Menu Close

பிலேமோன்

பிலேமோன் என்ற புத்தகம் வேதாகமத்தில் உள்ள சிறிய புத்தகம். இதில் ஒரே யொரு அதிகாரம் மட்டுமே உள்ளது இதிலுள்ள வசனங்கள் 25. வேதத்திலுள்ள 66 புத்தகங்களில் சிறிய புத்தகங்கள் 6. அந்த ஆறு புத்தகங்களை வசனத்தின் அடிப்படையாகப் பார்க்கும்போது பிலோமோன் நான்காவது இடத்தில் உள்ளது. 2 யோவானில் 13 வசனங்களும், 3 யோவானில் 14 வசனங்களும், ஒபதியாவில் 21 வசனங்களும், பிலொமோனிலும், யூதாவிலும் 25 வசனங்களும் உள்ளது. இதை எழுதியவர் பவுல். கொலோசேயில் ஒரு செல்வந்தரின் குடும்பம் வாழ்ந்து கொண்டிருந்தது. அந்த செல்வந்தரின் பெயர் தான் பிலோமோன். இவனது மனைவியின் பெயர் அப்பியாள். இவனது மகனின் பெயர் அர்க்கிப்பு (கொலோசெயர் 4 : 9, பிலேமோன் 1: 2). பிலேமோன் பவுலின் சுவிசேஷத்தைக் கேட்டு அதற்குத் தன்னை அர்ப்பணித்து தேவனுடைய பிள்ளையாக மாறினவன். 

இவன் தேவனுக்கு மிகவும் பயந்தவனாகவும், எல்லோரிடமும் அன்பு செலுத்து கிறவனாகவும், சபைக்கு உதவி செய்கிறவனாகவும் வாழ்ந்து வந்தான். இவனு டைய வீட்டை சபை கூடுகைக்குத் திறந்து கொடுத்தான். லீதியாள் பிலிப்புப் பட்டணத்தில் தன்னுடைய வீட்டை சபை கூடுக்கைக்குத் திறந்து கொடுத்தாள் (அப்போஸ்தலர் 16 : 15). ஆக்கில்லா பிரிஸ்கில்லா வீட்டிலே கொரிந்து சபை செயல்பட்டது (1கொரிந்தியர் 16 : 19). ஸ்வோதிக்கேயா சபை நிம்பாவின் வீட்டில் நடந்தது (கொலோசெயற் 4 : 15). கொர்நேலியு வீட்டில் ஒரு கூட்டம் நடந்தது. அங்கு ஒரே நாளில் அங்கு வந்தவர்கள் பேதுருவின் சுவிசேஷத் தைக் கேட்டு இரட்சிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று ஞானஸ்நானம் பெற்றனர் (அப்போஸ்தலர் 10ம் அதிகாரம்). பிலேமோன் மிகுந்த செல்வந்தவனாக இருந்தபடியால் இவனது வீட்டின் அநேக வேலைக்காரர்கள் அடிமைகளாக இருந்தனர். அப்படிப்பட்ட அடிமைகளில் ஒருவன்தான் ஒநேசிமு. 

அக்காலத்தில் அடிமையென்றால் எஜமானோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கோ அல்லது வாழ்நாள் முழுவதுமா அங்கேயே தங்கியிருந்து கண்டிப்பாக வேலை பார்க்க வேண்டும். அடிமையானவன் ஏதா வது எஜமானுக்குத் துரோகம் செய்து எஜமானை விட்டுத் தலைமறைவானால் அவன் கண்டுபிடிக்கப்பட்டால் அவனுக்கு அதிக பட்சத் தண்டனையான மரண தண்டனையை வழங்குவர். இது ஒநேசிமுவுக்குத் தெரிந்தும் தன்னுடைய எஜமானுக்குத் துரோகம் செய்து அவனை விட்டு ஓடி விடுகிறான். இந்த ஒநேசிமு என்பவன் எஜமானிடமிருந்து ஏதோ களவு செய்தோ அல்லது எதோ தவறான காரியத்தைச் செய்தோ எஜமானுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டு எஜமானிடமிருந்து தப்பி ஓடி விட்டான். தப்பி ஓடியவன் ரோமாபுரிக்குச் சென்றான். 

