Menu Close

பிறவிக் குருடனை இயேசு குணமாக்கியது – யோவான் 9 : 1 – 7

இயேசு தேவாலயத்தை விட்டுப் போகையில் பிறவிக்குருடனாகிய ஒருவவனைக் கண்டார். அப்பொழுது சீசர்கள் இயேசுவிடம் “இவன் குருடனாய்ப் பிறந்தது யார் செய்த பாவம், இவன் செய்த பாவமா இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமா “ என்று கேட்டனர். இயேசு அதற்கு “அது இவன் செய்த பாவமுமல்ல, இவனைப் பெற்றவர்கள் செய்த பாவமுமல்ல தேவனுடைய கிரியைகள் இவனிடத்தில் வெளிப்படும் பொருட்டு இப்படிப் பிறந்தான்” என்றார். பாவத்தினால் வரும் சாபங்கள் அடுத்த ஓரிரு தலைமுறைகளைத் தாக்குவது உண்மை தான். (யாத் 20 : 5) ஆனால் எல்லா நோய்களும், பெலவீனங்களும், குறைவுகளும், பாடுகளும் போராட்டங்களும் பாவத்தினால் வந்தது என்று கூற முடியாது. சீஷர்களின் தவறான நம்பிக்கையை இயேசு திருத்தினார். சில வேளைகளில் ஒரு தீய பாவத்தினால் வியாதி வரலாம். (யோ 5 : 14)

எப்போதும் அப்படி வருவதில்லை. சில சமயங்களில் துன்பம் தேவனால் அனுமதிக்கப்
படுகிறது. காரணம் அது தேவனுடைய திட்டம். அவன் விடுதலை பெறும்போது தேவனுடைய நாமம் மகிமைப் படுத்தப்படுகிறது. இயேசு தரையிலே துப்பி, உமிழ்நீரினால் சேறுண்டாக்கி, அந்தச் சேற்றைக் குருடனுடைய கண்களில் பூசி: சீலோவாம் குளத்தில் கழுவச்சொன்னார். குருடன் அவர் சொன்னபடியே போய்க்கழுவி பார்வையடைந்தான்.

Related Posts