1. உலகத்தின்ஒளி:
யோவான் 8 : 12 “இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.”
யோவான் சுவிசேஷத்தில் ஏழு இடங்களில் நானே யார் என்று இயேசு கூறியு ள்ளார் இதில் “நானே உலகத்திற்கு ஒளியாய் இருக்கிறேன்” என்று கூறிய வசன த்தைப் பற்றிப் பார்க்கலாம். உலகத்திற்கு நானே ஒளியாய் இருக்கிறேன் என்று இயேசு கூறியதால் அவரைத் தவிர வேற ஒளி இந்த உலகத்தில் இல்லை என் பதை அறிகிறோம். உலகின் ஒளியாக வெளிப்பட்ட இயேசுவைப் பின்பற்றுகி றவர்கள் பெற்றுக் கொள்ளும் ஆசீர்வாதங்கள் இரண்டு என்று இந்த வசனத்தில் சொல்லப்பட்டிருக்கிறது
1. அவர்கள் ஒருக்காலும் ஆவிக்குரிய இருளில் நடக்கத் தேவன் அனுமதிப்பதில்லை.
2. தன்னைப் பின்பற்றுகிறவர்கள் ஜீவ ஒளியை அடைந்திருப்பார்கள் என்கிறார். ஒரு மனிதனை நித்திய ஜீவனுக்குள் வழி நடத்துவது ஜீவ ஒளியாகும்.
இயேசு பாலகன் பிறப்பதற்கு முன்பே அவருடைய பிறப்பு எல்லா ஜனத்துக்கும் சந்தோஷத்தை உண்டாக்கும் என்று தேவதூதன் மேய்ப்பரிடம் அறிவித்தான் (லூக்கா 2 : 10). இயேசு தன் வாயால்,
யோவான் 1 : 9ல் “உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.”
என்று தன்னைப் பற்றிக் கூறியதைப் பார்க்கிறோம். உலகத்தை சிருஷ்டித்த போது கர்த்தர் பேசிய முதல் வார்த்தை வெளிச்சம் உண்டாகக்கடவது (ஆதியா கமம் 1: 3).என்பதுதான்.ஒரு இடத்தினுள் வெளிச்சம் உள்ளே நுழையும் போது, அந்த இடத்திலுள்ள இருள் அகன்று விடும். நமது வாழ்க்கையிலும் அதே போல் ஒளியான இயேசு வரும்போது இருளான அந்தகார வல்லமைகள் அனைத்தும் நம்மை விட்டு அகன்று விடும். நம்முடைய ஆண்டவர் நம்மை அந்தகாரத்தில் இருந்து ஆச்சரியமான இயேசுவினிடத்திற்கு அழைத்து வந்தார் அதேபோல் நம்முடைய வாழ்க்கையிலும் நீதியின் சூரியனாக பிரவேசிக்க அவர் விரும்புகிறார்.
கிறிஸ்து யூதர்களுக்கு மட்டுமல்ல அவரைப் பின்பற்றுகிற யாவருக்கும், தன்னி டமுள்ள ஜீவஒளியை அவர்களுக்குள் பிரகாசிக்கப் பண்ணுவதற்காகவும், அவர்களை இருளில் நடக்க விடாமல் தடுப்பதற்காகவும், உலகத்திற்கு ஒளியாக வந்தார். சூரியனின் ஒளி சந்திரனில் பிரகாசிப்பதைப் போன்று, கிறிஸ்துவின் ஒளி நம்மில் பிரகாசிக்கும் போது, நாம் ஒளி வீசுகிறவர்களாக மாறுகிறோம். சூரியனின் ஒளியை சந்திரன் வாங்கி இருளான இரவில் பிரகாசிப்பதைப் போல இயேசுவின் ஒளியை நாம் வாங்கி இருளுள்ள இந்த உலகத்தில் பிரகாசிக்கும்படி நம்மை வைத்திருக்கிறார். கோடிக் கணக்கான நட்சத்திரங்களின் மத்தியிலே ஒரு பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமாக ஜொலிப்பவர் இயேசு. அதை,
வெளிப்படுத்தல் 22 : 16 “நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாச முள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன் என்றார்.”
