”புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக் கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்” (நீதிமொழிகள் 14:1).
வீடு கட்டப்பட, வீட்டில் சமாதானம் விளங்கப் புத்தியுள்ள ஸ்திரீ அங்கே அவசியம். ஞானமாய் குடும்பத்தை நடத்திச் சென்று வரவுக்கு ஏற்ற கெ செய்து கணவனையும் பிள்ளைகளையும் பேணி காக்கும் புத்தியுள்ள ஸ்திரீ குடும்பத்திற்கு மிகவும் தேவை. ”தற்காத்து தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண்” என்றார் திருவள்ளுவர்.
இன்று திருமணம் என்பது வியாபார சந்தையாகிவிட்டது. தரகர்கள் இடையிலே புகுந்து அங்கே பத்து லட்சம் கிடைக்கும், இங்கே ஒரு லட்சம் தங்க ஆபரணங்கள் கிடைக்கும் என்று ஆசைக்காட்ட முடிவிலே கொஞ்சமும் புத்தியில்லாத உலகப்பிரகாரமான பெண்ணை தெரிந்தெடுத்து வாழ்நாளெல் லாம் வேதனைப்படுகிறார்கள். நீதிமொழிகளின் புத்தகத்திலே அநேக ஸ்திரீகளைக் குறித்து எழுதியிருக்கிறது. அதிலே புத்தியுள்ள ஸ்திரீ மிகவும் முக்கியமானவள். புத்தியில்லாமல் மனம்போல வாழ்கிற பெண்களால் அநேக குடும்பங்கள் உடைந்து போய் வருகிறது.
இரண்டாவதாக குணசாலியான ஸ்திரீயைக் குறித்து நீதி.31 ஆம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். பெண் தேடும் இளைஞர்களும் இந்த அதிகாரத்தை திரும்பத் திரும்ப வாசிக்க வேண்டியது மிகவும் அவசியம். குணசாலியான ஸ்திரீயை கண்டு பிடிப்பவன் யார்? அவளுடைய விலை முத்துக்களைப் பார்க்கிலும் உயர்ந்தது. குணசாலியான ஸ்திரீயைக் குறித்து இந்த வேதபகுதி மிக அழகாக, அருமையாக விளக்கிச் சொல்லுகிறது.
மூன்றாவதாக சாந்தகுணமுள்ள ஸ்திரீ என்று 1 பேது.3:4-லே வாசிக்கிறோம். ”அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக் கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது. இப்படியே பூர்வத்தில் தேவனிடத்தில் நம்பிக்கையாயிருந்த பரிசுத்த ஸ்திரீகளும் தங்களுடைய புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்து தங்களை அலங்கரித்தார்கள்” (1 பேது. 3:4,5).
நான்காவதாக கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீ என்று நீதி.31:30-லே வாசிக்கிறோம். ‘சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்.” ஒரு பெண் தேவபக்தி உள்ளவளாக இருந்தால்தான் பிள்ளைகளையும் பக்தி மார்க்கத்திலே வளர்க்க முடியும். கணவனையும் இரட்சிப்பிற்குள்ளே கொண்டு வர முடியும். கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீ பாவத்திற்கு விலகுவாள். நற்கிரியைகளைச் செய்வாள். கர்த்தருக்கும் இனத்தவர்களுக்கும் பிரயோஜனமான வாழ்க்கை வாழ்வாள்.
ஐந்தாவதாக மனப்பூர்வமுள்ள ஸ்திரீ புருஷர் யாவரும், அஸ்தகடகங்கள், காதணிகள், மோதிரங்கள், ஆரங்கள் முதலான சகலவித பொன்னாபரணங் களையும் கொண்டு வந்தார்கள்” (யாத்.35:22). மனப்பூர்வமான ஸ்திரீகள் கர்த்தருக்கென்று மகிழ்ச்சியோடு கொடுக்கிறார்கள். கர்த்தருடைய ஊழியங் களைத் தாங்குகிறார்கள். ஊழியங்களுக்காக ஊக்கமாக ஜெபிக்கிறார்கள். உன்னதமான தேவனுடைய ஊழியத்திலே அவர்களுக்கு மிகுந்த பங்குண்டு.