Menu Close

யாத்திராகமம் Quiz கேள்வி பதில்

யாத்திராகமம் அதிகாரம் 1 – 10 Quiz கேள்வி பதில்

  1. எகிப்து தேசம் யாரால் நிறைந்திருந்தது?
  2. எகிப்தின் புதிய ராஜன் யாரை அறியாதவனாய் இருந்தான்?
  3. எந்த பண்டசாலை பட்டணங்களை இஸ்ரவேலர் பார்வோனுக்காக கட்டினர்?
  4. சாந்தும் செங்கல் செய்யும் வேலைகளையும் கடினப்பாடுடன் செய்து வந்த இஸ்ரவேலருக்கு எது கசப்பாயிற்று?
  5. எபிரேய மருத்துவச்சிகள் பெயர் என்ன?
  6. பிறக்கும் ஆண் பிள்ளையானால் அதை என்ன செய்ய எகிப்தின் ராஜா சொன்னான்?
  7. பிறக்கும் பெண் பிள்ளைகளை என்ன செய்ய எகிப்தின் ராஜா சொன்னான்?
  8. மருத்துவச்சிகள் ராஜாவின் கட்டளைப்படி செய்யாமல் ஆண் பிள்ளைகளையும் காப்பாற்றக் காரணம் என்ன?
  9. மருத்துவச்சிகளுக்கு தேவன் என்ன செய்தார்?
  10. மருத்துவச்சிகளின்  குடும்பங்களை தேவன் தழைக்கச் செய்ய காரணம் என்ன?
  11. லேவியின் குமாரத்தி பெற்ற பிள்ளை என்ன பிள்ளை?
  12. லேவியின் குமாரத்தி பெற்ற பிள்ளையை எத்தனை மாதம் அவள் ஒளித்து வைத்தாள் ?
  13. மூன்று மாதம் ராஜாவின் கட்டளையை மறுத்து குழந்தையை உயிரோடே வைக்க காரணம் என்ன?
  14. லேவியின் குமாரத்தி பிள்ளையை ஒளித்து வைக்க கூடாமல் என்ன பெட்டியில் வைத்தாள்?
  15. நாணற் பெட்டியில் என்ன வஸ்துக்களை லேவியின் குமாரத்தி பூசினாள் ?
  16. நாணற் பெட்டியில் இருந்த பிள்ளைக்கு நேரிடுவதைப் பார்க்க பிள்ளையின் தாய் யாரை அங்கு நிறுத்தினாள்?
  17. நதியில் ஸ்நானம் பண்ண வந்த ஸ்தீரி யார்?
  18. நாணலுக்குள்ளே இருக்கும் பெட்டியைக் கண்டவள் யார்?
  19. பிள்ளையின் சகோதரி யாரைப் பார்வோனின் குமாரத்தியிடம் அழைத்து வந்தாள்?
  20. தனக்கு குமாரனான பிள்ளைக்கு பார்வோன் குமாரத்தி என்ன பெயர் சூட்டினாள்?
  21. எதனால் மோசே என்ற பெயர் வைக்கப்பட்டது?
  22. பார்வோனிடத்திலிருந்து தப்பி ஓடிய மோசே எங்கு போய் தங்கினான்?
  23. மீதியான் தேசத்து ஆசாரியனுக்கு எத்தனை குமாரத்திகள்?
  24. மீதியான் தேசத்து ஆசாரியனின் பெயர் என்ன?
  25. ரெகுவேல் தன்னிடத்தில் தங்கியிருந்த மோசேக்கு தன் குமாரத்திகளில் யாரை கொடுத்தான்?
  26. மோசேக்கு சிப்போராள் பெற்ற குமாரனுக்கு என்ன பெயர் வைத்தான்?
  27. கெர்சோம் என்பதன் பொருள் என்ன?
  28. எகிப்தின் ராஜா மரித்தபின் இஸ்ரவேல் ஜனங்கள்  எதினால் தவித்து கொண்டிருந்தனர்?
  29. இஸ்ரவேலரின் முறையிடுதல் எங்கு வந்து எட்டியது?
  30. தேவன் இஸ்ரவேல் ஜனங்களின் எதைக் கேட்டார்?
  31. தேவன் பெரு மூச்சைக் கேட்டு எதை நினைவு கூர்ந்தார்?
  32. தேவன் யாரோடு செய்த உடன்படிக்கையை நினைவு கூர்ந்தார்?
