Menu Close

லேயாள்

கர்த்தர் இஸ்ரவேலில் விசுவாசத்தைக் கட்டி எழுப்ப, இரண்டு பெண்களை பயன்படுத்தினார் (ரூத் 4:11). அவர்களில் ஒருத்தி ராகேல், மற்றோருத்தி லேயாள். இவர்கள் இருவரும் ரெபாக்காளின் சகோதரன் லாபானின் குமாரத்திகள், யாக்கோ பின் மனைவிகள். இவர்களில் லேயாள் மூத்தவள், ராகேல் இளையவள். லேயாள் என்ற பெயருக்கு சோர்வுள்ள என்று பொருள். அந்தப் பொருளுக்கேற்ப அவள் தனது வாழ்க்கையில் அநேக சோர்வுகளைச் சந்தித்தாள். இவள் அழகில் சற்றுக் குறைந்தவள். கூச்சப்பார்வையுடையவள். எனவே அவளைத் திருமணம் செய்து கொள்ள யாரும் முன் வரவில்லை. எனவே அவள் மிகவும் வேதனைப் பட்டி ருப்பாள். ராகேலோ ருபவதியாக, அழகுள்ளவளாகக் காணப்பட்டாள். 

யாக்கோபு லாபானால் ஏமாற்றப்பட்டான்:

யாக்கோபு தன் தமையனான ஏசாவின் சேஷ்டபுத்திரபாகத்தை ஏமாற்றிப் பெற் றுக் கொண்டான்.எனவே ஏசாவுக்குப் பயந்து, தன்னுடைய தாயான ரெபெக்கா ளின் அறிவுரையின்படி, தன் தாய் மாமனான லாபானின் வீட்டிற்குச் சென்றான். அங்கே ராகேலைப் பார்த்தவுடன் அவளது அழகில் மயங்கி தன்னுடைய தாய் மாமனின் சொற்படி அவளைத் திருமணம் முடிக்க, ஏழுவருடம் அவனுடன் வேலை செய்வதாக வாக்களித்தான். ஏனெனில் அக்காலத்தில் பெண்களை மணப்பதற்கு ஆண்கள் பரிசம் போட வேண்டும். பரிசம் போடப் பணமில்லாத யாக்கோபு ஏழு ஆண்டுகள் உழைப்பதாக ஒப்புக்கொண்டான். இதைத் தான் ஓசியா 12 : 12 ல் “யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.” என்று கூறுகிறான். யாக்கோபு தனது விருப்பத்தை நிறைவேற்றுவதற்குப் பொறு மையுடன் செயல்பட்டான். பொறுமையின்றித் தவறான வழியில் யாரும் செல்ல லாகாது. கடுமையாக உழைத்து, திருமணத்தன்று லாபான் அவ்விடத்து மனிதரெ ல்லாரையும் கூடிவரச் செய்து, விருந்து பண்ணினான். சிம்சோனும் நியாயாதி பதிகள் 14 : 10 ல் திம்னாத்தில் பெண்கொள்ளப் போகும்போது அங்கே விருந்து செய்ததைப் பார்க்கிறோம். 

யாக்கோபு தன் மாமனிடம் ஏன் எப்படிச் செய்தீர் என்று கேட்டான். இதேபோல் ஆபிரகாமின் மனைவி பார்வோனால் அழைக்கப் பட்டு அவனுடைய அரண்ம னைக்குக் கொண்டு போகப்பட்டாள். அவள் ஆபிரகாமின் மனைவியென்று பார் வோனுக்குத் தெரியாது அது அவனுக்குத் தெரிந்தவுடன் ஆதியாகமம் 12 : 18 ல் “பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?” என்றான். அதேபோல் லாபானும் யாக்கோபிடம் கூறாமல் ஏமாற்றித் தன்னுடைய மூத்த மகளான லேயாளை யாக்கோபுக்கு அனுப்பி வைத்தான். லேயாளின் மனம் எத்தனை வேதனைப்பட்டிருக்கும். திருமணம் ஆகாமலேயே ஒருவனுடன் இணைவது அவளுடைய மனதைக் காயப்படுத்தியிருக்கும். அப்பொழுது பெண்கள் முழு முக் காடு போட்டுக் கொள்ளும் வழக்கம் இருந்ததாலும், இரவில் வெளிச்சம் இல்லா ததாலும் யாக்கோபு ராகேல் என்று நினைத்து ஏமாற்றப்பட்டான். ராகேலைத் தருகிறேன் என்று சொல்லித் தன் மாமன் ஏமாற்றி விட்டதால் அவன் மாமனிடம் மிகுந்த கோபப்பட்டான். லேயாளும் தன்னை ஏமாற்றி விட்டாளே என்று அவள் மீதும் மிகுந்த வெறுப்படைந்தான். 

