ஏரோது யூதேயாவுக்கு ராஜாவாயிருக்கும் பொழுது அவனுடைய சகோதரனின் மனைவி ஏரோதியாள் தன கணவனை புறக்கணித்தாள், ஏரோது அவளை தனக்கு மனைவியாக்கிக் கொண்டான். ஏரோது அவளை அடைந்தது முறையானதல்ல என யோவான்ஸ்நானகன் கடிந்து கொண்டான். இது ஏரோதுக்கு கோபத்தை ஏற்படுத்தியதால், ஏரோது யோவானைப் பிடித்து சிறையிலடைத்தான். யோவானைக் கொலை செய்ய அவன் நினைத்தும், யோவான் தீர்கதரிசியாய் இருந்தபடியால் ஜனங்களைக் கண்டு அஞ்சினான். ஏரோது ராஜா தன் பிறந்தநாளைக் கொண்டாடிய போது அவனுடைய மகள் விருந்தினர்களுக்கு முன்பாக நடனமாடி ஏரோதைப் பிரியப்படுத்தினாள். அவள் எதைக் கேட்டாலும் தருவேன் என்று ஏரோது வாக்குக்கொடுத்தான். அவள் அவளுடைய தாயாரான ஏரோதியாள் கூறியபடியே யோவான்ஸ்நானகனுடைய தலையை ஒரு தாலந்தில் தருமாறு கேட்டாள். ஏரோது துக்கமடைந்தாலும் கொடுத்திருந்த வாக்கினிமித்தம், யோவானின் தலையை கொண்டுவருமாறு கட்டளையிட்டான் அதை அவள் தன் தாயினிடம் கொடுத்தாள். மத் 14:1