  33. மீதியான் தேசத்து ஆசாரியனும் மோசேயின் மாமனுமானவனுடைய பெயர் என்ன?
  34. மோசே யாருடைய ஆடுகளை மேய்த்து வந்தான்?
  35. மோசே ஆடுகளை  பின்புறத்தில் ஓட்டி எந்த பர்வதம் மட்டும் வந்து சேர்ந்தான் ?
  36. ஓரேப் பர்வதத்தில் கர்த்தருடைய தூதனானவன் மோசேக்கு எங்கிருந்து தரிசனமானார்?
  37. மோசே கண்ட முட்செடியின் நடுவில் எது உண்டாயிருந்தது ?
  38. அக்கினி ஜுவாலித்து எரிந்தும் எது வெந்து போகாமலிருந்தது?
  39. அக்கினி ஜுவாலித்து எரிந்தும் முட்செடி வெந்து போகாமல் இருந்ததை கண்ட மோசே அதனை எந்த காட்ச்சியாகக் கண்டான்?
  40. முட்செடியின் நடுவிலிருந்து மோசேயைக் கூப்பிட்டவர் யார்?
  41. தேவன் ஏன் மோசேயிடம் பாதரட்சையைக் கழற்றிப்போடச் சொன்னார்?
  42. தேவன் தன்னை மோசேக்கு எவ்விதம் வெளிப்படுத்தினார்?
  43. மோசே தேவனை நோக்கிப்பார்க்க பயந்ததினால் என்ன செய்தான்?
  44. இஸ்ரவேல் மக்களை விடுவிக்க இறங்கிவந்தவர் யார்?
  45. இஸ்ரவேல் புத்திரரின் கூக்குரல்  எங்கு வந்து எட்டியது?
  46. இஸ்ரவேல் புத்திரராகிய தேவ ஜனத்தை  எகிப்திலிருந்து அழைத்து வர யாரை பார்வோனிடத்தில் அனுப்ப தேவன் அழைத்தார்?
  47. தேவன் தன்னுடைய நாமத்தை எவ்வாறு வெளிப்படுத்தினார்?
  48. என்றென்றைக்கும் இருக்கும் தேவனுடைய நாமம் எது?
  49. கானானியர் ஏத்தியர் எபூசியர்   ஏமோரியர் பெர்சியர் ஏவியர் வாழும் தேசம் எது?
  50. எத்தனை நாள் பயணம் சென்று  தேவனாகிய கர்த்தருக்கு பலியிடும்படி கர்த்தர் சொன்னார் ?
  51. எகிப்தின் ராஜா எதைக் கண்டாலொழிய ஜனங்களைப் போகவிடமாட்டான் என்று தேவன் அறிவார்?
  52. மோசே எதற்கு விலகி ஓடினான்?
  53. ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்பவரின் தெய்வம் மோசேக்கு தரிசனமானதற்கு அடையாளம் எது?
  54. நான் திக்கு வாயும் மந்த நாவும் உள்ளவன் என்று கர்த்தரிடம் சொன்னவன் யார்?
  55. எதைக் கையில் பிடித்துக்கொண்டு போக மோசேயிடம் கர்த்தர் சொன்னார்?
  56. மோசேயின் கோலினால் மோசே என்ன செய்வதாக கர்த்தர் சொன்னார்?
  57. கர்த்தர் மோசேயை  எந்த இடத்தில் சந்தித்து எகிப்துக்கு திரும்பி போக சொன்னார்  ?
  58. எகிப்துக்கு போகும் போது மோசே தன் கையில் எதைப்பிடித்துக் கொண்டிருந்தான்?
  59. கர்த்தர் யாரைப் பார்த்து நீ வனாந்திரத்தில் மோசேக்கு எதிர்கொண்டு போ என்று சொன்னார் ?
  60. ஆரோன் மோசேயை எங்கு சந்தித்தான்?
  61. யேகோவா என்பதன் பொருள் என்ன?
  62. இஸ்ரவேல் ஜனங்கள் பரதேசியாய்த் தங்கின தேசம் எது?
  63. மோசே தேவனின் வார்த்தையை ஜனங்களுக்குச் சொன்ன போது ஏன் மோசேக்கு செவி கொடாமல் போனார்கள்?
  64. கர்த்தர் மோசேயைப் பார்த்து உன்னைப் பார்வோனுக்கு மேலாக யாராக ஆக்கினேன் என்றார்?
