Menu Close

லோத்துவும் குடும்பமும்

லோத்தின் குடும்ப வரலாறு:

ஆபிரகாமுக்கு நாகோர், ஆரான் என்ற இரண்டு சகோதரர்கள் இருந்தனர் (ஆதியாகமம் 11 : 26). ஆரானின் மகன்தான் லோத்து. ஆரான் இறந்து விட்டதால் ஆபிரகாம் லோத்தைத் தன்னோடு வைத்திருந்தான். கர்த்தர் ஆபிரகாமிடம் அவனுடைய தேசத்தையும், இனத்தையும் விட்டு தான் காண்பிக்கும் தேசத்துக்குப் போகச் சொன்னார். எனவே கர்த்தரின் சொற்படி தன் தந்தையோடும், தன்னுடைய மனைவியோடும் லோத்துவோடும் ஊர் என்கிற கல்தேயரின் பட்டணத்தை விட்டுப் புறப்பட்டனர். ஆபிரகாமின் தந்தையான தேராகு ஆரானிலே மரித்து விட்டதால் லோத் கூடவே வந்தார். ஆபிரகாம் மோரே என்னும் சமபூமியில் தங்கிய போதும், எகிப்துக்குச் சென்ற போதும், கடைசியாக பெத்தேல் வந்த போதும் லோத்துவும் கூடவே வந்தான். லோத்துவுக்கு ஒரு மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் இருந்தனர். 

லோத் ஆபிரகாமை விட்டுப் பிரிதல்: ஆதியாகமம் 13 : 8 – 12 

ஆபிராம் எண்ணிலடங்கா மிருகஜீவன்களும், வெள்ளியும், பொன்னுமான ஆஸ்திகளையுடைய சீமானாயிருந்தான் (ஆதியாகமம் 13 : 2). அதேபோல் லோத்தையும் கர்த்தர் ஆசீர்வதித்ததினால் ஆடுமாடுகளும், கூடாரங்களும் இருந்தன (ஆதியாகமம் 13 : 5). இத்தனை தூரம் பிரயாணம் பண்ணி யும் எந்தப் பிரச்சனையுமில்லை. ஆனால் கானானியரும், பெர்சியரும் குடியிருந்த அந்தத் தேசத்தில் இருவரும் வாசம் பண்ணைக் கூடாததாயிருந்தது. இருவருக்கும் மந்தை பெருகின போது ஆபிரகாமுடைய மந்தை மேய்ப்பருக்கும், லோத்து வினுடைய மந்தை மேய்ப்பருக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று. எனவே, ஆபிராம் லோத்திடம், சமாதானமாக நம்மிருவருக்கும் இடையிலோ, உனது ஆட்களுக்கும் எனது ஆட்களுக்கும் இடையிலோ இனி மேல் எந்தவித வாக்குவாதமும், விரோதமும் வேண்டாம். நாம் சகோதரர்கள் ஆகையால் சமாதானமாகப் பிரிந்து விடுவோம் என்றான் . மேலும் லோத்துவிடம் உனக்கு விருப்பமான எந்த இடத்தையும் நீ தேர்ந்தெடுத்துக் கொள் என்றும். நீ இடது பக்கமாகப் போனால் நான் வலது பக்கமாகப் போகிறேன். நீ வலது பக்கமாகப் போனால் நான் இடது பக்கமாகப் போகிறேன்” என்றும் கூறினான். 

வாய்ப்பு கிடைத்தவுடன் லோத்து மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டான். லோத்து யோர்தான் நதிக்கு அருகான சமவெளியைப் பார்த்து அங்கு நீர் வளம் இருப்பதையும், அது கர்த்தரின் தோட்டத்தைப் போலவும் எகிப்து தேசத்தைப் போலவும் இருந்ததையும் கண்டான். எனவே லோத்து யோர்தான் சமவெளியைத் தேர்ந்தெடுத்தான். ஆனால் லோத்து தெரித்தெடுத்த அந்த இடத்தில் தேவ பிரசன்னமோ, பரிசுத்தமோ, தேவநீதியோ ஏதுமில்லை. இருவரும் பிரிந்தனர். லோத்தின் மனைவி கணவனின் யோசனையை மாற்ற எந்த முயற்சியும் எடுக்கவில்லை. லோத்து கிழக்கு நோக்கிப் பயணம் செய்தான். ஆபிராம் கானான் தேசத்தில் தங்கினான். லோத்து மேலும் தெற்கு நோக்கி நகர்ந்து சோதோமில் கூடாரம் அடித்தான். லோத்து சோதோம் ஜனங்கள் கர்த்தருக்கு எதிராகப் பாவம் செய்து கொண்டிருந்தனர் என்பதை அறிந்திருந்தார்.

