Menu Close

சனகெரிப் சங்கத்திடம் இயேசுவின் மூன்றாவது விசாரணை (லூக்கா 22 : 66 – 71)

விடியற்காலமானபோது இயேசுவை ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், கூடிவந்து தங்கள் ஆலோசனை சங்கத்தில் இயேசுவை கொண்டு வந்து நிறுத்தி,

லூக்கா 22 : 67, 68, 69 “நீ கிறிஸ்துவா? அதை எங்களுக்குச்சொல் என்றார் கள். அதற்கு அவர்: நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்ப மாட்டீர்கள். நான் உங்களிடத்தில் வினாவினாலும் எனக்கு மாறுத்தரம் சொல்லமாட்டீர்கள், என்னை விடுதலைபண்ணவுமாட்டீர்கள். இதுமுதல் மனுஷகுமாரன் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலதுபாரிசத்தில் வீற்றிருப்பார் என்றார்.”

இயேசுவைப் பார்த்து “ நீ கிறிஸ்துவா” என்று கேட்ட அவர்களுக்கு இயேசு தான் என்ன கூறினாலும் நீங்கள் விடுதலை பண்ணமாட்டீர்கள் என்றும் மனுஷகுமாரனாகிய தான் சர்வ வல்லமையுள்ள தேவனுடைய வலது பாரிசத் தில் உட்காரப்போவதையும், மீண்டும் மேகங்கள்மேல் வரப் போவதையும் இவ்வாறு கூறினார். இதைக் கேட்டவர்கள் மறுபடியும் “அப்படியானால் நீர் தேவனுடைய குமாரனா” என்று கேட்டார்கள். அதற்கு இயேசு ஆணித்தரமாக “நீங்கள் சொல்கிறபடி நான் தேவனுடைய குமாரனாகிய இயேசு தான்” என்று கூறினார். ஸ்தேவானைக் கல்லெறிந்து கொல்வதற்கு முன் ஸ்தேவான் அப்போஸ்தலர் 7 : 55 ல் அவன் பரிசுத்த ஆவியினால் நிறைந்து தேனுடைய மகிமையையும், தேவனுடைய வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதையும் கண்டான். பரலோகத்தில் மிகவும் கனத்துக்குரிய ஆசனம் கர்த்தரின் வலதுபாரிசம் தான் (எபிரேயர் 1 : 3).

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பூமியிலிருந்த நாட்களில் செய்த ஊழியம், நான்கு சுவிசேஷங்களிலும் கூறப்பட்டுள்ளது. இன்று அவர் பிதாவினுடைய வலது பாரிசத்தில் சிங்காசனத்தில் இருந்துகொண்டு செய்து வரும் ஆசாரிய ஊழியம் ஐந்தாவது ஊழியமாகும். மாற்கு 16 : 19 லும், இயேசு தனது சீஷர்களிடம் மாற்கு 14 : 62 லும், லூக்கா 22 : 69 லும், பேதுரு 1 பேதுரு 3 : 22 லும், பவுல் ரோமர் 8 : 34 லும், இயேசு பிதாவின் வலது பாரிசத்தில் இருப்பார் என்று கூறபட்டுள்ளது. பிதாவின் வலது பாரிசத்தில் வீற்றிருப்பாரென்பது கிறிஸ்து பெற்றுக்கொண்ட மாட்சிமையையும், அதிகாரத்தையும், ஆளுகை யையும், கனத்தையும், முக்கியத்துவத்தையும் குறிப்பிடுகிறது. இயேசு தன்னுடைய சிலுவை மரணத்தை பிதாவின் சித்தத்தின்படி சகித்ததின் விளைவாகவே இன்று அவர் தேவனுடைய சிங்காசனத்தில் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.

எபிரேயர் 1 : 3 “இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபமுமாயிருந்து, சர்வத்தையும் தம்முடைய வல்லமை யுள்ள வசனத்தினாலே தாங்குகிறவராய், தம்மாலேதாமே நம்முடைய பாவங்களை நீக்கும் சுத்திகரிப்பை உண்டுபண்ணி, உன்னதத்திலுள்ள மகத்துவமானவருடைய வலதுபாரிசத்திலே உட்கார்ந்தார்.”

எபிரேயர் 8 : 1 “பரலோகத்திலுள்ள மகத்துவ ஆசனத்தின் வலது பாரிசத்திலே உட்கார்ந்திருக்கிறவருமாய்,” 

எபிரேயர் 10 : 12 “இவரோ, பாவங்களுக்காக ஒரே பலியைச் செலுத்தி, என்றென்றைக்கும் தேவனுடைய வலதுபாரிசத்தில் உட்கார்ந்து,”

அவர்கள் அதைக் கேட்டு இனி வேறு சாட்சிகள் நமக்கு வேண்டுவதில்லை என்று சொல்லிக்கொண்டு பிலாத்துவிடம் இயேசுவை அழைத்துக்கொண்டு சென்றார்கள் (லூக்கா 22 : 70, 71).

Related Posts