  65. இஸ்ரவேல் புத்திரரைத் தேசத்திலிருந்து அனுப்பி விடும்படி பார்வோனிடத்தில்  யார் பேசவேண்டும் என்று கர்த்தர் சொன்னார்?
  66. கர்த்தர்  மோசேயினிடத்தில் பார்வோனின் இருதயத்தை எதற்காக கடினப்படுத்துவேன் என்றார்?
  67. எகிப்தின் மீது கையை நீட்டி இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப்பண்ணும் போது எகிப்தியர் எதை அறிந்து கொள்வார்கள்?
  68. மோசே பார்வோனோடு பேசும் போது அவனுக்கு வயது என்ன?
  69. ஆரோன் பார்வோனோடு பேசும் போது அவனுக்கு வயது என்ன?
  70. பார்வோனுக்கு முன்பாகவும் அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் கோலைப் போட்ட போது என்ன நடந்தது?
  71. தங்கள் மந்திர வித்தைகளால் கோலை சர்ப்பங்களாக மாற்றினவர்கள் யார்?
  72. மந்திரவாதிகளுடைய கோல்களை யாருடைய கோல் விழுங்கிற்று?
  73. முதலாம் வாதை எது?
  74. கர்த்தர் நதியை அடித்து எத்தனை நாளாயிற்று?
  75. இரண்டாவது வாதை எது?
  76. மூன்றாவது வாதை எது?
  77. இது தேவனுடைய விரல் என்று எவர்கள் சொன்னார்கள்?
  78. நான்காவது வாதை எது?
  79. பார்வோன் எங்கு கர்த்தருக்குப் பலியிடச் சொன்னான்?
  80. ஐந்தாவது வாதை எது?
  81. கர்த்தர் யாருடைய தேவன் என்று சொல்லுகிறார்?
  82. ஆறாவது வாதை எது?
  83. எதற்காக பார்வோனை நிலைநிறுத்தினேன் என்று கர்த்தர் சொன்னார்?
  84. ஏழாவது வாதை எது?
  85. பார்வோன் கர்த்தர் எது உள்ளவர் என்றான்?
  86. எட்டாவது வாதை எது?
  87. எவைகள் பூமியின் முகம் முழுவதையும் மூடிற்று?
  88. ஒன்பதாவது வாதை எது?
  89. எத்தனை நாட்கள் காரிருள் இருந்தது?
  90. இனி என் முகத்தை காணும் நாளில் சாவாய் என்று யார் யாரிடம் சொன்னது?Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updatesதினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

    யாத்திராகமம் அதிகாரம் 11 – 20 Quiz கேள்வி பதில்

  1. பார்வோனின் ஊழியக்காரரின் பார்வைக்கும் ஜனங்களின் பார்வைக்கும் யார் மிகவும் பெரியவனாயிருந்தது?
  2. எகிப்து தேசத்தில் பெரிய அற்புதங்கள் நடைபெறுவதற்கு காரணம் என்ன?
  3. பார்வோன் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தை விட்டு விடாததற்கு காரணம் என்ன?
  4. வருஷத்தின் எந்த மாதம் பிரதான மாதம்?
  5. தெரிந்து கொள்ளப்பட வேண்டிய பஸ்கா ஆட்டுக்குட்டி எப்படி இருக்க வேண்டும்?
  6. எகிப்து தேசத்தை கர்த்தர் அழிக்க கடந்து போகும் போது இஸ்ரவேல் ஜனங்களின் வீடு என்று அடையாளம் காட்டுவது எது?
  7. பஸ்கா அனுசரிக்கும் நாள் எந்த நாளாய் இருக்கும்?
  8. புளிப்பில்லாத அப்பம் எத்தனை நாட்கள் புசிக்க வேண்டும்?
  9. எந்த நாட்களில் பரிசுத்த சபை கூட வேண்டும்?
  10. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை தலைமுறை தலைமுறை தோறும் ஆசரிக்கப்படக் காரணம் என்ன?
  11. எந்த மாதம் எந்த நாள் துவக்கி எந்த நாள் மட்டும் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்?
  12. பஸ்கா பண்டிகையான ஏழு நாளளவும் எது இஸ்ரவேலரின் வீடுகளில் இருக்கலாகாது?
  13. புளிப்புள்ளதைப் புசித்தால் அவன் என்ன செய்யப்படவேண்டும்?