பவுல்:

அந்த நேரத்தில் பவுல் விசாரணைக்காக சிறைக்கைதியாக ரோமாபுரியில் ஒரு வீட்டுக்குள் அடைக்கப்பட்டிருந்தார். ஒநேசிமு ரோமாபுரியிலும் தனக்குப் பாதுகா ப்பிருக்காது என்றறிந்து, தன் எஜமானிடம் செல்வாக்குள்ள பவுல் அவ்விடத் தில் கைதியாக இருப்பதைக் கேள்விப்பட்டு பவுலை சந்தித்தான். பவுல் அவனுக்கு சுவிசேஷம் அறிவித்தபோது ஒநேசிமு பாவ உணர்வடைந்தான். அவன் தான் செய்த பாவத்தையும், எஜமானுக்குச் செய்த துரோகத்தையும் பவுலிடம் தன்னுடைய வாயால் அறிக்கையிட்டான். பவுல் சிறையிலிரு ந்தாலும் தான் பத்திரமாக இருக்கிறேனே, ஆனால் ஒநேசிமுவோ அவனுடைய சரீரத்துக்கோ, ஆத்துமாவுக்கோ பாதுகாப்பற்ற நிலைமையிலுள்ள அவனைப் பார்த்து மிகுந்த வேதனையுற்றார். அந்த அடிமைக்கு அடைக்கலம் அளிப்பவர் இயேசு ஒருவரே என்று எடுத்துரைத்தார். அவனுடைய ஆத்தும மீட்பைத் பெற ஒரே வழி இயேசுவே என்று விளக்கமளித்தார். ஒநேசிமியின் மனநிலை மாறியது. பவுல் அவனது பாவ வாழ்க்கையை அறிந்தவுடன் தான் வழிநடத்தி தேவனுக்குள் கொண்டு வந்த பிலேமோன்தான் ஒநேசிமுவின் எஜமான் என்று அறிந்து கொண்டான். ஒநேசிமு தன்னுடைய தவறை உணர்ந்து தன்னுடைய எஜமானிடம் திரும்பிப் போக எண்ணினான். பவுலுக்கு அது சரியென்று பட்டது. 

பவுல் அனுப்பிய கடிதம்:

பவுல் ரோமாபுரி சிறையிலிருக்கும்போது பிலிப்பியர், எபேசியர், பிலேமோன், கொலோசேயர் என்ற நான்கு நிருபர்களை கடிதங்களாக எழுதி அனுப்பினார். அவ்வாறு எழுதிய கடிதங்களுள் ஒன்றுதான் பிலேமோன். ஒநேசிமு தன்னு டைய எஜமானிடம் மன்னிப்புக் கேட்க நினைத்தது, பவுலுக்குச் சரியாகப் பட்டதால் பிலேமோன் பவுலை ஏற்றுக்கொள்ள வேண்டியும், ஒநேசிமுவின் பிரச் சனையைத் தீர்க்கும்படுயும் எழுதிய கடிதம் இது. பாவம் செய்த அடிமையான மனிதன் எங்கு சென்றாலும் தப்பித்துக் கொள்ள முடியாது. கிறிஸ்து இயேசு வினிமித்தம் கட்டப்பட்டிருக்கிற பவுல் என்று தன்னுடைய அப்போதைய நிலையை கூறி கடிதத்தை ஆரம்பிக்கிறான். அதுமட்டுமல்லாமல் தனக்குப் பிரிய முள்ளவனும், உடன் வேலையாளுமாயிருக்கிற பிலேமோனுக்கும், அவனது மனைவியாகிய அப்பியாளுக்கும், மகனாகிய அர்க்கிப்புவுக்கும், அவனுடைய வீட்டில் கூடி வருகிற சபைக்கும் சேர்த்து எழுதுவதாகக் கூறி எழுதுகிறார். எரேமியா 31 : 20 ல் கர்த்தர் எப்பிராயீமைத் “எனக்கு அருமையான குமாரன்” என்கிறார். பவுல் கொலோசெயர் 4 : 9 ல் ஒநேசிமுவை உண்மையும், பிரியமு முள்ள சகோதரன் என்கிறார். 