ஏசாயா தீர்க்கதரிசி,
ஏசாயா 60 : 2 “இதோ, இருள் பூமியையும், காரிருள் வானங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.” என்றும்,
மல்கியா தீர்க்கதரிசி,
மல்கியா 4 : 2ல் “என் நாமத்துக்குப் பயந்திருக்கிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின்கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப்போய், கொழுத்த கன்று களைப்போல வளருவீர்கள்.” என்றும் கூறியிருக்கிறார்.
இந்த வசனங்களெல்லாம் தேவன் நமக்குள் பிரவேசிப்பார் என்ற வாக்குறுதியை யும், நம்மைப் பிரகாசிக்கப் பண்ணுவார் என்ற வாக்குறுதியையும், வேதத்தின் மூலம் நமக்குத் தருகிறார். இயேசு தேவனுக்கும், இரட்சிப்புக்கும் நேராகச் செல்ல, சரியான ஒளியை நமக்குள் பிரவேசிக்கச் செய்வதால், நமக்குள்ளிருக்கும் இரு ளும் வஞ்சகமும் மறைகின்றன. அதனால் இயேசுவைப் பின்பற்றுகிற நாம் இருள், உலகம், பிசாசு இவைகளிலிருந்து விடுவிக்கப் படுகிறோம். அவருடைய சுவிசேஷத்தைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் இயேசு விடுதலையளிக்கிறார். அதைக் கேட்கும் போதே ஒவ்வொருவரின் மனதிலுள்ள வேண்டாதவைகள் மாற ஆரம்பிக்கிறது. அவர்களுக்கு இயேசு தன்னுடைய கிருபையையும், அறிவையும் கொடுத்து வேண்டாத எண்ணங்களையும், செயல்களையும் நம்மிலிருந்து அகற்றப் பண்ணுகிறார். நாம் மனந்திரும்பிய பின் நற்செயல்கள் செய்வதாலும் ஆவியின் கனியை நம்மில் காணப்படச் செய்வதாலும் இயேசுவின் ஒளி நம்மில் பிரகாசிக்கும். இருளானது பாவத்திற்கும், மரணத்திற்கும், சாத்தா னுக்கும், அசுத்தத்துக்கும், இழப்புக்கும், அநீதிக்கும், பொய்க்கும், நரகத்துக்கும் அடையா ளம். ஒளியோ தேவனுக்கும், மகிழ்ச்சிக்கும், பரிசுத்தத்திற்கும், உண்மைக்கும், நீதிக்கும், சாவாமைக்கும் அடையாளம். அப்படிப்பட்ட இயேசுவாகிய ஒளிக்குள் நாம் பிரவேசிக்கிறோம்.
2. பிரகாசிக்கச் செய்யும் ஒளி இயேசு:
கர்த்தர் நம்மைப் பிராகாசிக்கச் செய்யும் மகிமையான ஒளியாக இருக்கிறார். இதைத்தான் தாவீது,
சங்கீதம் 118 : 27ல் “கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிக்கிற தேவனாயிருக்கிறார்;” என்றும்
எண்ணாகமம் 6 : 25ல் “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன்மேல் கிருபையாயிருக்கக்கடவர்.”
என்றும் கூறியிருப்பதைக் காண்கிறோம். மனிதர்களுடைய அந்தகாரத்தை மாற்றும்படியாகவோ, அவர்களுக்கு வெளிச்சத்தை மட்டும் காட்டும்படியாகவோ கிறிஸ்து வரவில்லை. அவர்களை வெளிச்சமாக்குவதற்கே வந்தார். அதனால் தான் இயேசு “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்” என்றார். நம்மு டைய இருதயங்களில் கிறிஸ்துவின் முகத்திலுள்ள மகிமையின் அறிவாகிய ஒளியை தோன்றச் செய்வார். மோசே தேவனுடைய சமூகத்தில் சீனாய் மலை யில் அவருடைய பிரசன்னத்தில் இருந்து, அவரோடு உறவாடி அதிக நாட்கள் செலவழித்ததாலும், கர்த்தரையே நோக்கிக் கொண்டிருந்ததாலும் தேவன் மோசே யின் முகத்தைப் பிரகாசிக்கச் செய்திருந்தார். மோசே சீனாய் மலையிலிருந்து கீழிறங்கி வந்தபோது ஜனங்கள் அவரது முகம் பிரகாசித்திருப்பதைக் கண்டார்கள் (யாத்திராகமம் 34 : 35).