  14. புளிப்பில்லாத அப்பப் பண்டிகை ஆராதனை எங்கு சென்று அனுசரிக்க வேண்டும்?
  15. பஸ்காவின் கருத்தை பிள்ளைகளுக்குச் சொல்லி எதை நினைவு கூர வேண்டும்?
  16. எப்போது கர்த்தர் சொன்னபடி தலைப்பிள்ளை சங்காரம் நடந்தது?
  17. பிசைந்த மாவை புளிக்குமுன் எதிலே கட்டி சுமந்து கொண்டு போனார்கள்?
  18. எகிப்திலிருந்து புறப்பட்ட யாக்கோபின் சந்ததியார் பிள்ளைகள் தவிர எத்தனை லட்சம் பேர்?
  19. இஸ்ரவேலர் ராம்சேசை விட்டு கால்நடையாய் நடந்து எங்கே வந்து சேர்ந்தனர்?
  20. இஸ்ரவேலர் எகிப்தில்  குடியிருந்த காலம் எத்தனை ஆண்டுகள் ?
  21. பஸ்கா விருந்தை பணத்தினால் கொள்ளப்பட்ட அடிமை எப்போது புசிக்கலாம்?
  22. இஸ்ரவேல் புத்திரரை கர்த்தர் எவ்விதம் எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினார்?
  23. இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மாதத்தில் எகிப்தை விட்டு புறப்பட்டார்கள்?
  24. எந்த நாளில் பண்டிகை ஆசரிக்க வேண்டும்?
  25. புளித்தமா எங்கு காணப்படக்கூடாது?
  26. நியாயப் பிரமாணம் எங்கு இருக்க வேண்டும்?
  27. வருஷம் தோறும் அனுசரிக்க வேண்டிய நியமம் எது?
  28. முதற்பேற்றை கர்த்தருக்குக் கொடுக்க காரணம் என்ன?
  29. பெலிஸ்தரின் பாளையம் வழி செல்லாமல் கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எந்த வழியாய் நடத்தினார்?
  30. எகிப்தைவிட்டுப்போன மோசே தன்னுடன் எதை எடுத்துக்கொண்டு போனான்?
  31. சுக்கோத்திலிருந்து புறப்பட்ட இஸ்ரவேலர் எங்கு பாளயமிறங்கினர்?
  32. இஸ்ரவேல் ஜனங்களிடமிருந்து விலகாமல் தங்கி இருந்தது எது?
  33. பாகால்செபோனுக்கு முன்பாக இருக்கிற பள்ளத்தாக்கின் பெயர் என்ன?
  34. இஸ்ரவேலைத் துரத்திப் பிடிக்க எத்தனை பிரதான இரதங்கள் ஆயத்தப்படுத்தப்பட்டது?
  35. இஸ்ரவேலின் சேனையையும் எகிப்தின் சேனையையும் ஒன்றோடு ஒன்று சேராதபடி இவர்கள் நடுவே நின்றது எது?
  36. இஸ்ரவேலருக்கு எது வலதுபுறமும் இடதுபுறமும் மதிலாக இருந்தது?
  37. எப்போது எகிப்திய சேனையை கர்த்தர் கலங்கடித்தார்?
  38. எகிப்தியருடைய  இரதங்களை கர்த்தர் எவ்விதம் நடத்தினார்?
  39. எகிப்தியருக்குச் செய்ததைக் கண்ட இஸ்ரவேலர் கர்த்தரிடத்திலும் அவருடைய ஊழியக்காரனாகிய மோசேயினிடத்திலும் என்ன வைத்தார்கள்?
  40. கர்த்தருடைய வலதுகரம் எதினால் மகத்துவம் சிறந்திருக்கிறது?
  41. கர்த்தர் தமது கோபாக்கினையை அனுப்பிய போது அது எகிப்தியர்களை எதைப்போல பட்சித்தது?
  42. ஜலம் குவியலாகவும் குவிந்தும் உறைந்தும் போக செய்தது எது?
  43. எகிப்தியர் திரளான தண்ணீரில் எதுபோல் அமிழ்ந்து போனார்கள்?
  44. கர்த்தர் மீட்டுக்கொண்ட ஜனங்களை எதினால் அழைத்து வந்தார்?
  45. பெலிஸ்தியாவின் குடிகளை எது பிடிக்கும் ?