பிலேமோன் எல்லா பரிசுத்தவான்களிடம் காட்டும் அன்பை அறிந்ததாகவும், இயேசுவிடம் காட்டுகிற விசுவாசத்தைக் கேள்விப்பட்டதாகவும் பவுல் கூறுகி றார். பரிசுத்தவான்களின் உள்ளங்களை அவன் இளைப்பாறப் பண்ணி, அன்பி னால் அவர்கள் சந்தோஷப்படுகிறார்கள் என்றும் அறிக்கையிடுகிறார். அதனால் பவுல் தன்னுடைய ஜெபத்தில் பிலேமோனுக்காக தேவனை ஸ்தோத்தரித்து பிலேமோனின் விசுவாசத்தின் அந்நியோன்நியம் கிறிஸ்து இயேசுவுக்காய்ப் பயன்பட வேண்டுமென்று வேண்டுவதாகக் கூறுகிறார். பிலேமோனுக்குக் கட்ட ளையிட பவுலுக்குத் தகுதியிருந்தாலும், கட்டளையிடாமல் அன்பினிமித்தம் அவனது அடிமையான ஒநேசிமுவைத் தன்மகனாகப் பாவித்து அவனுக்காக மன்றாடுகிறேன் என்றார். யூத் குலத்தில் பென்யமீன் வம்சத்தில் பிறந்த பவுல், புறஜாதியில் பிறந்து அடிமையாகக் கருதப்பட்ட ஒநேசிமுவைத் தன்னுடைய மகன் என்று அன்புகூறும் பண்பைப் பவுலிடம் பார்க்கிறோம். மேலும் பவுலோ பலசபைகளை ஸ்தாபித்தவர், பல ஊழியர்களை உருவாக்கியவர், பலரை தேவன ண்டை வழிநடத்தியவர், பிலேமோனைக்கூட தேவனண்டை நடத்தியவர். இத்தனை புகழ் பெற்றிருந்தும் ஒரு சாதாரண மனிதனிடம் மன்றாடுவதாகக் கூறுவதைப் பார்க்கும்போது அவரது தாழ்மையைப் பார்க்கிறோம். 

மேலும் அதில் “நான் பெற்ற மகனுக்காக” என்று கூறியிருக்கிறார். 1 கொரிந் தியரில் பவுல் சுவிசேஷத்தினால் “நான் உங்களை பெற்றேன்” என்று கூறியி ருப்பார். அதன் பின் பிலேமோனின் பண்புகளை எடுத்துரைக்கிறார். ஒநேசிமு என்ற பெயரின் பொருள் “உபயோகமுள்ளவன்” என்பதாகும். இந்தச் சொல்லின் பொருளைப் பயன்படுத்தி பவுல் முன்னால் உமக்குப் பிரயோஜனமில்லாதவன் என்றும், இப்பொழுது உமக்கும் தனக்கும் பிரயோஜனமுள்ளவன் என்றும் கூறுகிறார். இதேபோல் பவுல் 2 தீமோத்தேயுவில் மாற்குவை பவுல் தனக்குப் பிரயோஜனமுள்ளவன் என்கிறார். ஒநேசிமு மனந்திரும்பியதால் பயனுள்ளவ ரானான்.ரோமாபுரியில் ஒநேசிமு தன்னுடன் இருப்பது பவுலுக்கு பிரியமாயிரு ந்தது. எனினும் அவனை சட்டரீதியான எஜமானிடம் அனுப்பி வைக்கிறான். மேலும் ஒநேசிமு பட்ட கடனுக்குப் பவுல் தன்னை அர்ப்பணிக்கிறேன் என்ற தைப் பார்க்கிறோம். . அதே நேரத்தில் பிலேமோன் பவுலுக்குக் கடன் பட்டிருப் பதையும் நினைப்பூட்டுகிறான். இயேசுவானவர் தன்னுடைய மலைப் பிரசங்கத்தில், 

மத்தேயு 6 : 14, 15 “மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்.”

“மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.” யாக்கோபு தன் நிருபத்தில், 

யாக்கோபு 5 : 19, 20 “சகோதரரே, உங்களில் ஒருவன் சத்தியத்தைவிட்டு விலகி மோசம்போகும்போது, மற்றொருவன் அவனைத் திருப்பினால், தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.” என்கிறான். 