அதேபோல் நாமும் அதிகமான நேரம் தேவனுடைய சமூகத்தில் அவருடைய பிரசன்னத்தில் அமர்ந்து இயேசுவின் ஒளியை நமக்குள் பிரகாசிப்பிக்கச் செய் வோம். இயேசு பேதுருவையும், யோசனையும், யாக்கோபையும் கூட்டிக்கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலைக்குப் போனார். அப்பொழுது இயேசு அவர்க ளுக்கு முன்பாக மறுரூபமானார். அப்பொழுது இயேசுவின் முகம் சூரியனைப் போல பிரகாசித்தது. அந்த நேரத்தில் பிதாவும் ஒரு ஒளியுள்ள மேகத்திலிருந்து “இயேசு என்னுடைய நேசகுமாரன் என்றார்” மூன்று சீஷர்களும் இதைக் கண் ணால் பார்த்தாலும் சத்தத்தைக் காதால் கேட்டாலும் பயந்து முகங்குப்புற விழுந்தனர் (மத்தேயு 17 : 1, 2, 5, 6).
3. இருளைப் போக்கும் ஒளி இயேசு:
யோவான் 1 : 5 “அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.
1யோவான் 1 : 5 “தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை;”
வெளிச்சம் ஒரு இடத்தில் வரும்போது இருளானது மறைந்து விடும். அதே போல் கிறிஸ்துவாகிய ஒளியை, அந்தகார வல்லமைகளை நிறைந்த நமக்குள் கொண்டு வர வாஞ்சிக்கும் போது, அது நம்மை நிரப்பும் போது அவைகளெல்லாம் தானாக விலகி ஓடும். தேவனுடைய மகிமை நம்மை நிரம்ப ஆரம்பிக்கும். செபுலோன் நப்தலி நாடுகளில் வாழ்ந்த ஜனங்கள் இருளில் வாழ்ந்தனர். இயேசு தன்னுடைய பால்யபருவத்தை அங்குதான் செலவழித்தார். இது புறஜாதிகளின் நாடு என்றழை க்கப்பட்டது. ஏனென்றால் ரோம சாம்ராஜ்ஜியத்தை விட்டு அநேகர் இந்தப் பகுதிக்கு வந்து விட்டனர். இந்த நாடுகளில் வாழ்ந்தவர்கள் தேவனை விட்டு மிகவும் துரமானவர்களாக இருந்தனர். இயேசு அங்கு சென்று தீர்க்கதரிசனம் உரைத்தார். இதை 800 ஆண்டுகளுக்கு முன்னே ஏசாயா தீர்க்கதரிசி ஏசாயா 9 : 1, 2 ல் என்ன கூறினாரென்றால் அந்த நாட்டிலுள்ள கனத்த இருளின் நடுவில் இயேசு ஒளியாக வருவாரென்றும், அவர்களுக்கு இரட்சிப்பை அருளுவாரென்றும், வெளிச்சத்தையும், நம்பிக்கையையும் கொண்டு வருவாரென்றும், கூறினார். இயேசு இந்த நாடுகளில் அநேக அற்புதங்களைச் செய்தார். இதை இயேசு,
மத்தேயு 4 : 14, 15 “கடற்கரையருகிலும் யோர்தானுக்கு அப்புறத்திலு முள்ள செபுலோன் நாடும் நப்தலி நாடும் ஆகிய புறஜாதியாருடைய கலிலேயாவிலே, இருளில் இருக்கும் ஜனங்கள் பெரிய வெளிச்சத் தைக் கண்டார்கள்; மரண இருளின் திசையிலிருக் கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது என்று,” கூறினார்.
இயேசு யூத குலத்தில் தோன்றினாலும், அந்தக் குலத்திற்கு மட்டுமல்ல, முழு உலகத்திற்கும் ஒளியைக் கொடுக்கவே வந்தார். பாவமான உலகில் தோன்றிய நித்திய ஒளி இயேசு. அத்தகைய ஒளி உலகத்தில் வீசினாலும், மனிதனுடைய இயற்கையான சுபாவம் தீமையாக இருக்கிறபடியினால், அவர்கள் இருளையே விரும்புகிறார்கள். அதனால் ஆக்கினைத் தீர்ப்படைகின்றனர். பொல்லாங்கு செய்கிற யாரும் இயேசுவின் ஒளிக்குள் வர விரும்புகிறதில்லை. ஏனெனில் அவர்களுடைய கிரியைகளுக்குத் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணத்தில் அதற்குள் வர விரும்புகிறதில்லை. சத்தியத்தின்படி நடக்கிறவர்களின் கிரியை கள் தேவனுக்கு மிகவும் பிரியமாக இருப்பதால் அவர்கள் இயேசுவின் ஒளிக்குள் வர விரும்பி அதற்குள் பிரவேசிக்கின்றனர்.