  46. மோவாபின் பராக்கிரம சாலிகளை எது பிடிக்கும் ?
  47. ஆரோனின் சகோதரியின் பெயர் என்ன?
  48. செங்கடலைக் கடந்த இஸ்ரவேலர் எங்கு புறப்பட்டனர்?
  49. சூர் வனாந்திரத்தில் தண்ணீர் இல்லாமல் எத்தனை நாள் நடந்தனர்?
  50. தண்ணீர் கசப்பாய் இருந்ததால் அந்த இடத்திற்கு என்ன பெயர் வைக்கப்பட்டது?
  51. மரத்தின் கிளைகளை தண்ணீரில் போட்ட போது கசந்த தண்ணீர் என்ன ஆனது?
  52. மாராவிலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எங்கு வந்தார்கள்?
  53. ஏலீமில் எத்தனை பேரீச்சை மரங்களும் எத்தனை நீர் ஊற்றுகளும் இருந்தன?
  54. சீன் வனாந்திரம் எங்கு இருக்கிறது?
  55. எந்த வனாந்திரத்தில் இஸ்ரவேல் சபையார்  எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக முறுமுறுத்தனர்?
  56. சபை தேவசந்திதியில் கூடியிருக்கையில் ஆரோன் பேசிக்கொண்டிருக்க சபையார் வனாந்திர திசையாக பார்த்த போது எதைக் கண்டார்கள்?
  57. பாளயத்தை சாயங்காலம் எது மூடிக்கொண்டது?
  58. விடியற்காலத்தில் பாளயத்தை சுற்றி எது பெய்தது?
  59. என் கட்டளைகளையும் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்த மட்டும் மனதில்லாதிருப்பீர்கள் என்று ஏன் கர்த்தர் சொன்னார்?
  60. கொத்தமல்லி அளவாயும் வெண்ணிறமாயும் தேனிட்ட பணியாரத்துக்குத் தக்க ருசி உடையதுமான அப்பத்தின் பெயர் என்ன?
  61. இஸ்ரவேல் புத்திரர் எத்தனை வருஷங்கள்  மன்னாவைப் புசித்தார்கள்?
  62. சீன் வனாந்திரத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் எங்கு வந்து பாளயமிறங்கினார்?
  63. கர்த்தர் எங்கள் நடுவில் இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரை பரீட்சை பார்த்ததினிமித்தம் அந்த ஸ்தலத்திற்கு என்ன பெயர் வந்தது?
  64. ரெவிதீமில் இஸ்ரவேலரோடு யுத்தம் பண்ண வந்தவர் யார்?
  65. அமலேக்கியரோடு யுத்தம் செய்ய மோசே யாருக்குக் கட்டளை இட்டான்?
  66. யோசுவா யுத்தம் பண்ணியபோது யார் எல்லாம் மலை உச்சிக்குச் சென்றார்கள்?
  67. ரெவிதீமிலே மோசே கட்டிய பலிபீடத்துக்கு என்ன பெயரிட்டான்?
  68. கர்த்தருடைய சிங்காசனத்துக்கு விரோதமாக இருந்த கை யாருடையது?
  69. தேவன் மோசேக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் செய்த யாவையும் எகிப்திலிருந்து இஸ்ரவேல் புறப்பட்டதையும் யார் கேள்விப்பட்டார்?
  70. மோசேயின் மனைவியின் பெயர் என்ன?
  71. மாமன் சொன்னதைக் கேட்டு அப்படியே  செய்தவன் யார்?
  72. கர்த்தர் சீனாய் மலையில் பிரத்தியச்சமாய் இறங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்  ஜனங்கள் என்ன செய்யப்பட்டிருக்க வேண்டும்?
  73. பிதாக்களுடைய அக்கிரமத்தை பிள்ளைகளிடத்தில் எத்தனை தலைமுறை மட்டும்  விசாரிக்கிறவராயிருக்கிறார்?
  74. கர்த்தரின் கற்பனைகளைக் கைக் கொள்ளுகிறவர்களுக்கு எத்தனை தலைமுறை மட்டும் இரக்கம் செய்கிறார்?
  75. யாரை தேவன் தண்டியாமல் விடார்?
  76. ஓய்வு நாளை எப்படி ஆசரிக்க வேண்டும்?
  77. ஏழாம் நாளில் எதைச் செய்யக்கூடாது ?
