இயேசுவை இகழ்ந்தனர், அவமதித்தனர், கேலியும் பரிகாசமும் செய்தனர் (மத்தேயு 27: 31, 40, 41) இயேசுவின் அருகில் அறையப்பட்ட கள்ளன் கூட இயேசுவை நிந்தித்தான் (லூக்கா 23: 39). பிரதான ஆசாரியன் இயேசுவின் மேல் அநேக குற்றங்களைச் சுமத்தினான் (மாற்கு 15 :3 லூக்கா 23 35) அதிகாரிகளும் இகழ்த்தனர். உலகம் அவரை பகைத்தது (யோவான் 15 :18).
இயேசுவின் கூடவே இருந்த யூதாஸ் 30 வெள்ளிக்காசுக்காக இயேசுவை காட்டிக் கொடுத்தான் (லூக்கா 22 :47). பிலாத்து இயேசுவை விடுவிக்க மனதாயிருந்தும் விடுவிக்கவில்லை (லூக்கா 23 :20, 24). ஏரோது போர் சேவகர்களோடு இயேசுவை நிந்தித்தான் (லூக்கா 23: 11). நீ தேவனுடைய குமாரனேயானால் சிலுவையிலி ருந்து இறங்கி வா என்றனர். அப்பொழுது இயேசு இறங்கி வரவில்லை. மத்தேயு 27: 40 இவர்களனைவரும் கடைசியாக இயேசுவை சிலுவை மரணத்திற்கு ஒப்புக் கொடுத்தனர். இயேசு உயிரோடு இருந்தபோது அவருடனே கூட இருந்த ஒருவர் கூட அந்த சமயத்தில் அவரோடு கூட இல்லையென மத்தேயு 28, மாற்கு 16, லூக்கா 24, யோவான் 20, 21 அதிகாரங்கள் கூறுகிறது. நம் எல்லோருடைய பாவங்களையும் சுமந்து கொண்டு தேவ ஆட்டுக்குட்டியானவரான இயேசு தன் னையே பலியாகத் தானே ஒப்புக்கொடுத்தார். வெள்ளியன்று காலை ஒன்பது மணிக்கு இயேசுவை சிலுவையிலறைந்தனர். மாலை மூன்று மணி வரை ஆறு மணி நேரங்கள் சிலுவையில் தொங்கி தன் ஜீவனை ஒப்புக் கொடுத்தார்.
மறுநாள் ஓய்வு நாள் ஆதலால் ஆறு மணிக்குள்ளாக அரிமத்தியா யோசேப்பு இயேசுவின் உடலைக் கேட்டு வாங்கி, நிக்கோதேமு கொண்டு வந்த நூறு ராத் தல் வெள்ளைப் போளத்தையும், கரிய போளத்தையும், இயேசுவின் உடலில் பூசி, அவரது உடலை யூத முறைப்படி மெல்லிய துப்பட்டியில் சேலைகளால் சுற்றி கட்டி கல்லறையில் வைத்தனர் (யோவான் 19:39,40). ஓய்வுநாளுக்குப் பின் சடல த்திற்கு சுகந்தவர்க்கத்தை இட விலையுயர்ந்த பொருட்களை மகதலேனா மரியா ளும், யாக்கோபின் தாயாகிய மரியாளும் ஆயத்தம் செய்து கொண்டு சென்றனர் (மாற்கு 16 : 1, லூக்கா 23 : 56). ஆனால் அங்கு இயேசு இல்லை. இயேசு உயிரோ டெழுந்து விட்டார் என்ற செய்தியை தேவதூதர் மூலம் கல்லறைக்குச் சென்ற பெண்கள் கேட்டவுடன் சந்தோஷத்தில் ஆழ்ந்தனர். இந்த நற்செய்தியை சீஷர்க ளிடம் போய் அறிவித்தவுடன் அவர்களும் பரவசப் பட்டனர். எத்தனையோ மத ஸ்தாபகர்கள், ராஜாக்கள், நபிகள், புத்தர் இவர்களுடைய கல்லறைகள் எல்லாம் இன்றைக்கும் மூடியே இருக்கின்றன. ஆனால் இயேசு கிறிஸ்துவின் கல்லறை மட்டும் திறந்தே இருக்கிறது.
