இயேசு ஜெபஆலயத்தில் பிரவேசித்தபோது அங்கு சூம்பின கையையுடைய ஒரு மனுஷன் இருந்தான். அவன் இயேசுவைப் பார்த்து என் கையை சரியாக்கும் என்று
கேட்க வில்லை. இயேசு அந்த மனுஷனை நோக்கி “உன் கையை நீட்டு” என்றார். அவன் “என் கையோ சூம்பின கையல்லவா எப்படி நீட்ட முடியும்” என ஒரு வார்த்தை கூட சொல்லாமல் இயேசு கூறியவுடன் அவருடைய வார்த்தைக்குக் கீழ்படிந்து உடனே நீட்ட முயற்சித்தான். உடனே சூம்பின கையோ மறுகையைப் போல சொஸ்தமாயிற்று. பரிச்சேயர்கள் இந்த அற்புதத்தை ஓய்வுநாளில் செய்ததால் அவரைக் கொலை செய்யும்படி ஆலோசனை பண்ணினார்கள். இயேசு அதை அறிந்து அவர்களைப் பார்த்து, “உங்களுக்குள்ள ஒரு ஆடு ஓய்வுநாளில் குழியில் விழுந்தால் அதைப் பிடித்து தூக்கி விடமாட்டீர்களோ? அதைப் பார்க்கிலும் மனுஷன் எவ்வளவோ விசெஷித்தவன் என்றும், ஆதலால் ஓய்வுநாளில் நன்மைசெய்வது நியாயந்தான்” என்று கூறி அவ்விடத்தை விட்டுப் போனார்.