மத்தேயு 8 : 28 – 34, மாற்கு 5 : 1 – 20, லூக்கா 8 : 26 – 29 ஆகிய நூல்களில் அசுத்தஆவி பிடித்த மனிதனைப் பற்றிப் பார்க்கிறோம். இயேசு கெர்கெசனேர் நாட்டிற்கு வந்தபோது அசுத்த ஆவியுள்ள இரண்டு பேர் இயேசுவை நோக்கி வந்தனர். இவர்கள் மிகவும் ஆபத்தான மனிதர்களாகக் காணப்பட்டனர். அவர்கள் தங்கள் சுயஉணர்வு இல்லாதவர்களாய் அசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு சாத்தான் விரும்பும் இடமாகிய கல்லறையில் சாத்தானால் வைக்கப்பட்டிருந்தனர். மேலும் சாத்தான் அவர்களுக்கு இயற்கைக்கு மேற்பட்ட பெலனைக் கொடுத்து அவனைக் கட்டி வைத்திருந்த சங்கிலிகளையெல்லாம் முறித்துப் போடச் செய்தன. அவன் கல்லுகளினால் தன்னைக் கீறிக்கொண்டு ஆடையில்லாமலிருந்தான். இயேசு அவனை நோக்கி உன் பேர் என்ன என்று கேட்டவுடன் லேகியோன் என்றான். அநேக அசுத்த ஆவிகள் அவனுக்குள் இருப்பதை அறிந்த இயேசு “அசுத்த ஆவியே இந்த மனுஷனை விட்டுப் போ” என்றார். உடனே அசுத்தஆவி பிடித்தவன் ஓடி இயேசுவிடம் வந்து “உன்னதமான தேவனுடைய குமாரனே” என்று அழைத்தன. பிசாசுகள் தேவனை இனம் கண்டுகொள்ளும் என்பதை இதிலிருந்து அறிகிறோம்.
பிசாசுகளுக்குப் பாதாளத்திற்குச் செல்வதற்கு விருப்பமில்லாததால் தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்தி விடாதபடி இயேசுவிடம் மிகவும் வேண்டிக் கொண்டன. பிசாசுகளும் தேவனிடம் வேண்டுகின்றன என்று இதிலிருந்து அறிகி றோம். மேலும் அவைகள் இயேசுவிடம் தனக்குள்ள விருப்பத்தையும் கூறிய தைப் பார்க்கிறோம். அவைகள் தங்களை அந்தத் திசையிலிருந்து துரத்திவிட வேண்டாமென்று இயேசுவிடம் வேண்டின. இயேசுவும் அசுத்தஆவிகளின் வேண் டுதலின் படி அவைகளைப் பன்றிக் கூட்டத்துக்குள் போகும்படி கட்டளையிட்டார். அந்த இடத்தில் 2000 பன்றிகள் மேய்ந்து கொண்டிருந்தன. அத்தனை அசுத்த ஆவி களும் பன்றிக் கூட்டத்துக்குள் புகுந்தன. அசுத்த ஆவிகள் அத்தனை பன்றிக் கூட் டத்துக்குள் புகுந்ததால் அவைகளுக்கு பிசாசோடு வாழ்வதற்குப் பிடிக்காமல் ஓடி கடலுக்குள் மாண்டு போயின. பிசாசுகளின் வேண்டுதலையும் இயேசு நிறை வேற்றியதைப் பார்க்கிறோம். உடனே பிசாசுபிடித்தவன் வஸ்திரங்களைத் தரித் துக் கொண்டு உட்கார்ந்தான். பிசாசு பிடித்த மனிதன் புத்தி தெளிந்து வஸ்திரம் தரித்து உட்கார்ந்திருந்ததைப் பார்த்த ஜனங்கள் பயந்தனர்.