பவுல் பிலெமோனிடம் கூறுவது என்னவெனில் ஒநேசிமுவை இனிமேல் ஒரு அடிமையென்று எண்ணக்கூடாதென்றும், இனி அவன் ஒரு உடன் விசுவாசி யென்றும், பிரியமான சகோதரன் என்றும், ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுகிறார். எனவே ஒநேசிமுவை அன்புடனும், இரக்கத்துடனும், மன்னிப்புடனும் ஏற்றுக் கொள்ளுமாறு கூறுகிறார். ஒருவரை மன்னிப்பது மட்டுமின்றி மனதார அவரை ஏற்க வேண்டும். இந்தக் கடிதம் ரோமாபுரியில் பவுலுடன் இருக்கும் உடன் ஊழியர்கள் அனுப்பும் வாழ்த்துதல்களுடன் முடிவடைகிறது. இறுதியில் பவுலின் ஆசீர்வாதம் கூறப்பட்டுள்ளது. 

முடிவுரை:

ஒநேசிமு பிலேமோனால் உபசரிக்கப்பட்டு பவுலிடமே திரும்ப அனுப்பி வைத்த தாகவும், அதன்பின்பு அவர் எபேசு சபையின் மூப்பராகப் பணியாற்றினார் என்றும், செய்திகள் உண்டு. கொலோசே பட்டணத்திற்குப் பவுலின் தூதனாக அனுப்பப்பட்டதை கொலோசெயர் 4 : 9 லும் பார்க்கலாம். கிறிஸ்துவை ஏற்றுக் கொண்ட அனைவரும் அவரின் பிள்ளைகள். அவரது இரத்தத்தால் கழுவப் பட்டவர்கள். எனவே அனைவரும் சகோதர, சகோதரிகள். ஆதலால் எந்த ஏற்றத் தாழ்வும் நமக்குள் வரலாகாது. இயேசுவை ஏற்றுக்கொண்டு மனந்திரும்பு கிறவர்களை நாம் மன்னித்து ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும். நாம் கிறிஸ்துவுக்குள்ளாகும்போது நமக்குள்ள எல்லா பிரிவுகளும் தகர்த்தெறியப்படுகிறது. கிறிஸ்துவை உண்மையாக ஏற்றுக்கொண்டவர்கள் சாதி, இனம், பொருளாதார ஏற்றத்தாழ்வு, நிறம், மொழி போன்ற எதையும் பொருட்படுத்தலாகாது. 

சுவிசேஷத்தின் வாசலில் எந்த ஜாதியாருக்கும் வருக வருக என்ற வரவேற்பு உண்டு. ஆனால் சுவிசேஷ ஆலயத்தின் உள்ளே பரிசுத்த ஜாதியைத் தவிர எவருக்கும் இருப்பிடமிருக்காது. பவுலைப்போல பிறரிடம் அன்புடனும், பணிவுடனும் செயல்பட வேண்டும், பிலேமோனைப்போல நம்மாலான உதவிகளைப் பிறருக்குச் செய்ய வேண்டும். இந்நூலில் ஆவியின் கனியாகிய அன்பு (1,2,4,7,9), சந்தோஷம் (7), சமாதானம் (12), பொறுமை (12, 17), தயவு (7, 18, 19), நற்குணம் (9, 12, 20), விசுவாசம் (4, 6, 11), சாந்தம் (14), இச்சையடக்கம் (18, 19) அத்தனையும் நிறைந்திருப்பதைப் பார்க்கிறோம். இதிலிருந்து மன்னிக்கும் மனம் நமக்கு முக்கியமாக வேண்டுமென்றறிகிறோம். முறிந்த உறவுகளை சரிப்படுத்தி சிறப்புள்ளதாக்க வேண்டும். மற்றவர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். பவுல் கைதியாயிருக்கும்போதே ஆத்தும ஆதாயம் செய்தார் நாமோ சுதந்திரமாக இருக்கிறோம் எனவே கர்த்தருக்கென்று மிகுந்த ஆத்தும ஆதாயம் செய்ய வேண்டும். ஆமென்.

Related Posts