ஆபிரகாம் லோத்தை மீட்டது:

சிநெயாரின் ராஜா, ஏலாசாரின் ராஜா, ஏலாமின் ராஜா, ஜாதிகளின் ராஜா ஆகிய நால்வரும், சோதோமின் ராஜாவோடும், கொமோராவின் ராஜாவோடும், அத்மாவின் ராஜாவோடும், செபோயீமின் ராஜாவோடும், பேலாவின் ராஜா வோடும் போர்புரிந்தனர். அதில் சோதோம், கொமோராவின் ராஜாக்கள் முறிந் தோடியதால் ஜெயித்தவர்கள் சோதோமிலுள்ள, கொமோராவிலுள்ள பொருட் களையும், போஜன பதார்த்தங்களையும் கொள்ளையடித்துச் சென்றனர். அப்பொழுது லோத்தையும், அவனுடைய பொருட்களையும் சிறைப்பிடித்துக் கூட்டிப்போனார்கள். இதை யாரோ ஒருவன் சீகேமிலிருந்து வந்து ஆபிரகாமி டத்தில் லோத்தைச் சிறை பிடித்துக் கூட்டிப்போன செய்தியைக் கூறினான். அதைக் கேட்ட ஆபிரகாம் தன்னுடைய வீட்டிலுள்ள 318 ஆட்களுடன் போய் போரிட்டு நான்கு ராஜாக்களையும் வென்று தன் சகோதரனான லோத்தையும், அவனுடைய பொருட்களையும் ஸ்திரீகளையும், ஜனங்களையும் திருப்பிக் கொண்டு வந்தான். 

தூதர்களைக் கர்த்தர் சோதோம், கொமோராவை அழிக்க அனுப்பியது: 

சோதோம் கொமோராவின் பாவம் தேவசந்நிதியில் எட்டினதினால் கர்த்தர் அதை அழிக்கச் சித்தம் கொண்டு, தன்னுடைய தூதர்களை அனுப்பினார். அப்பொழுது லோத்து சோதோமின் வாசலில் அமர்ந்திருந்தார். அவர்களைக் கண்ட லோத்து தரைமட்டும் குனிந்து அவர்களை வரவேற்று தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்குப் புளிப்பில்லாத அப்பங்களைச் சுட்டு விருந்து பண்ணினான். தூதர்கள் லோத்தின் வீட்டில் படுக்கைக்குச் செல்லு முன் சோதோமிலுள்ள வாலிபர் முதல் கிழவர் வரையுள்ள ஜனங்கள் நாலா திசையிலிருந்தும் வந்து, வந்த விருந்தினர்களை அவர்கள் அறிய வெளியே கொண்டு வரச் சொல்லிக் கூக்குரவிட்டனர். சோதோமின் முக்கிய பாவம் ஓரின சேர்க்கை. சிறியோர் முதல் பெரியோர் வரைப் பாவம் செய்வதில் வித்தியாசமில்லை. ஆபிரகாமிடம் தேவன் அங்கு பத்து நீதிமான் கள் இருந்தால் தான் அதை அழிப்பதில்லை என்று வாக்களித்தார். ஆனால் அங்கு பத்து நீதிமான்கள் கூட இல்லை. ஏனெனில் ரோமர் 3 : 23 ல் கூறியி ருப்பது போல் எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களாக இருந் தனர். அதைக் கேட்ட லோத்து வீட்டை விட்டு வெளியே வந்து கதவைப் பூட்டி அவர்களிடம் எந்த அக்கிரமமும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டான். அவர்கள் கேட்காததால் தன்னுடைய இரண்டு கன்னிப் பெண்க ளையும் உங்களிடத்திற்கு அனுப்புகிறேன் அவர்களை உங்கள் இஷ்டப்படி செய்யுங்கள் என்றார். லோத்து தன்னிடத்தில் வந்த முன்பின் அறியாத 2 புருஷர்களைக் காப்பாற்றுவதற்காகக் காமவெறி பிடித்த சோதோம் நகர மக்க ளிடம் தன்னுடைய இரண்டு கன்னிப் பெண்களையும் கற்பழிக்கப் படவும், கெடுத்து சீரழிக்கப்படவும் அனுப்புவதற்கு உண்மையிலேயே லோத்து முழு மனதுடன் சம்மதித்தானா என்பது தெரியவில்லை. அவர்கள் அதைக் கேட்கா மல் “ பரதேசியாய் எங்கள் இடத்துக்கு வந்த நீ நீதி நியாயம் பேசுகிறாயா என்றும் அவர்களை விட உனக்கு அதிக பொல்லாப்பு செய்வேன்” என்றும் சொல்லி, லோத்தின் வீட்டின் கதவை உடைக்க முயன்றார். வீட்டிற்குள் இருந்த தூதர்கள் இவைகள் அனைத்தையும் கேட்டுத், தங்களுடைய கையை வெளியே நீட்டி, லோத்தை வீட்டுக்குள் இழுத்துக், கதவைப் பூட்டி, வீட்டைச் சுற்றியிருந்த அனைவரின் கண்களையும் குருடாக்கினார்கள். அப்பொழுது வெளியே நின்றவர்கள் வாசலைத் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் அலுத்துப் போனார்கள். 