அவர்கள் சரீரத்தில் வேதனையில் அலைக்கழித்துக் கொண்டிருந்தவன் விடுத லையானதையோ, இரவெல்லாம் ஓலமிட்டு அமைதியைக் கெடுத்தவன் மீட்டெ ழுந்தானே என்பதையோ, நித்தியமான அழிவிலிருந்து தேவன் அவனை மீட்டெ டுத்தார் என்பதையோ எண்ணாமல் தங்கள் சொத்துக்களான பன்றிகள் நஷ்டமா னதையே பார்த்தனர். குணமாக்கும் இயேசு தங்களோடிருப்பதை ஜனங்கள் விரும் பவில்லை. ஜனங்கள் இயேசுவைத் தங்கள் எல்லைகளை விட்டுப் போகும்படி வேண்டிக் கொண்டனர். இருளான வாழ்க்கையில் வாழ்ந்த அவன், இயேசு என்ற ஒளிக்குள் வந்ததால் இயேசுவோடுகூட வருகிறேன் என்று இயேசுவிடம் கூறி னான். அதற்கு இயேசு அவனுக்கு உத்தரவு கொடுக்காமல் அவனுடைய குடும்ப த்திற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்படி அவனை வீட்டிற்கு அனுப்பினார். ஜனங்கள் இயேசுவை அந்த இடத்தை விட்டுப் போகும்படி கேட்டதால், அந்த இடத்தில் ஊழியம் செய்வதற்குத் தேவன் அவனை ஏற்படுத்தினார். அவனும் தேவன் தனக்குச் செய்ததைத் தெக்கப்பொலி நாட்டில் பிரசித்தம் பண்ணினான்.
4. வழிகாட்டும் ஒளியான இயேசு:
கர்த்தரிடமிருந்து நமக்கு மூன்று விதங்களில் ஒளி கிடைக்கிறது. 1.இயேசுவின் ஜீவனின் மூலமாகவும் 2. தேவனுடைய வார்த்தையின் மூலமாகவும் 3. தேவனு டைய மகிமையின் மூலமாகவும் நமக்கு ஒளியைக் கொடுக்கிறார். .
யோவான் 1 : 4 ‘அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது.”
சங்கீதம் 119 : 105 “உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”
வெளிப்படுத்தல் 21 : 23 “நகரத்திற்கு வெளிச்சங்கொடுக்கச் சூரியனும் சந்திரனும் அதற்கு வேண்டுவதில்லை; தேவனுடைய மகிமையே அதைப் பிரகாசிப்பித்தது, ஆட்டுக்குட்டியானவரே அதற்கு விளக்கு.”
இதில் கூறப்பட்ட வசனங்களில் ஒளியைப் பற்றிய விளக்கத்தைப் பார்க்கி றோம். இரட்சிக்கப்படாத ஒருவனின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எல்லாம் அந்தகாரமாகவே இருக்கிறது. அவனுக்குத்தான் எங்கிருந்து வந்தோம் என்றும், எங்கே போகிறோம் என்றும் தெரியாது. அதனால் தான் கிறிஸ்து,
லூக்கா 11 : 35ல் “உன்னிலுள்ள வெளிச்சம் இருளாகாதபடி எச்சரிக்கையாயிரு என்றார். “
கிறிஸ்துவை ஒருவன் பின்பற்றி நடக்கும்போது அவனுக்கு அவ்வப்போது வெளிச்சம் தோன்றுவதில்லை. அவன் வெளிச்சமாகவே மாறி விடுகிறான். சரியான வழியில் அழைத்துச் சென்று தேவனால் உயர்த்தப்பட்ட இருவரைப் பற்றி வேதத்திலிலுள்ளதைப் பார்க்கலாம்.