  78. கர்த்தர் ஏழாம் நாளில் ஓய்ந்திருந்து அதை என்ன செய்தார்?
  79. பலிபீடம் எதினால் உண்டாக்கப்பட வேண்டும்?
  80. பலிபீடத்தைக் கல்லினால் கட்டினால் அந்த கல்லில் எது படலாகாது?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

யாத்தராகமம் அதிகாரம் 21 – 30 Quiz கேள்வி பதில்

  1. யாரை உயிரோடு வைக்க வேண்டாம்?
  2. கர்த்தர் ஒருவருக்கே தவிர வேறு தேவர்களுக்குப் பலியிடுகிறவன் என்ன  செய்யப்பட வேண்டும்?
  3. அன்னியனையும் விதவையையும் திக்கற்ற பிள்ளையையும் என்ன செய்க் கூடாது?
  4. குமாரரில் முதற்பேறானவனை யாருக்குக் கொடுக்க வேண்டும்?
  5. வியாச்சியத்திலே யாருடைய முகத்தை பார்க்கக்கூடாது ?
  6. எதற்குத் தூரமாய் இருக்க வேண்டும்?
  7. யாரை நீதிமான் என்று தீர்க்கக்கூடாது?
  8. பார்வையுள்ளவர்களை குருடாக்கி நீதிமான்களின் வார்த்தைகளைப் புரட்டுவது எது?
  9. யாரை ஒடுக்கக்கூடாது?
  10. எத்தனை ஆண்டுகள் நிலத்தில் பயிரிட்டு அதின் பலனை சேர்க்கலாம்?
  11. எந்த ஆண்டில் நிலம் சும்மா கிடக்கவேண்டும்?
  12. எந்த மாதத்தில் குறித்த காலத்தில் ஏழுநாள் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்?
  13. முதற் பலனை செலுத்துகிற பண்டிகையின் பெயர் என்ன?
  14. பலனைச் சேர்த்து தீர்ந்தபோது கொண்டாட வேண்டிய பண்டிகை எது?
  15. வருடத்தில் எத்தனை முறை ஆண்மக்கள் கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரவேண்டும்?
  16. நிலத்தின் முதல் விளைச்சல்களில் முதற்கனியை எங்கு கொண்டு வரவேண்டும்?
  17. எதை தன் தாயின் பாலிலே சமைக்கக்கூடாது?
  18. மோசே கட்டிய பலிபீடத்தில் சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளாக காளைகளையும் பலியிட்டவர்கள் யார்?
  19. உடன்படிக்கையை உறுதிபடுத்த மோசே என்ன செய்தான்?
  20. இஸ்ரவேலின் தேவனைத் தரிசித்தபோது எங்கே நீலக் கல்லிளைத்த வேலைக்கு ஒப்பாகவும் தெளிந்த வானத்தின் பிரபைக்கு ஒப்பாகவும் இருந்ததைக் கண்டார்கள்?
  21. சீனாய் மலையின் மேல் எது தங்கி இருந்தது?
  22. எந்த நாளில் தேவன் மேகத்திலிருந்து மோசேயை கூப்பிட்டார்?
  23. மலையின் கொடுமுடியில் கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேலருடைய கண்களுக்கு எப்படி தோன்றியது?
  24. மோசே மேகத்தின் நடுவிலே பிரவேசித்து மலையின் மேல் ஏறி எத்தனை இரவும் எத்தனை பகலும் தங்கியிருந்தான்?
  25. காணிக்கை யாரிடமிருந்து வாங்க வேண்டும்?
  26. ஆண்டவர் எங்கு வாசம் பண்ணும்படி ஒரு பரிசுத்த ஸ்தலத்தை உண்டாக்க மோசேயிடம் சொன்னார்?
  27. கர்த்தர் வாசம் பண்ணக்கூடிய ஸ்தலத்தின் பெயர் என்ன?
  28. பரிசுத்த ஸ்தலத்தில் செய்யப்பட வேண்டிய பெட்டி எந்த மரத்தினால் செய்யப்பட வேண்டும்?
  29. கர்த்தருடைய பெட்டியில் எதை வைக்க வேண்டும்?
  30. கர்த்தருடைய பெட்டியைத் தொடர்ந்து செய்ய வேண்டியது என்ன?
  31. கிருபாசனம் எதினால் செய்யப்பட வேண்டும்?