தூதர்களும் லோத்தின் குடும்பமும்:

தூதர்கள் லோத்துவிடம் அப்பொழுது “இந்த ஜனங்களின் கூக்குரல் கர்த்தரு டைய சமூகத்தில் எட்டியதால், தாங்கள் இந்த ஸ்தலத்தை அழிப்பதற்காகக் கர்த்தர் தங்களை அனுப்பியிருப்பதாகக் கூறினார்கள்”. தூதர்கள் லோத்துவி டம் இந்த ஸ்தலத்தில் உனக்குரிய எவர்களாவது இருந்தால் அவர்களையும் இந்த ஸ்தலத்திலிருந்து வெளியே அழைத்துக் கொண்டு போ என்றார். உடனே லோத்து தன்னுடைய குமாரத்திகளை விவாகம் பண்ணப் போகிற வர்களோடு பேசி புறப்படக் கூறினார். ஆனால் அவர்கள் பரியாசம் பண்ணு வதாக எண்ணினர். அவர்கள் தாமதப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்த்த தேவதூதர்கள் நீங்கள் அழியாதபடி உங்கள் குடுப்பத்துடன் வெளியே போங்கள் என்று துரிதப்படுத்தினர். அவர்களோ வீடு, தோட்டம், துறவு, கால்நடைகளை விட்டு எப்படிப் போவது என்று நினைத்து தாமதப்படுத்தினர். நேரம் போய்க் கொண்டிருந்ததால் கர்த்தர் அவர்கள் மீது வைத்திருந்த இரக்கத்தினால் தூதர்கள் லோத்தின் கையையும், அவனுடைய மனைவியின் கையையும், இரண்டு பெண் பிள்ளைகளின் கையையும் பிடித்து வெளியே கொண்டு போய் விட்டார்கள். உடுத்தின துணியோடு நால்வரும் அங்கிருந்து கிளம்பினார்கள். கர்த்தர் பாவத்தைக் கண்டும் காணாதவர் போல் இருக்கிறவர் அல்ல. அவர் ஒவ்வொரு தீமையையும், அநீதியையும் ஒழுக்கக்கேட்டையும், வேசித்தனத் தையும் பார்க்கிறார் (ஆதியாகமம் 4 : 10, 18 : 20, சங்கீதம் 34 : 17, யாக்கோபு 5 : 4). சரியான நேரத்தில் ஒருவன் மனந்திரும்பாவிட்டால் கர்த்தர் அதைக் கண்டி த்து நியாயந்தீர்ப்பார். ஆபிரகாம் லோத்து, அவனது உறவினர் மீதுள்ள அக்க ரையில் கர்த்தர் அந்த நகரத்தை அழிக்கக் கூடாதென்று வேண்டிக் கொண்டான் (ஆதியாகமம் 18 :18 :23 – 32). தேவன் ஆபிரகாமின் வேண்டுதலைக் கேட்டு லோத்தையும் குடும்பத்தையும் அந்த அழிவிலிருந்து தப்புவித்தார். கர்த்தர் நீதிமான்களைக் காப்பாற்றுகிறார். அக்கிரமக்காரர்களை அழித்துப் போடுகிறார். இதைத் தான் பேதுரு தன்னுடைய நிருபத்தில்,