பவுல்: (அப்போஸ்தலர் 9 : 1 – 22)
பவுலாக மாறிய சவுல் கிறிஸ்தவ மார்க்கத்தாரைக் கட்டி அவர்களை எருசலே முக்கு கொண்டு போகவும், கர்த்தருடைய சீஷர்களைப் பயமுறுத்தவும், பிரதான ஆசாரியரிடம் தமஸ்குவிலுள்ள ஜெப ஆலயங்களுக்கு நிருபங்களைக் கேட்டு வாங்கி வரும்போது, இயேசு அவன் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தார். இயேசு தன்னுடைய பிள்ளைகளை சவுல் பண்ணப் போவதை அறிந்தவராய் அவ னைக் கொண்டு தான் திட்டம் பண்ணி செயல்படுத்த நினைக்கிற திட்டத்தை நிறைவேற்ற, தானே ஒளியாக அவனுக்குத் தோன்றினார். தமஸ்குவில் இயேசு வின் ஒளி சவுலைச் சுற்றிலும் பிரகாசித்தது. அந்த ஒளியிலிருந்து சவுலே சவுலே என்று தன்னைப் பெயர் சொல்லி அழைக்கும் சத்தத்தையும் “என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்” என்று கூறுகிற சத்தத்தையும் சவுல் கேட்டான். இயேசுவை தரிசித்தான். அவனோடு சென்ற மற்றவர்கள் ஒளியைக் கண்டனர். சத்தத்தைக் கேட்டனர். ஆனால் என்ன கூறினாரென்று மற்றவர்களுக்குப் புரியவில்லை. இயேசுவையும் அவர்கள் தரிசிக்கவில்லை. சவுல் தேவனுடை ய சித்தத்துக்குத் தன்னை ஒப்புக் கொடுத்தான். கிறிஸ்து அவனுடைய பெயரைப் பவுல் என்று மாற்றி, பிரதான அப்போஸ்தலனாகவும், புறஜாதிகளுக்கு வெளிச்சத்தை அளிப்ப தற்காகவும் தெரிந்து கொண்ட தன்னுடைய திட்டத்தின் பாதையில் சவுலை அழைத்துச் சென்று வழி நடத்தினார்.
மோசே: யாத்திராகமம் 3 : 1 – 22)
ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்த மோசேக்கு தான் அவனைக் கொண்டு செயல்படுத்தவிருக்கும் திட்டத்திற்காகத் தானே முட்செடியின் நடுவில் ஒளியா கத் தோன்றினார். அதிலிருந்து அவனைப் பார்த்து மோசே மோசே என்றழைத்து ஆடு மேய்க்கும் அவனுடைய தொழிலை மாற்றி தான் அவனை இலட்சக்கண க்கான மக்களுக்கு மேய்ப்பனாகப் பயன்படுத்தப் போவதையும் கூறி அவனை சம்மதிக்க வைத்து உன்னத பாதையில் வழி நடத்தினார். வல்லமையாக அவனைப் பயன்படுத்தி அவன் மூலம் பல அற்புதங்களை நடத்தி ஜனங்களை கானானுக்குள் வழி நடத்தச் செய்தார்.
5. பாவத்தைப் போக்கும் ஒளி இயேசு:
இயேசு தேவாலயத்தில் உபதேசித்துக் கொண்டிருந்தபோது வேதபாரகரும், பரிசேயரும், விபச்சாரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஸ்திரீயை இயேசுவிடம் கொண்டு வந்தார்கள் மோசேயின் நியாயப்பிரமாணத்தின்படி அவள் கல்லெறி யப்பட வேண்டுமென்பதால் கூட்டி வந்தனர். (லேவியராகமாம் 20 : 10) ஆனால் அவளோடு பாவம் செய்த ஆண்மகனும் கொல்லப்பட வேண்டுமென்பது தான் அந்தச் சட்டம். ஆனால் அவர்கள் அவளோடு எந்த ஆண் மகனையும் அழைத்து வரவில்லை. வந்தவர்களின் நோக்கம் அதுவல்ல. உண்மையாக அவளுக்குத் தண்டனை கொடுக்க வேண்டுமென்றால் அவளை நியாயம் விசாரிக்கக் கூடிய சனகெரிப் சங்கத்திற்கோ, ,பிரதான ஆசாரியர்களிடத்திற்கோ, ரோம அதிகாரி களிடத்திற்கோ, நுற்றுக்கதிபதியினிடத்திற்கோ கொண்டு சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அவர்களோ இயேசுவிடம் ஏதாவது குற்றம் கண்டுபிடிக்க வேண் டுமென்றும், அவரை ஆக்கினைக்குள்ளாக்க முகாந்திரம் கண்டு பிடிக்க வேண்டு மென்றும் இயேசுவிடம் அவளைக் கூட்டி வந்தனர். மோசேயின் நியாயப் பிரமா ணத்திற்கு எதிராக கல்லெறிந்து கொல்லக் கூடாது என்று இயேசு கூறுகிறாரா என்று இயேசுவையே பார்த்துக் கொண்டிருந்தனர். கல்லெறிந்து கொல்லுங்கள் என்று இயேசு கூறினால் அவர் இரக்கமுள்ளவர் அல்லவென்றும், பிதாவின் அன்பை வெளிப்படுத்த வந்தவர் அல்லவென்றாகிவிடும். மேலும் ரோம அரசாங் கத்தின் தீர்ப்பு வழங்கும் அதிகாரத்தைத் தான் எடுத்துக் கொண்டதாக இயேசுவின் மீது குற்றம் சுமத்துவர். இவர்களின் திட்டத்தையறிந்த இயேசு அவர்கள் சொல் வதைக் கேளாதவர் போல் தரையில் எழுதினார். இயேசு பூமியில் வாழ்ந்த போது ஒரு புஸ்தகம் கூட எழுதவில்லை.