இதே போல் எந்த மதத்திலும் எந்த கடவுளும் உயிரோடு வந்ததை நாம் பார்க்க முடியாது. ரோம அரசாங்கம் இயேசுவின் கல்லறைக்கு முத்திரை வைத்திருந்த னர். ஆனால் அந்த முத்திரையால் இயேசு உயிரோடு எழும்புவதை தடுக்க முடிய வில்லை. இயேசு தானே தன்னைச் சுற்றி இருந்த துணிகளைக் கழற்றி கீழே வைத்து, மூடி இருந்த கல் அகற்றப்படாமலே முதற்பலனாக வெளியே வந்தார். பிசாசாலும் அவருடைய உயிர்த்தெழுதலைத் தடுக்க முடியவில்லை. இயேசு தான் சொன்னபடியே உயிரோடெழுந்தார். திறந்த கல்லறை நமக்கு எதைக் காட் டுகிறது என்றால் ஒரே ஒரு தேவகுமாரன், ஒரே ஒரு இரட்சகர், இயேசு என்ற நாமம் தரிக்கப்பட்டவர், வானத்திலிருந்து பூமிக்கு இறங்கி வந்தவர், பாவமே செய் யாதவர், நீதி உள்ளவர், விடுதலை தரக்கூடியவர், ஒரே ஒருவரே. அவர் தான் இயேசுவாகிய கிறிஸ்து. இயேசுவாகிய கிறிஸ்து உயிரோடெழுந்து ஜீவாதிபதி யாகவும் ஜீவனுள்ள தேவனாகவும் இருக்கிறார்.
2) இயேசுவால் உயிர் பெற செய்தவர்கள்:
லாசரு (யோவான் 11 : 1 – 45)
இயேசுவுக்கு மிகவும் அன்பான ஒரு குடும்பத்திலுள்ள மிகவும் நேசித்த மார்த் தாள், மரியாளின் சகோதரன் மிகவும் வியாதியாய் இருந்தான். மார்த்தாளும் மரியாளும் இயேசுவை அங்கே வரச் சொல்லி சொல்லி விடாமல், வியாதியாயி ருக்கிற செய்தியை மட்டும் ஒரு ஆள் மூலம் இயேசுவுக்குச் சொல்லி அனுப்பி னர். ஏனெனில் என்ன செய்ய வேண்டும் என்பதை அவரே தீர்மானிப்பார் என்ப தால். இயேசு லாசரு உயிரோடிருக்கும் போது அவனை மிகவும் நேசித்தார். ஆனாலும் இப்போது அவனை மரிக்கும்படியாக விட்டு விடுகிறார். அதற்குக் காரணம் அந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாக இராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்காகவும், இயேசுவின் நாமம் இதன் மூலம் மகிமைப்பட வேண்டு மென்பதும் பிதாவின் திட்டமாக இருந்தபடியால் லாசருவை மரணத்துக்குட் படுத்தினார்.
இயேசு மார்த்தாள் மரியாள் சொல்லி அனுப்பிய செய்தியை கேட்ட பின்னும் இரண்டு நாள் அங்கே போகாமல் தாமதப் படுத்தினார். இரண்டு நாட்கள் கழித்து இயேசு சீடர்களைப் பார்த்து லாசரு நித்திரையடைந்தி ருக்கிறான் நான் அவனை எழுப்பப் போகிறேன் என்று முன்கூட்டியே தான் நடத்தப் போவதைக் கூறினார். இயேசு அந்த இடத்திற்குச் சென்றபோது லாசருவை கல்லறையில் வைத்து நான்கு நாளாயிற்று என்று அறிந்து கொண்டார் இயேசுவை பார்த்தவுடன் மார்த்தாளும், மரியாளும் அங்குள் ளவர்களும் அழுதனர். மார்த்தாளும், மரியாளும் இயேசுவிடம் “நீர் இங்கே இருந்தீரானால் என் சகோதரன் மரித்தி ருக்க மாட்டான்” என்றனர். அவர்களைப் பார்த்து இயேசுவும் கண்ணீர் விட்டார். அதன்பின் இயேசு அவர்களை பார்த்து,
யோவான் 11 : 25 “இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;” என்றார்.
