- ஆதியாகமம் 12 : 2 “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் .”
- ஆதியாகமம் 17 : 2 “கர்த்தர் உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவார்.”
- எண்ணாகமம் 6 : 24, 25, 26 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.”
“கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன் மேல் கிருபையாயிருக்கக்கடவர்.”
“கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.” - உபாகமம் 1 : 11 “நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.”
- உபாகமம் 7 : 14 “சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய்;”
- உபாகமம் 15 : 5 “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.”
- உபாகமம் 28 : 3, 4, 5 “நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.”
“உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.”
“உன் கூடையும், மாபிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிரு க்கும்.” - உபாகமம் 26 : 19 “நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைபார்க்கிலும் புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்.”
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates
தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்
- உபாகமம் 28 : 8 “கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.”
- சங்கீதம் 20 : 4 “கர்த்தர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.”
- சங்கீதம் 37 : 4 “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”
- சங்கீதம் 91 : 11 “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.”
- சங்கீதம் 118 : 24 “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.”
- ஏசாயா 45 : 4 “வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்.”
- ஏசாயா 58 : 11 “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீர்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீருற்றைப்போலிருப்பாய்.”
- ஆகாய் 2 : 19 “நான் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
- எபிரேயர் 6 : 14 “நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்.”
- 3 யோவான் 2 “உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.”
Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates