Menu Close

காத்திரு

சவுல் தேவனுடைய கட்டளைப்படி சற்றே தரித்து நின்ற போது தேவ ஆலோசனை அவனுக்கு மிகத் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டது. அதற்குத் தொடர்ந்து என்ன செய்ய வேண்டுமென்றும் மிகத்துல்லியமாக அவனுக்குச் சொல்லப்பட்டது. தீர்க்கதரிசியான சாமுவேல் சவுலிடம், 

1 சாமுவேல் 10 : 8 “ நீ எனக்கு முன்னே கில்காலுக்கு இறங்கிப்போ; சர்வாங்க தகனபலிகளையும் சமாதானபலிகளையும் செலுத்தும்படிக்கு, நான் உன்னிடத்தில் வருவேன்; நான் உன்னிடத்தில் வந்து, நீ செய்யவேண்டியதை உனக்கு அறிவிக்குமட்டும், ஏழு நாள் காத்திரு என்றான்.”

நம்முடைய வாழ்க்கையிலும் தேவனுடைய நோக்கம் நம்மில் பூரணமாய் நிறைவேறும்படி, நாம் அவருடைய ஆலோசனைக்குக் காத்திருக்க வேண்டும். ஆரம்பத்தில் அனேகர் தேவ ஆலோசனையைக் கேட்கின்றனர். நாள் செல்லச் செல்ல அதை விட்டு விடுகின்றனர். ஆரம்பத்தில் சற்றே தரித்து நின்று கர்த்த ருடைய ஆலோசனையைப் பெற்று, தேவசித்தத்தின் முதல் அடியை எடுத்து வைத்தவன் சவுல். ஆனால் அதைத் தொடர்ந்து தனக்குச் சொல்லப்பட்ட கர்த்த ரின் ஆலோசனையை நிறைவேற்றத் தவறி விட்டான். பெலிஸ்தியர் இஸ்ரவே லரோடு யுத்தம் பண்ண 30000 இரதங்களோடும், 6000 குதிரைகளோடும், ஆயிரக் கணக்கான ஜனங்களோடும் மிக்மாசிலே பாளையமிறங்கினதை சவுல் பார்த்தான். 

சாமுவேல் குறித்த ஏழாம் நாள் வரை காத்திருந்தான், சாமுவேல் வரத் தாமதித் ததாலும், ஜனங்கள் சவுலை விட்டுச் சிதறிப் போனதினாலும், ஏழாம் நாளில், சூழ்நிலையின் நெருக்கத்தின் நிமித்தம் மனம் பதறி துணிந்து துரிதமாகச் செயல்பட்டான். சர்வாங்க தகனபலியையும், சமாதானப் பலிகளையும் சவுலே செலுத்தினான். தான் பெலிஸ்தியருடன் படையெடுக்கச் செல்லும்முன் கர்த்தருக்குப் பலிகளைச் செலுத்த வேண்டுமே என்று அவசரப்பட்டிருக்கலாம். கர்த்தர் சொன்னால் சொன்ன வார்த்தையை நிறைவேற்றுவார் என்று காத்திருக்கத் தவறி விட்டான். அவன் பலியிட்டு முடித்த போது சாமுவேல் தீர்க்கதரிசி அங்கு வந்தான். சாமுவேல் தீர்க்கதரிசி சவுலைப் பார்த்து அவன் செய்தது மதியீனமான செயல் என்று கடிந்து கொண்டார். கர்த்தர் இட்ட கட்டளையை கைக்கொள்ளாததாலும், காத்திருக்காததாலும் சவுலின் இரா ஜ்ஜியபாரம் கர்த்தரின் இருதயத்திற்கேற்ற ஒரு மனுஷனைத்தேடிச் சென்றது (1சாமுவேல் 13 : 8 _ 12). 

ஆபகூக் 2 : 3 “ குறித்தகாலத்துக்குத் தரிசனம் இன்னும் வைக்கப் பட்டிருக்கிறது; முடிவிலே அது விளங்கும், அது பொய் சொல்லாது; அது தாமதித்தாலும் அதற்குக் காத்திரு; அது நிச்சயமாய் வரும், அது தாமதிப்பதில்லை.”

ஏனெனில் கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள் புதுப்பெலனடைத்து, கழுககளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள் என்றும், அவர்கள் ஓடினாலும் இளைப்படைய மாட்டார்கள் என்றும்,, நடந்தாலும் சோர்ந்து போக மாட்டார்கள். என்றும் ஏசாயா 40 : 31 ல் ஏசாயா தீர்க்கதரிசி கூறியிருப்பதைப் பார்க்கிறோம். மேலும் சாலமோன் ராஜா நீதிமொழிகள் 20 : 22 ல் கர்த்தருக்கு காத்திருக்கும் போது அவர் நம்மை இரட்சித்து வழிநடத்துவார் என்று கூறியுள்ளார். எனவே நாம் கர்த்தருக்கு காத்திருந்து அவருடைய பெலனையும், இரட்சிப்பையும் பெற்றுக்கொள்ள வாஞ்சிப்போம். ஆமென்.

Related Posts