இயேசு அவர்களைப் பார்த்து லாசருவை எங்கே வைத்தீர்கள் என்று கேட்டு, அங்கு சென்று கல்லறையை அடைத்திருந்த கல்லை எடுத்துப் போடச் சொன் னார். அவர்கள் எடுத்துப் போட்டவுடன் பிதாவை நோக்கி ஜெபம் பண்ணி இயேசு “லாசருவே வெளியே வா” என்று உரத்த சத்தமாய் கூப்பிட்டார். லாசரு கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்த நிலையில், முகம் சீலையால் சுற்றப்பட்டிருந்த நிலையில் வெளியே வந்தான். இயேசு அவனுடைய கட்டை அவிழ்த்து விடச் சொல்லி, அவர்கள் அவிழ்த்து விட்டனர். யூதர்களில் அனேகர் இந்த அற்புதத்தைப் பார்த்து விசுவாசம் வைத்தனர். இயேசு பெத்தானியாவுக்கு அடுத்த முறை வந்தபோது உயி ரோடெழுந்த லாசருவும் இயேசுவோடு பந்தியிருந்தான் (யோவான்12 : 2, 9).
யவீருவின் மகள்: லூக்கா 7 : 11 – 15
ஜெபஆலயத் தலைவனின் மகள் மரண அவஸ்தையாய் இருக்கும் போது இயே சுவை அந்த வீட்டுக்குக் கூட்டிச் சென்றனர் இயேசு அங்கு செல்வதற்கு முன்பே அந்த பெண் இறந்துவிட்டாள் என்ற செய்தி வந்தது. இயேசு ஜெப ஆலயத் தலை வனைப் பார்த்து “பயப்படாதே விசுவாசமுள்ளவனாய் இரு, அப்பொழுது அவள் இரட்சிக்கப்படுவாள்” என்றார். இயேசு மரணம் அடைந்த வீட்டுக்குள் போய், மர ணம் அடைந்த பிள்ளையின் கையைப் பிடித்து “பிள்ளையே எழுந்திரு” என்றார். அப்பொழுது அந்தப் பிள்ளையின் உயிர் திரும்ப வந்தது.
நாயீன் ஊர் விதவையின் மகன்:
இயேசு தன் சீஷர்களுடனும், அனேக திரளான ஜனங்களுடனும் நாயீன் ஊருக் குள் நுழைவதற்கு முன் ஒரு விதவையின் ஒரே மகன் இறந்து போன உடலைப் பாடையில் வைத்து கொண்டு வந்து கொண்டிருந்தனர். இயேசு அந்த விதவைப் பெண்ணைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி, “அழாதே” என்று சொல்லிக் கிட்டப் போய் பாடையைத் தொட்டார். “வாலிபனே எழுந்திரு” என்றார். வாலிபன் எழுந்து உட்கார்ந்தான். வேதத்தில் ஒரு விதவையின் மகன் எலியாவினாலும், சூனேமி யாளின் மகன் எலிசாவினாலும், தொற்காள் பேதுருவினாலும், ஐந்திகு பவுலி னாலும் உயிரோடு எழுப்பப்பட்டனர். இவர்கள் எல்லோரும் மீண்டும் மரித்தனர். லாசருவும் மீண்டும் மரித்தான். மரித்து உயிரோடு எழுப்பப்பட்டு இன்று வரை உயி ரோடு உலாவுகிறவர் இயேசு ஒருவரே. இயேசுவின் கல்லறையில் உயிர் த்தெழுந்த வல்லமை பலமாய் இறங்கிய போது பூமி மட்டுமல்ல, எருசலேம் பட்டணமே அதிர்ந்தது. தேவாலயத்தின் திரைச்சீலை மேல் தொடங்கி கீழ் வரைக் கும் இரண்டாக கிழிந்தது. பூமியும் அதிர்ந்தது, கன்மலைகளும் பிளந்தது, கல்ல றைகளும் திறந்தது, நித்திரையடைத்த அனேக பரிசுத்தவான்களின் சரீரங்களும் எழுந்திருந்தது (மத்தேயு 27 : 51 – 53). ஆவி தான் உயிர்ப்பிக்கிறது (2கொரிந்தியர் 3 : 6). இந்த உயிர்ப்பிக்கிற வல்லமை பிதாவுக்கும் உண்டு குமாரனுக்கும் உண்டு (யோவான் 5 : 21). எவைகளில் தேவன் உயிர்ப்பிக்கும் வல்லமை தருவார் எனப் பார்க்கலாம்
3) உயிர்ப்பிக்கும் வல்லமை:
சரீரங்களில் உயிர்ப்பிக்கும் வல்லமை:
ரோமர் 8 : 11ல் கூறியிருக்கிறபடி இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமையால் சாவுக்கேதுவான சரீரத்தின் உறுப்புகள் புதுப்பிக்கப்படும். வியாதிக்கு காரணமான அசுத்த ஆவிகள் விலகி ஓடும். 99 வயதான ஆபிரகாமின் சரீரம் கர்த்தரின் வல்லமையால் உயிர்பிக்கப்பட்டது. சரீரம் செத்துப்போய்க் கர்ப்பம் தரிக்க இய லாதவளாய் இருந்த சாராளைக் கர்ப்பம் தரிக்க வைத்தது தேவனுடைய வல்லமை.