ஆனால் முதலாவது நியாயப்பிரமாணத்தின் பத்து கட்டளைகளையும் தன்னு டைய கையால் எழுதிக் கொடுத்தார் (உபகாமம் 10 : 4). இரண்டாவதாக தாவீது கர்த்தருக்கென்று ஆலயம் கட்ட நினைத்த போது அந்த ஆலயத்தை எவ்வாறு கட்ட வேண்டுமென்பதை எழுதித் தாவீதுக்கு கொடுத்தார் (1நாளாகாமம் 28 : 19). மூன்றாவதாக பார்வோன் ராஜாவாகிய பெல்ஷாத்சார் தேவாலயத்திலுள்ள பாத் திரங்களில் மதுவை ஊற்றித் தன் நண்பர்களோடு கூடக் குடித்து தீட்டுப் படுத் தினான். அப்போது “மெனே மெனே தெக்கேல் உப்பார்சின்” என்ற நியாயத் தீர்ப்பு வார்த்தைகளை சுவரில் எழுதினார். (தானியே 5 : 5, 25). நான்காவதாக பாவம் செய்த இந்த ஸ்திரீக்காகத் தரையில் எழுதினார். ஏன் இயேசு குனிந்து தரையில் எழுதினாரென்றால் “உங்களில் குற்றமில்லாதவன் கல்லெறியுங்கள்” என்று கூறினதால் அவர்கள் தாங்களாகவே அந்த இடத்தை விட்டு நழுவிப் போவதற்கு வாய்ப்பைக் கொடுப்பதற்காகத்தான். அவர்களனைவரும் குற்றவுணர்வோடு அந்த இடத்தை விட்டு நழுவிச் சென்றனர். ஏன் புழுதியில் எழுதினாரென்றால்,
எரேமியா 17 : 13 “ …. உம்மை விட்டு அகன்று போனவர்களின் பெயர் புழுதியில் எழுதப்படும்”
என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. இயேசு தன்னை விட்டு அகன்று போனவர்களின் பெயரை எழுதியிருக்கலாம். அல்லது அந்த விபச்சார ஸ்திரீயின் பாவ மன்னிப்பை எழுதியிருக்கலாம். உன்னிந்திரியங்களை ஆராய்ந்து அறிந்த கர்த்தர் அவர்களின் பாவங்களை அறிந்திருந்ததால் அவ்வாறு கூறினார். அவர் களும் தங்களுடைய மனசாட்சியினால் பாதிக்கப் பட்டதால் தான் அந்த இடத்தை விட்டுச் சென்றனர். தனித்திருந்த அந்தப் பெண்ணைப் பார்த்து இயேசு அவளை அந்தத் தண்டனையிலிருந்து தப்புவிக்க சித்தம் கொண்டு தானும் அவளை ஆக் கினைக்குள்ளாகத் தீர்க்காமல், அவளுக்கு மீண்டும் ஒரு சந்தர்ப்பத்தைக் கொடு ப்பதற்காக “:நீ போ இனிப் பாவம் செய்யாதே. நானும் உன்னை ஆக்கினை க்குள்ளாகத் தீர்க்கிறதில்லை” என்றார்.
அந்த நாள் வரை அந்தப் பெண் இருளான வாழ்க்கையில் வாழ்ந்து பாவத்தில் ஆழ்ந்திருந்தாள். ஆனால் அந்த நிமிடம் அவளுடைய பாவம் இயேசுவால் மன்னி க்கப்பட்டு வெளிச்சத்திற்கு வந்தாள். இரகசியமான பாவங்கள் கூட பரலோகத்தில் வெளிச்சம் போட்டுக் காட்டப்படுகிறது. நாம் சரியான வாழ்க்கை வாழும் போது தான் நாம் மற்றவர்களுக்குத் தீர்ப்பளிக்க முடியும்.மோசேயின் நியாயப்பிரமாண சட்டத்தை இயேசு மாற்றவில்லை. அந்தப் பெண்ணுடைய பாவத்திற்கும் இயேசு வுக்குமிடையே தன்னுடைய சிலுவையை வைக்கிறார். இந்தப் பெண்ணின் பாவ த்தையும் இயேசு சிலுவையில் சுமக்கப் போகிறார். (யோவான் 8 : 3 _ 11). ஏனென் றால் இயேசு அநேகரை பாவ சாபத்திலிருந்து மீட்பதற்காகவே தன்னுடைய ஜீவனைக் கொடுத்தார். (மாற்கு 10 : 45).