2பேதுரு 2:7,8“அக்கிரமக்காரருக்குள் வாசமாயிருக்கையில் அவர்களுடைய காமவிகார நடக்கையால் வருத்தப்பட்டு; நாள்தோறும் அவர்களுடைய அக்கிரமக்கிரியைகளைக் கண்டு கேட்டு நீதியுள்ள தன்னுடைய இருதயத்தில் வாதிக்கப்பட்ட நீதிமானாகிய லோத்தை அவர் இரட்சித்திருக்க;” 

அதன் பின் தேவதூதர்கள் அவர்களுக்கு நான்கு கட்டளைகளைக் கூறுகின்ற னர். 1.ஜீவன் தப்ப ஓடிப் போங்கள். 2. பின்னிட்டுப் பார்க்க வேண்டாம். 3. இந்தச் சமபூமியில் எங்கும் நிற்க வேண்டாம் 4. அழியாதபடி மலைக்கு ஓடிப் போங்கள் என்றார்கள். அதற்கு லோத்து “உமது கண்களில் கிருபை கிடைத்தது என்று நன்றி சொல்லி விட்டு, மலைக்குத் தன்னால் ஓடிப்போக முடியாது ஏனெனில் அங்கு தீங்கு தன்னைத் தொடரும் என்றும், தான் அவ்வாறு போனால் மரித்துப் போவேன் என்ற நம்பிக்கையிழந்த வார்த்தைகளைக் கூறினான். மோசே கர்த்த ரின் வார்த்தையின்படி மலை மேலேறிச் சென்றதால் தான், கர்த்தர் அவனிடம் தன்னுடைய கையால் எழுதின நியாயப்பிரமாணத்தின் கட்டளைகளைப் பெற்றான். இயேசு மலைக்குச் சென்று மறுரூபமானதை, மலைக்கு அவருடன் சென்ற பேதுரு, யாக்கோபு, யோவான் மூன்று பேரும் தரிசித்தார்கள். மலைக்குப் போகச் சொன்ன கர்த்தர் அங்கு போய்ச் சேரும் பலத்தையும் தருவார் என்றெண்ணம் லோத்துவுக்கில்லை. லோத்து தான் ஆபிரகாமிடம் போகிறேன் என்று கூறவில்லை. லோத்து நீதிமானாயிருந்தும் நாள்தோறும் தான் வாழ்ந்த இடத்தின் அக்கிரமக் கிரியைகளைக் கண்டு இருத யத்தில் வாதிக்கப்பட்டும் அதை விட்டுச் செல்ல வேண்டுமென்ற எண்ணம் சிறிதுகூட இல்லாமாமிருந்தான். அதன் பக்கத்தில் உள்ள சோவார் என்ற ஊருக்குப் போகிறேன் என்றான். லோத்து கடைசியில் சகோதரர் ஐக்கியத்தை இழந்து, செல்வம் இழந்து, மனைவியை இழந்து, ஜீவன் தப்பும் பலனையும் இழந்து தவித்தான். தேவனின் பாதையில் நெருக்கங்கள் இருக்கலாம். ஆனால் நம்பிக்கை உண்டு. அதற்கும் தேவதூதர்கள் அனுக்கிரகம் பண்ணி தீவிரமாய் அங்கு ஓடித் தப்பித்துக் கொள் என்றனர். லோத்து அங்கு போய்ச் சேரும்வரை தாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்றனர். 