  32. கிருபாசனத்தின் நீளமும் அகலமும் எவ்வளவு?
  33. எதினால் கேருபீன்கள் செய்ய வேண்டும்?
  34. கேரூபீன்களை எங்கு வைக்க வேண்டும்?
  35. கேரூபீன்கள் எவ்வித அமைப்புடன் இருக்க வேண்டும்?
  36. கிருபாசனத்திலிருந்து கர்த்தர் யாரை சந்திப்பார்?
  37. இஸ்ரவேல் புந்திரருக்காகக் கற்பிக்கப் போகிற யாவற்றையும் கர்த்தர் எங்கு இருந்து மோசேக்குப் போதிப்பார்?
  38. கர்த்தர் வாசம் பண்ணும் ஸ்தலத்தின் மாதிரி எங்கு வைத்து மோசேக்கு காண்பிக்கப்பட்டது?
  39. பரிசுத்த ஸ்தலத்துக்கும் மகா பரிசுத்த ஸ்தலத்துக்கும் இடையில் பிரிவை உண்டாக்குவது எது?
  40. மகா பரிசுத்த ஸ்தலத்தில் சாட்சிப் பெட்டியின் மீது எதை வைக்க வேண்டும்?
  41. வாசஸ்தலத்தில் எப்போதும் எரிந்து கொண்டு இருக்க வேண்டியது எது?
  42. ஆசாரிய ஊழியம் செய்யும்படிக்கு யாரை இஸ்ரவேல் புத்திரரிடமிருந்து பிரித்து எடுக்க வேண்டும்?
  43. ஆரோனுக்கு மகிமையும் அலங்காரமுமாய் இருக்கும்படி எவ்வித வஸ்திரங்களை உண்டு பண்ண வேண்டும்?
  44. ஆரோனுக்கு உண்டாக்க வேண்டிய வஸ்திரங்களின் விவரம் யாவை?
  45. இஸ்ரவேல் புத்திரரின் நாமங்களை எந்த கற்களில் வெட்ட வேண்டும்?
  46. எத்தனை நாமங்கள் ஒரு கல்லில் இருக்க வேண்டும்?
  47. ஆரோன் பரிசுத்த ஸ்தலத்துக்குள் பிரவேசிக்கும்போது எதை ஞாபகக்குறியாக கொண்டு போக வேண்டும்?
  48. ஆரோனின் அங்கியின் தொங்கலில் தொங்க வேண்டிய பொருட்கள் யாவை?
  49. பொன்மணிகளின் சத்தம் எதை குறிப்பிடுகிறது?
  50. ஆரோனின் பாகையில் இருக்கும் பட்டத்தில் என்ன வார்த்தைகள் எழுதப்பட வேண்டும்?
  51. எது மகா பரிசுத்தமாயிருக்கும்?
  52. கர்த்தர் இஸ்ரவேலரை சந்திக்கும் இடம் எது?
  53. ஆசரிப்பு கூடாரத்தின் வாசலாகிய கர்த்தருடைய சந்நிதி எதினால் பரிசுத்தமாக்கப்படும்?
  54. தூபம் காட்டுகிறதற்கு எதை உண்டாக்க வேண்டும்?
  55. தூபபீடம் எந்த மரத்தால் செய்யப்பட வேண்டும்?
  56. தூபபீடம் எங்கே வைக்கப்பட வேண்டும்?
  57. காணிக்கை செலுத்துகிறவன் ஐசுவரியவான் என்றும் தரித்திரவான் என்றும் வித்தியாசமின்றி எவ்வளவு கொடுக்க வேண்டும்?
  58. ஆரோனும் அவன் குமாரரும் ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கும் போதும் கர்த்தருக்கு தகனத்தைக் கொழுத்தவும் பலிபீடத்தில் ஆராதனை செய்ய சேரும்போதும் ஏன் தங்களைக் கழுவ வேண்டும்?
  59. பரிசுத்த அபிஷேக தைலம் செய்ய தேவையான பொருட்கள் யாவை?

யாத்திராகமம் அதிகாரம் 31 – 40 Quiz கேள்வி பதில்

  1. பெசலெயேலின் தகப்பன் யார்?
  2. பெசலெயேல் எந்த கோத்திரத்தான்?
  3. பொன் வெள்ளி வெண்கலம் மரம் ஆகியவற்றில் சித்திர வேலை செய்ய ஞானம் உடையவனாக கர்த்தர் யாரை ஆயத்தம் பண்ணினார்?
