கர்த்தருடைய வழியை ஆயத்தம் பண்ண, ஜனங்களின் மனநிலையில் ஒரு அசைவு ஏற்படுத்த தேவன் ஒரு தூதனை அனுப்ப வேண்டியதாயிற்று. இதை மல்கியாவும், ஏசாயாவும் தீர்க்கதரிசனம் உரைத்தனர்.
- மல் 3:1 “இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப்போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்கு தீவிரமாய் வருவார்; இதோ, வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.”
- ஏசா 40:3-5 “கர்த்தருக்கு வழியை ஆயத்தப்படுத்துங்கள், அவாந்தரவெளியிலே நம்முடைய தேவனுக்குப் பாதையைச் செவ்வைபண்ணுங்கள் என்றும்,”
- “பள்ளமெல்லாம் உயர்த்தப்பட்டு, சகல மலையும் குன்றும் தாழ்த்தப்பட்டு, கோணலானது செவ்வையாகி, கரடுமுரடானவைச் சமமாக்கப்படும் என்றும்,”
- “கர்த்தரின் மகிமை வெளியரங்கரமாகும், மாம்சமான யாவும் அதை ஏகமாய்க் காணும், கர்த்தரின் வாக்கு அதை உரைத்தது என்றும் வனாந்தரத்திலே கூப்பிடுகிற சத்தம் உண்டாயிற்று.”
இரட்சகராகிய இயேசுவை ஏற்றுக் கொள்ளுகிறவர்களுடைய இருதயத்தில் மேற்கண்ட மாற்றங்கள் ஏற்படும். எனவே வனாந்தரத்தில் கூப்பிடுகிறவர் இயேசு ராஜா வருவதற்கு முன் வரவேண்டும்.