ஆத்மாவில் உயிர்பிக்கும் வல்லமை:
சரீரப்பிரகாரமாக மரித்தவர்களை மட்டுமல்ல, ஆத்மாவில் மரித்தோர்களையும் கர்த்தர் உயிப்பிக்க வல்லவர். எசேக்கியேல் 37 : 5ல் எசேக்கியேல் காய்ந்து போன, செத்துப்போன எலும்புகளை நோக்கிக் கர்த்தர் “உங்களுக்குள் ஆவியைப் பிரவேசிக்க பண்ணுவேன் அப்பொழுது உயிரடைவீர்கள்” என்று கூறினவுடன் ஒரு இரைச்சல் உண்டாகி ஒவ்வொரு எலும்புகளும் தன் தன் எலும்புகளோடு சேர்ந்து கொண்டது (எசேக்கியேல் 37 : 10). ஆதாமிடம் தேவன் நன்மை தீமை அறியத்தக்க கனியைப் புசிக்க வேண் டாம் என்றும், புசிக்கும் நாளிலே சாகவாய் சாகவே என்றும் ஆண்டவர் சொல்லியிருந்தார் (ஆதியாகமம் 2 : 17). ஆதாம் அந்த வார்த்தைக்குக் கீழ்படியாததால் ஆதாமின் பாவத்தாலே பூமியிலே பாவங்களும் சரீர நோய்களும் மரணமும் வந்தது. கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமை நமது ஆத்மாவில் பலமாக இறங்கி பாவச்சேற்றில் மூழ்கிக் கிடக்கும் ஆத்து மாவை உயிர்த்தெழச்செய்யும். அந்த ஆத்மாவிலுள்ள மரண சாயல் மாறி, தேவ னுடைய ஜீவன் உள்ளே வரும். அப்பொழுது கிறிஸ்துவானவர் மகிமையின் நம்பிக்கையான நமக்குள் கடந்து வருவார் (கொலோசேயர் 1 : 29)
ஆவியை உயிர்ப்பிப்பார்
“மனோ துக்கத்தினால் ஆவி முறிந்து போம்” என்று நீதிமொழிகள் கூறுகிறது யாக்கோபை விட்டு யோசேப்புப் பிரிந்தவுடன் யாக்கோபின் ஆவி முறிந்தது என்று பார்க்கிறோம். ஆனால் பின்னால் யோசேப்பு உயிரோடிருக்கிறான் என்று கேள்விப்பட்டவுடன் அவனது ஆவி உயிர்த்தது என ஆதியாகமம் 42 : 36, 45 : 26, 27ல் கூறப்பட்டுள்ளது. இயேசு சோர்ந்து போகிறவனுக்குப் பலனைக் கொடுத்து சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப் பண்ணுவார். நம்முடைய நொறுக்குண்டஆவியையும் (சங்கீதம் 34 : 18), நறுங்குண்ட ஆவியையும் (சங்கீதம் 51 : 17)கிறிஸ்துவின் உயிர்த்தெழுந்த வல்லமையால் நம்மை உயிர்ப்பிப்பார். இவைகளிலிருந்து தேவன் தமது வல்லமையே நமது சரீரத்திற்கும், ஆவிக்கும், ஆத்மாவுக்கும் தர வல்லவர் என்று அறிகிறோம்.
4) விதையும் உயிர்த்தெழுதலும்
பூமியில் பிறந்த ஒவ்வொரு மனிதநின் சரீரமும் விதைக்கப்படுகிறது. மிருகங்க ளுக்கு ஆத்துமா இல்லாததால் அவைகள் புதைக்கப்படுகின்றன. இந்துக்கள் சடலத்தை எரிக்கின்றனர். முஸ்லிம்கள் சடலத்தைப் புதைக்கின்றனர். நாம் எரிப்பதும் இல்லை, புதைப்பதும் இல்லை விதைக்கப் படுகிறோம். ஒரு விசுவாசி தான் விதைக்கிற விதைகள் நிச்சயமாக முளை த்தெழும்பும், பலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு விதைக்கிறான். அதே போல் பூமியில் விதைக்கப்பட்ட பரிசுத்தவான்களின் சரீரத்திற்குள் கிறிஸ்துவின் ஜீவன் இருக்கிறபடியால் எக்காளச் சத்தம் ஒலிக்கும்போது அழிவில்லாதவர்களாய், மகிமையுள்ளவர் களாய்,ஆவிக்குரியசரீரத்தோடு எழுந்திருப்பார்கள். விதை முளைக்கத் தண்ணீ ரும், சூரியஒளியும் தேவை. நாம் உயிர்த்தெழ ஜீவனாகிய கிறிஸ்துவும், பரிசுத்த ஆவியின் வல்லமையும் தேவை. அதைத்தான் பவுல் பிலிப்பியர் 1 : 21 ல் “கிறிஸ்து எனக்கு ஜீவன் மரணம் எனக்கு ஆதாயம்” என்றார்.
கர்த்தர் மனுஷனை மண்ணிலிருந்து உருவாக்கின போது, அவனுடைய நாசி யிலே ஜீவசுவாசத்தை ஊதினார். அப்பொழுது ஜீவனும் ஆத்துமாவும் சிருஷ்டிக் கப்பட்டன. மனுஷன் மரணம் அடையும் போது நாசியின் வழியாக ஜீவனும், ஆத்துமாவும் வெளியேறுகிறது. ஆத்துமா வெளியே வரும் போது முதலில் தனது சொந்த சரீரம் கீழே கிடப்பதைப் பார்க்கிறது. மறுபடியும் அந்த சரீரத் திற்குள் புகுந்து அதை எழுப்பி விட எவ்வளவோ முயற்சிக்கிறது. ஆனால் அத னால் முடியவில்லை. மனுஷனின் உயிர் பிரியும் போது ஆவி தன்னைத் தந்த தேவனிடம் திரும்புகிறது. ஆத்துமா அழியாதது. யோவானிடம் கர்த்தர்,
வெளிப்படுத்தல் 1 : 17 , 18ல் “ …. பயப்படாதே, நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்; மரித்தேன், ஆனாலும், இதோ, சதாகாலங்களிலும் உயிரோடிருக்கிறேன்,” என்றார்.
இயேசு மரணத்தையும், பாதாளத்தையும் ஜெயமாய் விழுங்கி உயிரோடு எழுந்தபடியால் நமக்கு உயிர்த்தெழுதலில் நம்பிக்கை வருகிறது. அழிவு ள்ளதாய் விதைக்கப்படுகிற சரீரம் அழிவில்லாததாய் எழுந்திருக்கும். கிறிஸ்துவுக்குள் ளாக ஞானஸ்தானம் பெற்ற நாம் கிறிஸ்துவை அணிந்து கொண்டோம் (கலாத் தியர் 3 : 27). ஒரு விதை நிலத்தில் புதைக்கும் போது, உருவம் மாறுகிறது. அழகு சிதைகிறது. மண்ணோடு மண்ணாகப் போகிறது. அந்த ஆனால் அந்த விதைக்கு ள்ளிருந்து அழகான செடி எழும்புகிறது. அதுபோல நாமும் உயிர்த்தெழும்போது மகிமையுள்ள சரீரத்தோடு, மறுரூமாக்கப் பட்டவர்களாய் தேவசாயலோடு எழுந் திருப்போம். தேவ தூதர்கள் நமது ஆத்மாவை பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ள ப்படுவர். அவர்களோடு என்றன்றைக்கும் மகிழ்ந்திருப்போம்.