லாபானும், லேயாளும்: 

லாபான் வேண்டுமென்றே யாக்கோபை ஏமாற்றினான். லேயாளுக்கு வேறு மண மகன் கிடைக்காததால் இவனைப் போல் ஒருவன் கிடைக்க மாட்டான் என்று நினைத்திருக்கலாம். இதற்கு முன் லாபான் தன் அத்தையான ரெபெக்காளைப் பெண் கேட்டு ஆபிரகாம் எலியேசரை அனுப்பிய போது, ரெபெக்காள் என்ன சொல்லுகிறாள் என்று கேட்போம் என்றதை (ஆதியாகமம் 24 : 57ல் பார்க்கிறோம். அதேபோல் லேயாளிடம் லாபான் “உன்னை ஏமாற்றி அனுப்பப் போகிறேன் உனக்குச் சம்மதமா” என்று கேட்கவேயில்லை. ரெபெக்காளுக்குக் கொடுத்த உரிமை லேயாளுக்குக் லாபான் கொடுக்கவேயில்லை. லாபான் யாக்கோபின் கோபத்தைத் தணிக்க அவனிடம் “மூத்தவள் இருக்கும்போது இளையவளைக் கொடுப்பது இவ்விடத்து வழக்கமல்ல, எனவே ஏழு நாட்களுக்குப் பின் ராகேலை யும் உனக்குத் தருகிறேன் அவளுக்காகவும் ஏழு வருடம் வேலை செய் என்றான் (ஆதியாகமம் 29:26,27). யாக்கோபு நன்றாக ஏமாற்றப்பட்டான். ஏசாவைப் பயிற் றங் கூழைக் கொடுத்து ஏமாற்றியவனுக்கு லாபானிடம் பேசத் தெரியவில்லை. ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் ஏற்கனேவே உழைத்து விட்டேன் மீண்டும் என் னால் உழைக்க முடியாது என்று கூறத் தெரியவில்லை. ஏமாற்றுகிறவர் பிற ரால் ஏமாற்றப்படுவர். தான் ஏமாற்றப்பட்ட போதிலும் தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையை யாக்கோபு நிறைவேற்றினார். ஏழு நாட்களுக்குப் பின் ராகேலையும் யாக்கோபு தன் மனைவியாக்கினான். 

லேயாளுக்கோ கணவனை ஏமாற்றியதால், கணவன் முன் குற்றவாளியாக நின்றாள். எனவே யாக்கோபு அவளை அற்பமாய் எண்ணினான். யாக்கோபு ராகேலிடம் காட்டிய பாசத்தில் எள்ளளவுகூட லேயாளிடம் காட்டவேயில்லை. யாக்கோபு லேயாளைவிட ராகேலை அதிகமாக நேசித்தான் என்று ஆதியாகமம் 29 : 30 ல் பார்க்கிறோம். ஆனால் யாக்கோபு லேயாளுக்காக வேலை செய்யவும் இல்லை. கணவன் தன்னை உதாசீனப்படுத்தியதாலும் ,வெறுத்ததாலும் லேயாள் கணவனின் அன்புக்கு மிகவும் ஏங்கினாள். ஆனாலும் ராகேல் யாக்கோபிடம் பிள்ளை கொடும் இல்லாவிட்டால் சாகிறேன் என்று கணவனிடம் சண்டை போட்டதைப் போல் சண்டை போடவோ, ராகேல் லேயாள் கர்ப்பம் தரித்ததைப் பார்த்து பொறாமைப் பட்டதைப் போல (ஆதியாகமம் 30 : 1,) ராகேல் அழகாக இருப்பதினால்தானே கணவன் அவளை நேசிக்கிறான் என்று பொறாமைப் படவோ இல்லை. கர்த்தர் மேல் நம்பிக்கை வைத்துக் காத்திருந்தாள். லேயா ளின் குணமும், அவள் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையையும் கர்த்தர் பார்த்து அவளை நினைத்தருளினார். 