முடிவுரை:
அந்தகார இருளில் வாழ்ந்து கொண்டிருந்த நம்மை ஆச்சரியமான ஒளியிடம் அழைத்து, அவரால் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசா ரியக் கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்கு சொந்த ஜனமாயும் மாற்றி னார். கிறிஸ்தவர்களுக்கு மட்டும் இயேசு வரவில்லை. முழு உலகத்திற்கும் ஒளியாக வந்தவரென்பதையும், அவர் உயித்தெழுந்ததால் நாம் பெற்றுக் கொண் டிருக்கிற நன்மைகளையும் பிறருக்கு அறிவிக்க வேண்டும். கர்த்தருக்குள் வெளி ச்சமாக இருக்கிற நாம் வெளிச்சத்தின் பிள்ளைகளாக நடந்து கொள்வோம் (எபே சியர் 5 :8 , 1பேதுரு 2 : 9). கர்த்தர் நம்மைக் கற்புள்ள கன்னிகையாக, இருளுள்ள இடத்தில் பிரகாசிக்கிற ஒளியாக, அவருடைய மணவாட்டியாக அழைத்தி ருக்கிறார்.
ஆகவே நாம் உன்னதங்களிலே அவரோடுகூட உலாவி தேவ பிரசன்னத்தையும், பிரகாசத்தையும் வெளிப்படுத்துவோம்.ஆசரிப்புக் கூடாரத்தில் வைக்கப்பட்ட விளக்கு கிறிஸ்து என்ற ஒளியைக் குறிக்கும். அடித்து உருவாக்கிய விளக்கு கிறிஸ்துவின் ஆள்தன்மையைக் குறிக்கும் (எபிரேயர் 2 : 9). தரையில் வைக்கப் பட்டிருந்த விளக்கு நமக்காகப் பூமிக்கு இறங்கி வந்த தேவகுமாரனாகிய இயேசு வைக் காட்டும். ஒலிவ எண்ணெயால் விளக்கு எரிவது போல ஆவியானவரால் நிறைந்திருப்பவர் இயேசு. இத்தன்மைகள் நிறைந்த இயேசு நம்மை மலைமேல் இருக்கிற பட்டணமாக, விளக்குத் தண்டின் மீது ஏற்றி வைத்த விளக்காக, ஒளி வீசச் செய்வார். நாம் நற் செயல்களைச் செய்யத் தவறும் போதும், தவறுகளுக்கு ஒத்துப்போகும் போதும், தவறுகளை எதிர்த்துப் பேசாத போதும், பாவத்தினால் கரைபடும் போதும், நற்செய்தியை அறிவிக்கும் வாய்ப்பைத் தள்ளி விடும் போதும், உண்மைக்காய்த் தைரியமாய் நிற்காத போதும் விளக்கை மரக்காலில் முடுகிறவர்களாக இருப்போம்.
கர்த்தருடைய பிள்ளைகள் எந்தக் காலகட்டத்திலும், எந்த சூழ்நிலையிலும் உப்பா கவும், ஒளியாகவும் உலகத்தில் திகழ வேண்டும். தேவனுக்கென்று பிரகாசிக்கும் படி அழைக்கப்பட்ட நாம் சுகபோகங்களையும், சோம்பலின் ஆவிகளையும் அதட்டி அப்புறப்படுத்தி விட்டு, கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிப்போம். வனாந்தர த்தில் நடந்த இஸ்ரவேலர்களுக்கு அக்கினி ஸ்தம்பமாக முன் சென்று இருளை அகற்றியவர், நம்முடைய வாழ்க்கையிலும் எல்லாவித இருளையும் நீக்கிப் போடுவார். எபேசியர் 5: 14 ல் கூறியுள்ளது போல தூங்குகிற நாம் விழித்து, மரித் தோரை விட்டு எழுந்து கிறிஸ்து நம்மில் பிரகாசிப்பிக்க ஒப்புக் கொடுப்போம். ஆமென்.