  4. பெசலெயேலுக்கு துணையாக கர்த்தர் யாரை ஏற்படுத்தினார்?
  5. தேவன் மோசேயோடு எந்த மலையிலிருந்து பேசினார்?
  6. தேவன் மோசேயிடம் எதைக் கொண்டு எழுதிய கற்பலகைகளைக் கொடுத்தார்?
  7. தங்களுக்கு முன் செல்லும் தெய்வங்களை உண்டு பண்ண ஜனங்கள் யாரிடம் சொன்னார்கள்?
  8. கர்த்தர் மோசேயை இறங்கிப்போகச் சொல்லக் காரணம் என்ன?
  9. கானான் தேசத்துக்குப் போகச் சொன்ன ஆண்டவர் ஏன் ஜனங்களோடே வரமாட்டேன் என்கிறார்?
  10. இஸ்ரவேல் ஜனங்கள் எந்த மலையருகே தங்கள் ஆபரணங்களைக் கழற்றிப்போட்டார்கள்?
  11. தூரத்திலே போடப்பட்ட கூடாரத்துக்கு மோசே என்ன பெயரிட்டான்?
  12. ஜனங்கள் கூடாரவாசலில் எதைக் கண்டார்கள்?
  13. யாரிடம் பேசுவது போல கர்த்தர் மோசேயோடு பேசினார்?
  14. ஆசரிப்புக் கூடாரத்தைவிட்டு பிரியாதிருந்தவர் யார்?
  15. உம்முடைய மகிமையை எனக்கு காண்பியும் என்று கேட்ட மோசேக்குக் கர்த்தர் என்ன சொன்னார்?
  16. கர்த்தர் தம் மகிமையை மோசேக்கு காண்பிக்க அவனை எங்கே நிற்கச் சொன்னார்?
  17. மலையில் மோசேக்கு அருகில் எங்கு கர்த்தர் இறங்கி நின்றார்?
  18. எப்போது கர்த்தர் இரக்கமும் கிருபையும் நீடிய சாந்தமும் மகா தயையும் சத்தியமும் உள்ள தேவன் என்று கூறினார்?
  19. ஏன் ஆபிப் மாதத்தில் புளிப்பில்லா அப்பம் புசிக்க வேண்டும்?
  20. வெறுங்கையோடே எங்கு வரக்கூடாது?
  21. கர்த்தருக்கு இடும் பலியின் இரத்தத்தை எந்த மாவுடன் செலுத்த வேண்டாம்?
  22. மோசே ஜனங்களோடு பேசி முடியுமட்டும் தன் முகத்தில் என்ன போட்டிருந்தான்?
  23. எவ்வித ஸ்தீரிகள் தங்கள் கைகளினால் நூற்ற இளநீல நூலையும் இரத்தாம்பர நூலையும் சிவப்பு நூலையும் மெல்லிய பஞ்சு நூலையும் கொண்டு வந்தார்கள்?
  24. கிருபாசனத்தை உண்டு பண்ணினவன் யார்?
  25. பரிசுத்த அபிஷேக தைலத்தையும் சுத்தமான சுகந்தங்களின் தூபவர்க்கத்தையும் யாருடைய வேலைக்கு ஒப்பாக செய்யப்பட்டது?
  26. அகோலியாப் எந்த கோத்திரத்தான்?
  27. அகோலியாவின் தகப்பன் பெயர் என்ன?
  28. பரிசுத்த ஸ்தலத்திற்காகச் செய்யப்பட்டு செலவான பொன்னின் அளவு என்ன?
  29. ஆசரிப்பு கூடார மறைவின் பாதங்கள் எதினால் செய்யப்பட்டது?
  30. ஏப்போத்து செய்வதற்கு எவைகள் பயன்படுத்தப்பட்டன?
  31. ஆரோனின்  கிரீடத்தில் முத்திரை வெட்டாக வைக்கப்பட்டிருக்கும் வாசகம் என்ன?
  32. ஆசரிப்பு கூடாரத்தை என்று ஸ்தாபனம் பண்ண கர்த்தர் மோசேயிடம் சொன்னார்?
  33. ஆசரிப்பு கூடாரத்தில் எதை வைக்க வேண்டும்?
  34. பொன் தூபபீடம் எதற்கு முன்னே வைக்ப்பட வேண்டும்?

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Related Posts