லேயாளுக்குக் கர்த்தரருளின ஆசிகள்:

லேயாள் முதலில் கர்ப்பம் தரிக்கும்படி தேவன் அனுக்கிரகம் அருளினார். மறுபடியும் மறுபடியும் குழந்தைகளைப் பெற்றெடுக்க தேவன் அனுக்கிரகமளித் தார். தம்மைப் பற்றி “உத்தம இருதயத்தோடிருக்கிறவர்களுக்குத் தம்முடைய வல்லமையை விளங்கப் பண்ணும்படி கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக் கொண்டிருக்கிறது” லேயாள் தன்னுடைய பிள்ளைகளுக்குப் பெயரி ட்ட விதத்தைப் பார்க்கும்போது, நமக்கு அவள் தேவனிடம் வைத்திருந்த நம்பி க்கையையும், பற்றையும் பார்க்கிறோம். தன்னுடைய முதல் குழந்தைக்கு ரூபன் என்று பெயரிட்டாள். ரூபன் என்ற பெயருக்கு கர்த்தர் பார்த்தருளினார் என்று பொருள். தன்னுடைய இரண்டாவது குழந்தைக்கு சிமியோன் என்று பெயரிட்டாள். சிமியோன் என்றால் கர்த்தர் கேட்டருளினார் என்று பொருள். தன்னுடைய மூன்றாவது குழந்தைக்கு லேவி என்று பெயரிட்டாள். என் புருஷன் என்னோடே சேர்ந்திருப்பார் என்று பொருள். தன்னுடைய நான்காவது குழந்தைக்கு யூதா என்று பெயரிட்டாள். யூதா என்றால் கர்த்தரைத் துதிப்பேன் என்று பொருள். 

லேயாளின் மூன்றாவது மகனான லேவியின் மூலம்தான் ஆசாரிய பரம்பரை வந்தது. ஆசாரிய முறைமையென்றால் மக்கள் சார்பாகத் தேவனுடன் பேசக் கூடிய ஊழியம். இந்தக் கோத்திரத்தில்தான் ஆரோன், சகரியா, யோவான் ஸ்நானன் வந்தனர். அவளின் நான்காவது மகனின் கோத்திரமான யூதா கோத் திரமே சகல கோத்திரத்தாருக்கும் தலைமையாகத் திகழ்ந்தது. தாவீது, சாலமோன், தானியேல் முதலானோர் இந்தக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள். இவைகளெல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவானவரும் யூதா கோத்திரத்திலி ருந்துதான் வந்தார் (மத்தேயு 1:13,16). லேவி கோத்திரத்தார் ஆவிக்குரிய உலக த்தை ஆளுகிறவர்களாக இருந்தனர். யூதா கோத்திரத்தார் உலகப்பிரகாரமான வைகளை ஆளுகிறவர்களாக இருந்தனர். லேயாளின் மகனான ரூபன் வயல் வெளியில் தூதாயீம்கனிகளைக் கண்டெடுத்து அவைகளைத் தன் தாயினிடத் தில் கொடுத்தான். அதைப் பார்த்த ராகேல் தனக்குப் பிள்ளையில்லாததினால் அதைச் சாப்பிட்டால் தனக்குப் பிள்ளை பிறக்குமென்று எண்ணி லேயாளிடம் தூதாயீம்கனிகளில் கொஞ்சத்தைக் கேட்டாள். லேயாள் அவளுக்கு அதைத் தர மறுத்தபோது ராகேல் அவளிடம் அதற்குப் பதிலாக அன்று இரவு யாக்கோபு உன்னோடு சயனிக்கட்டும் என்றாள். .அதனால் அதன்பின் லேயாளுக்கு இர ண்டு பிள்ளைகள் பிறந்தன.யூதாவுக்குப் பின் இசக்கார், செபுலோன் என்ற குமார ர்களும், தீனாள் என்ற குமாரத்தியும் பிறந்தனர். யாக்கோபால் வெறுக்கப்பட்ட லேயாளுக்குத் தேவன் ஆறு குமாரர்களையும், ஒரு குமாரத்தியையும் கொடு த்து ஆசீர்வதித்தார் (ஆதியாகமம் 29 : 31 – 35, 30 : 20). இஸ்ரவேலின் பன்னி ரண்டு கோத்திரப் பிதாக்களையும் பெற்றெடுக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். 