கிறிஸ்துவின் மரணத்தினால் நமக்குக் கிடைத்தவை
- நம்முடைய பாவங்களுக்குப் பரிகாரம் கிடைத்தது (எபிரேயர் 9 : 26).
- கிறிஸ்து நமக்காக சாபமானாதால் நியாயப்பிரமாணத்தின் சாபங்களுக்கு நம்மை நீக்கலாக்கி மீட்டுக் கொண்டார் (கலாத்தியர் 3 : 13).
- யூதர், புறஜாதி என்று வேறுபாடு அகற்றப்பட்டது. இரு நிறத்தாரையும் புதிய மனுஷனாக சிருஷ்டித்து, தேவனுக்குப் பிரியமான பரிசுத்த ஜாதியாக் கினார் (எபேசியர் 2 : 14 – 16).
- அப்பா பிதாவே என்று கூப்பிடத்தக்க புத்திரசுவீகாரத்தின் உரிமையை நமக்குத் தந்தார். (கலாத்தியர் 4 : 4 – 6).
- முன்னே தூரமாயிருந்த நாம் கிறிஸ்துவின் மரணத்தினால், அவர் சிந்திய இரத்தத்தினால் தேவனுக்குச் சமீபமானோம் (எபேசியர் 2 : 13).
- நாம் தேவனுக்கு சத்துருக்களாயிருக்கையில் இயேசு கிறிஸ்துவின் மரணத்தினாலே தேவனோடு ஒப்புரவாக்கப்பட்டோம் (ரோமர் 5 : 10).
- இயேசு கிறிஸ்து மரணமடைந்து சிந்திய இரத்தத்தினால் பாவமன் னிப்பாகிய மீட்பு நமக்குக் கிடைத்தது (எபேசியர் 1 : 7).
- இயேசு கிறிஸ்து சிலுவையில் சிந்திய இரத்தத்தினால் நாம் சுத்தி கரிக்கப்பட்டோம் (1யோவான்1 : 7).
- இயேசுகிறிஸ்துவின் இரத்தத்தினால் நீதிமான்களாக்கப்படுகிறோம் (ரோமர் 5 : 9).
- இயேசு கிறிஸ்துவின் மரணத்தினால் நம்முடைய ஆக்கினைத் தீர்ப்பு அகற்றப்பட்டது (ரோமர் 8 : 1 – 3).
- குற்றமில்லாத மாசற்ற ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினால் நாம் கிரயத்துக்குக் கொள்ளப்பட்டோம் 1 கொரிந்தியர் 6 : 20, 1 பேதுரு 1 : 18, 19).
- கிறிஸ்துவக்குள்ளாக ஞானஸ்தானம் பெற்ற நாம் அனைவரும் நம்மு டைய பாவ சரீரம் மரிக்க ஒப்புக்கொடுத்து புதிய மனுஷனாக இருக்கிறோம் (ரோமர் 6 : 1- 3, 6,8).
- நாம் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர் வாதங் களுக்கும் உரிமையாளரானோம் (ரோமர் 8 : 32, எபேசியர் 1 : 3).
- இயேசுவின் மரணத்தினால் நம்முடைய மரண பயம் முற்றிலும் அகற்றப் பட்டது (எபிரேர 2 : 14, 15).
- நமது எதிரியான சாத்தானின் வல்லமை உரியப்பட்டுத் தோற்கடிக்கப் பட்டான் (கொலோசெயர் 2 : 14 – 17).
இயேசுவின் உயிர்த்தெழுதலால் நமக்குக் கிடைத்தவை:
- கிறிஸ்துவின் தேவத்துவம் நிரூபிக்கப்பட்டது (ரோமர் 1 : 15).
- இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்ததால் நம்முடைய பிதாக்களுக்குத் தேவன் கொடுத்த வாக்குத்தத்தங்களை அவருடைய பிள்ளைகளாகிய நமக்கு நிறைவேற்றினார் (அப்போஸ்தலர் 13 : 32, 33).
- கிறிஸ்து நம்முடைய பாவங்களுக்காக ஒப்புக் கொடுக்கப்பட்டும் நாம் நீதிமான்களாவதற்காக எழுப்பப்பட்டும் இருப்பதைப் போன்ற நீதி, நாம் தண்ணீரில் மூழ்கி ஞானஸ்நானம் எடுக்கும் போது நமது பாவங்கள் மரிக்கப்பட்டு, புதிய மனுஷனாக மனுஷியாக எழுப்பப்படுகிறோம் (ரோமர் 4 : 23 – 25).
- கிறிஸ்து எப்பொழுதும் உயிரோடு இருப்பதால் அவரிடம் சேருகிற நாம் முற்று முடிய இரட்சிக்கப்படுகிறோம் (எபிரேயர் 7 : 25).
- நமக்கு வானத்திலும் பூமியிலும் உள்ள சகல அதிகாரத்தையும் நமக்குக் கொடுத்திருக்கிறார் (மத்தேயு 28 : 18, எபேசியர் 1 : 19, 20).
- கிறிஸ்துவின் வருகையில் கிறிஸ்துள்ளான நாம் அனைவரும் உயிர்ப்பிக்கப்படுவோம் என்ற உறுதி நமக்கு கிடைத்தது (1 கொரிந்தியர் 15 : 20 – 23).
- நாம் கிறிஸ்துவினுடையவர்களாகி தேவனுக்கென்று கனி கொடுக்கத் தகுந்தவர்களானோம் (ரோமர் 7 : 4).
- எதிர்காலத்தில் ஒரு நியாயத்தீர்ப்பு உண்டென்று உலகிற்கு நிரூபிக்கப்பட்டுள்ளது (அப்போஸ்தலர் 17 : 31).
- நமக்கு இரட்சிப்பு கிடைத்தது (2 தீமோத்தேயு 2 : 10).
- தேவன் கிறிஸ்துவின் பலியை அங்கீகரித்தார் என்பது உறுதியாயிற்று (1 கொரிந்தியர் 15 : 15).
- பாவங்களிலிருந்து விடுதலை பெறுகிறோம் (1பேதுரு 2 : 24).
- பிந்தின ஆதாமாகிய கிறிஸ்து உயிப்பிக்கிற ஆவியானவர் (1கொரிந்தியர் 15 : 45, யோவான் 11 : 25).
- கிறிஸ்துவுக்குள்ளானவர்கள் மரணத்துக்குப் பின் அழிவில்லாத சரீரத்தைப் பெற்றுக் கொள்வார்கள் என்பது உறுதியானது (1கொரிந்தியர் 15 : 49 – 54).
- விதைக்கப்படும் நமது சரீரம் இயேசுகிறிஸ்து வரும்போது உயிர்த்தெழும் என்பது உறுதியானது (1கொரிந்தியர் 15 : 44).
- இயேசு கிறிஸ்து மறித்து உயிரோடெழுந்ததினால், நமக்கு மரணத்தின் மீது ஜெயம் கிடைத்தது (1 கொரிந்தியர் 15 : 54 – 57).
முடிவுரை:
இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்தபடியால் ,கிறிஸ்துவினுடையவர்களும் உயிர்த் தெழுவார்கள். கர்த்தர் இயேசுவின் மரண உபாதைகள் கட்டுகளை நீக்கி உயிரோ டெழுப்பினார் என்று பேதுரு அப்போஸ்தலர் 2 : 24 ல் பலமாய்ச் சாட்சி கொடுத் தார். நாம் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும்போது இயேசுவின் உயிர்த்தெழுந்த வல்லமை நம்மில் கிரியை செய்யும். ஜீவனாகிய கிறிஸ்து நாம் மரணமடை யுமுன் நமக்குள் இருப்பாரானால் பரிசுத்த ஆவியானவருடைய வல்லமையி னாலே இமைப்பொழுதில் நாம் மறுருபமாக்கப்பட்டு கிறிஸ்துவுக்கு எதிர்கொ ண்டு போவோம். ஸ்தேவானின் மரணநேரம் வந்தபோது, வானத்தை அண்ணாந்து பார்த்து வானங்கள் திறந்திருக்கிறதையும் பிதாவின் வலதுபாரிசத்தில் இயேசு கிறிஸ்து எழுந்து நிற்கிறதையும் கண்டார் (அப்போஸ்தலர் 7 : 56).
