Menu Close

பிள்ளைகளுக்கான ஜெபக்குறிப்புகள்

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்காக ஒவ்வொரு நாளும் ஜெபிப்பது மிகவும் அவசியம். கீழ்காணும் ஜெபக்குறிப்புகளை வைத்து தினமும் ஒவ்வொரு பெற்றோரும் மறக்காமல் ஜெபம் செய்யுங்கள்.

  • பிள்ளைகளெல்லாரும் கர்த்தரால் போதிக்கப்பட்டிருக்கும்படி ஜெபிப்போம் – ஏசாயா 54:13
  • ஞானமுள்ள போதகத்தைக் கேட்கவும் கடிந்துகொள்ளுதலுக்குச் செவிகொடுக்கவும் ஜெபிப்போம் – நீதிமொழிகள் 13:1
  • பிள்ளைகளுடைய சமாதானம் பெரிதாயிருக்கும்படி ஜெபிப்போம் – ஏசாயா 54:13
  • கீழ்ப்படிகிற பிள்ளைகளாக இருக்கவும், மாம்சத்தின் இச்சைகளுக்கு இடம்கொடாமலிருக்கவும் ஜெபிப்போம் – 1 பேதுரு 1:14
  • நடக்கைகளெல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருக்கும்படி ஜெபிப்போம் – 1 பேதுரு 1:15
  • திருவசனமாகிய களங்கமில்லாத ஞானப்பாலின்மேல் வாஞ்சையாயிருக்கும்படி ஜெபிப்போம் – 1 பேதுரு 2:3
  • கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும், கோபிக்கிறதற்குத் தாமதமாயுமிருக்கும்படி ஜெபிப்போம் – யாக்கோபு 1:19
  • பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுகிறவர்களாய் இருக்கும்படி ஜெபிப்போம் – எபிரெயர் 13:5
  • நன்மைசெய்யவும், தானதர்மம்பண்ணவும் மறவாதவர்களாய் இருக்கும்படி ஜெபிப்போம் – எபிரெயர் 13:16
  • இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருகிறவர்களாய் இருக்கும்படி ஜெபிப்போம் – 2 பேதுரு 3:18
  • இன்னின்ன பிரகாரமாய் நடக்கவும், தேவனுக்குப் பிரியமாயிருக்கவும் ஜெபிப்போம் – 1 தெசலோனிக்கேயர் 4:1
  • மூப்பருக்குக் கீழ்ப்படிந்து, ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையாய் இருக்கும்படி கிருபைக்காக ஜெபிப்போம் – 1 பேதுரு 5:5
  • திருவசனத்தைக் வாஞ்சையோடு கேட்கிறவர்களாகவும், அதின்படி செய்கிறவர்களாகவும் இருக்கும்படி ஜெபிப்போம் – யாக்கோபு 1:22
  • விசுவாசத்தின் அந்நியோந்நியம் கிறிஸ்து இயேசுவுக்காகப் பயன்படவேண்டுமென்று ஜெபிப்போம் – பிலேமோன் 1:6
  • பயமுள்ள ஆவி இல்லாமல் பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியை தருமாறு ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 1:7
  • எல்லாத் தீமையினின்றும் இரட்சித்து, பரம ராஜ்யத்தை அடையும்படி ஜெபிப்போம் 2 தீமோத்தேயு 4:18
  • அந்நியனுக்குப் பின்செல்லாமலும், அந்நியருடைய சத்தத்தை அறியாதவர்களாய் இருக்கும்படி ஜெபிப்போம் – யோவான் 10:5
  • சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்கலாயும், நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படிக்கும் ஜெபிப்போம் – 2 தீமோத்தேயு 2:22
  • சபித்தல் அவர்கள் வாயிலிருந்து புறப்படாதபடிக்கு ஜெபிப்போம் – யாக்கோபு 3:10
  • பாவஞ்செய்யாதபடிக்கு, பொல்லாங்கன் தொடாதபடிக்கு ஜெபிப்போம் – 1 யோவான் 5:18
  • வழிகளிலெல்லாம் காக்கபடும்படி, தேவனுடைய தூதர்களுக்குக் அவர் கட்டளையிடும்படி ஜெபிப்போம் – சங்கீதம் 91:11
  • வசனத்தைக் கைக்கொள்ளுகிறவர்களாய் மற்றும், தேவ அன்பு மெய்யாகப் பூரணப்பட்டிருக்கும்படிக்கும் ஜெபிப்போம் – 1 யோவான் 2:5
  • தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்றுகிறவர்களாய் வாழும்படி ஜெபிப்போம் – 3 யோவான் 1:11
  • அவர் ஒளியிலிருக்கிறதுபோல நம் பிள்ளைகளும் ஒளியிலே நடக்கும்படி ஜெபிப்போம் – 1 யோவான் 1:7
  • கைகளைச் சுத்திகரித்து, இருதயங்களைப் பரிசுத்தமாக்கும்படி ஜெபிப்போம் – யாக்கோபு 4:8
  • நல்மனச்சாட்சியுள்ளவர்களாய் எல்லாவற்றிலும் யோக்கியமாய் நடக்க விரும்புகிறவர்களாய் இருக்கும்படி ஜெபிப்போம் – எபிரெயர் 13:18
  • தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறும்படி ஜெபிப்போம் – நீதிமொழிகள் 3:4

 

Related Posts