கர்த்தரின் செயலும் லோத்தின் மனைவியின் செயலும்:

லோத்து சேவாருக்குள் சென்ற போது சூரியன் உதித்தது. அப்பொழுது கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும் வானத்திலிருந்து கந்தகத் தையும், அக்கினியையும் வருஷிக்கப் பண்ணினார். அந்த அக்கினி அந்தப் பட்டணங்களையும் அங்கிருந்த குடிகளையும், பூமியின் பயிர்கள் அனைத் தையும் அழித்துப் போட்டது. சோதோம் கொமாராவில் பத்து நீதிமான்கள் கூட இல்லாததால் அவைகள் அழிக்கப்பட்டன. லோத்து நீதிமானாக இருந்தும் எபிரேயர் 11ம் அதிகாரத்தில் கூறப்பட்ட நீதிமான்களின் பட்டியலில் லோத்தின் பெயர் இல்லை. கர்த்தர் அனுப்பிய அக்கினிக்குள் 39 விதமான கனி உப்புகள் இருந்தன. அதில் சோடியம்குளோரைடு அதிகமாக இருந்ததால் சவக்கடலில் ஜனங்கள் மிதக்கின்றனர். சவக்கடலில் உள்ள நீர் மீன்கள் வசிக்கவும், .விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்த முடியாது. 

லோத்தின் மனைவி கர்த்தர் கொடுத்த கட்டளையை மீறி பின்னிட்டுத் தாங்கள் வசித்த சோதோம் கொமோராவைத் திரும்பிப் பார்த்து உப்புத் தூண் ஆனாள். இன்றும் நாம் அங்கு போனால் இந்த உப்புத்தூணைப் பார்க்கலாம். உலகம் நம்மைப் பின்னிட்டுப் பார்க்க வைக்கிறது. ஆனால் இயேசு உங்கள் பொக்கிஷம் எங்கேயிருக்கிறதோ அங்கே உங்கள் இருதயம் இருக்கும் (மத்தேயு 6 : 21) என்றும், ஒருவன் தன்னைப்பின்பற்றி வர விரும்பினால் எல்லாவற்றையும் விட்டுப் பின்பற்றி வரவேண்டும் என்றும் கூறினார். இந்த உலகத்தின் பொல்லாப்புகளிலும், அக்கிரமங்களிலும், சிற்றின்பங்களிலும் ஈடுபாடு கொண்டவர்கள் தேவ கோபாக்கினை, தண்டனை, மற்றும் அழிவு ஆகியவற்றிலிருந்து தப்புவதில்லையென்று எச்சரிப்பதற்காகவே இயேசு இவ்வாறு கூறினார். கலப்பையின் மேல் கை வைத்தவன் பின்னிட்டுப் பார்க்கக் கூடாது. ஏனெனில் 

லூக்கா 9 : 62 ல் “அதற்கு இயேசு: கலப்பையின்மேல் தன் கையை வைத்துப் பின்னிட்டுப்பார்க்கிற எவனும் தேவனுடைய ராஜ்யத்துக்குத் தகுதியுள்ளவன் அல்ல என்றார்.” 