வேதத்தில் மற்ற இடங்களிலெல்லாம் இயேசுகிறிஸ்து பிதாவின் வலது பாரிசத்தில் உட்கார்ந்திருந்தார் என்றுதான் உள்ளது (மாற்கு 16 : 19, எபிரேயர் 1 : 3). இயேசு காடியை வாங்கினபின் முடிந்தது என்று சொல்லித் தலையைச் சாய்த்து ஆவியை ஒப்புக்கொடுத்தார் என்று யோவான் 19 : 30 ல் பார்க்கிறோம். நாம் கல் வாரி சிலுவையை நோக்கிப்பார்த்து, தேவன் என் பாவங்களை மன்னித்தார், சாபங் களைத் தீர்த்தார், நோய்களைக் குணமாக்கினார், சந்துருவின் தலையை நசுக்கி னார், எனக்காக எல்லாவற்றையும் சிலுவையில் செய்து முடித்தார் என்று சந்தோ ஷத்தில் மூழ்குகிறோம். கர்த்தர் ஒருபோதும் முடிந்து போகிறவர் அல்ல. முடித்து நிறைவேற்றுகிறவர். இயேசு உயிர்த்தெழுந்ததால் சிலுவைப் பாடுகளைப் பற்றிய எல்லா தீர்க்கதரிசன வார்த்தைகளும் நடந்து முடிந்தது. ஆகவே இயேசு பிதாவினிடத்தில் ஜெபிக்கும் போது,
யோவான் 17 : 4 “பூமியிலே நான் உம்மை மகிமைப்படுத்தினேன்; நான் செய்யும்படி நீர் எனக்கு நியமித்த கிரியையைச் செய்துமுடித்தேன்.”
என்று ஜெய கெம்பீரமாய் முழங்கினார். அதேபோல்
லூக்கா 23 : 46ல் “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச்சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனைவிட்டார்.”
என்று கூறியதைக் காணலாம். இதில் பிதாவுக்கும் இயேசுவுக்குமுள்ள உறவைப் பார்க்கிறோம். அவருடைய வார்த்தைகள் மரணத்தையும் மகிழ்ச்சியோடு சந்திக்க நம்மை ஏவி எழுப்புகிறது. கிறிஸ்து உயிர்தெழுந்தபின் நமக்குக் கொடுக்கும் பெரிய ஆசீர்வாதம்,
மத்தேயு 28 : 20 “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.
என்பதுதான். கிறிஸ்து உயித்தெழாவிட்டால் கிறிஸ்தவ மார்க்கம் ஒரு நம்பிக் கையற்ற மார்க்கமாக, இருண்ட மார்க்கமாக, பிற மார்க்கங்களைப் போல இருந் திருக்கும். இந்த மார்க்கம் மட்டுமே மரணத்திற்கு அப்பால் உள்ள பரலோக ராஜ்ஜி யத்தையும், நித்தியத்தையும், பாதாளத்தையும், அக்கினியையும் குறித்து விவரி க்கிறது. அவரது உயிர்த்தெழுதலால் உன்னததற்குரிய ஆசீர்வாதங்களை நாம் பெறுகிறோம். உயிர்த்தெழுந்த அவருடைய வல்லமையான பிரசன்னம் நம்மை எப்பொழுதும் இனிமையாக மூடும். கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அத்தனை பேருமே உயிர்த்தெழுதல் நடைபெறும் கடைசி நாளில் மீண்டும் எழுந்திருப்பா ர்கள் என்பதை நாம் நன்றாகவே அறிந்தாலும், கிறிஸ்துவே உயிர்த்தெழுத லுக்குக் காரணமாயிருக்கிறார் என்று அறிகிறோம். ஆமென்.