இயேசு ரோமர் 3 : 23 ல் கூறியுள்ளதைப் போல சோதோம் கொமோராவில் உள்ள எல்லோரும் பாவம் செய்து தேவ மகிமையற்றவர்களானார்கள். இன்று சோதோம் கொமோரா சவக்கடலின் தெற்குப்பகுதியில் மூழ்கிக்கிடக்கிறது. ஆனால் லோத்துவோ, பிள்ளைகளோ மனைவிக்கு என்னாச்சு என்று யாரும் திரும்பிப் பார்க்கவில்லை. பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதும்போது தேமா இந்த பிரபஞ்சத்தின் மேல் ஆசை வைத்து தன்னை விட்டுப் பிரிந்து போனான் என்று கூறினான் (2 தீமோத்தேயு 4 : 10). அதேபோல் இயேசுவோடிருந்த யூதாஸ் பணத்தின் மேல் ஆசை வைத்து இயேசுவையே காட்டிக் கொடுத்தான் (மத்தேயு 26 : 18, 19). எலிசாவின் கூடவே இருந்த கேயாசி பண ஆசைக்கு ஆசைப்பட்டு எலிசாவோடிருக்கும் சிலாக்கியத்தை இழந்து குஷ்டரோகி யானான். ஆனால் நாகமான் தன்னுடைய தீராத வியாதியை குணமாக்கின எலிசாவுக்கு காணிக்கையை மனப்பூர்வமாகக் கொடுத்தாலும் எலிசா அதைத் தான் வாங்க மாட்டேன் என்று மறுத்தான் (2 இராஜாக்கள் 5 : 15, 16). எலிசா மறுத்தது தெரிந்தும் கேயாசி பணத்திற்கு ஆசைப்பட்டான். கேயாசி உண்மையான பக்தியோடில்லாமல் பக்தி வேஷத்தோடிருந்திருக்கிறான். 

லோத்தின் பிள்ளைகள்:

லோத்து சோவாரிலும் இருக்கப் பயந்து குகையில் போய் வசித்ததினால், லோத்தின் பிள்ளைகள் தங்களது தகப்பனோடு தகாத முறையில் உறவு கொண்டு அதன் மூலம் வந்த சந்ததியினர் தான் அம்மோனியரும், மோவாபியரும். 

உபாகாமம் 23 : 3ல் “அம்மோனியனும் மோவாபியனும் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது; பத்தாம் தலைமுறையிலும் என்றைக்கும் அவர்கள் கர்த்தருடைய சபைக்கு உட்படலாகாது.”

என்ற சாபத்தைப் பெற்றனர். அவர்கள் தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராகவும், தேவனுடைய திட்டத்துக்கு எதிராகவும் செயல்பட்டனர். 

முடிவுரை:

லோத்து நல்ல நீர்பாய்ச்சலான செழிப்பான பள்ளத்தாக்கை மட்டும் கண்டான். கர்த்தருடைய விருப்பத்தை நாடவில்லை. அவன் சோதோமின் பொல்லாப் புக்களை வெறுத்ததை விட, அதிகமாகத் தன்னுடைய ஆதாயத்தையே விரும் பினான். லோத்து நீதியையும், நியாயத்தையும் போதுமான அளவு விரும்பி யிருந்தானானால், அவன் பாவம் நிறைந்த மக்களின் பொல்லாத வழிகளை விட்டு விலகித் தனியாக இருந்திருப்பான். ஆனால் லோத்து அதற்குப் பதிலாக பொல்லாங்கானவைகளைச் சகித்துக் கொண்டு, தீமை நிறைந்த சோதோம் நாட்டிலேயே குடியிருந்தான். லூக்கா17 : 32 ல் இயேசு லோத்தின் மனைவியை நினைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினார். இந்த உலகத்தின் பொல்லாப் புகளிலும், அக்கிரமங்களிலும் சிற்றின்பங்களிலும் தங்கள் இருதயத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் அவபக்தியுள்ளவர்கள் மேல் வரப் போகும் தேவ கோபாக்கினை, அழிவு ஆகியவற்றிலிருந்து தப்புவதில்லையென்று எச்சரிப் பதற்காகவே இயேசு இவ்வாறு கூறினார் (ரோமர் 8 : 13, எபிரேயர் 4 : 1, எசேக்கியேல் 3 : 20). லோத்தின் மனைவிக்கு இருந்ததைப் போல இச்சையின் கண்கள் நமக்கு இல்லாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்காகச் சொத்து ஆஸ்தி எதுவுமில்லாமல் வாழ வேண்டுமென்பதில்லை. அவைகள் இந்த உலகில் வாழத் தேவைதான். அவற்றின் மீது நமது இருதயத்தை வைக்காமல் அவைகளை முக்கியப்படுத்தாமல் நம்மைப் படைத்த தேவனுக்கே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். நாம் உலக இச்சைகளை நோக்கிப் பார்க்காமல் கர்த்தரை நம்பி வாழக் கர்த்தர் நமக்கு உதவி செய்வாராக. ஆமென்.

Related Posts