யாக்கோபு தன் தேசத்திற்குப் புறப்படல், லேயாளின் மரணம்:

யாக்கோபு தன்னுடைய தேசத்திற்குத் தன் இனத்தாரிடம் திரும்பிப் போக வேண்டுமென்று சொன்னபோது, லேயாளும், ராகேலும் “தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும்” என்றதை ஆதியாகமம் 31 :16 ல் பார்க்கிறோம். இருவரும் தங்களுடைய கணவனோடு சேர்ந்து தேவ சித்தத்தை ஏற்றுக் கொண் டதைப் பார்க்கிறோம். லேயாள் தன்னுடைய பிள்ளைகளை சரியானபடி வளர்த் ததாகத் தெரியவில்லை. அவளுடைய குமாரத்தியான தீனாள் கற்பழிக்கப் பட்டதினால் அவளுடைய குமாரர்கள் செய்த செயல் மிகவும் கொடூரமானது. இதனால் யாக்கோபு வேதனையில் என் வாசனையை இந்தத் தேசத்தில் கெடுத் தீர்கள் என்று கூறியதை ஆதியாகமம் 34 : 30 ல் பார்க்கிறோம். லேயாளுக்கு முன் ராகேல் தன்னுடைய இரண்டாவது பிரசவத்தில் மரித்துப் போனாள். யாக்கோபு வாக்குத்தத்த தேசத்துக்குப் போகும் போதுகூட ஏசா 400 பேரோடு கோபத்தில் தன்னை சந்திக்க வருகிறான் என்று நினைத்து, ராகேலையும் பிள் ளைகளையும் தனக்குப் பின்னாலும், லேயாளையும் பிள்ளைகளையும் முன் னாலும் விட்டு ஏசாவை சந்திக்கச் சென்றான். ஏசா கோபத்தில் லேயாளை ஏதாவது பண்ணினாலும் ராகேல் தப்புவிக்கப்பட வேண்டுமென்றெண்ணினான். அவ்வாறு ராகேல் மீது யாக்கோபு வைத்திருந்த அபரீதமான அன்பு அவளு டைய மரணத்தைத் தடுத்து நிறுத்தமுடியவில்லை. லேயாளோ பூரண வயதுள் ளவளாய் மரித்து, முற்பிதாக்கள் அடக்கம் பண்ணப்பட்ட மக்பேலா குகையில் அடக்கம் பண்ணப்பட்டாள் (ஆதியாகமம் 49 : 31). 

முடிவுரை: 

நாமும் இதேபோல் அற்பமாக எண்ணப்பட்டாலும் கர்த்தருடைய கண்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அவர் நமக்கு ஆறுதலையும் தேறுதலையும் தந்தருளுவார். 1 சாமுவேல் 2 : 8 ல் கூறியுள்ளது போல கர்த்தர் சிறியவனைப் புழுதியிலிருந்து எடுத்து எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த் துகிறவர். உலகம் லேயாளின் அழகைப் பார்த்தது, ஆனால் கர்த்தரோ அவரு டைய உள்ளான இருதயத்தின் அழகைப் பார்த்தார். கர்த்தரின் கண்கள் வேத அறிவு பெற்றிருந்த கல்விமான்களான வேதபாரகரையும், சதுசேயரையும் நோக்கவில்லை. அற்பமான தொழிலில் இருந்த சீஷர்களுக்குத் தம்முடைய வார்த்தையையும், வல்லமையையும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும் கொடுத்து அவர்களைக் கொண்டு தன்னுடைய பெரிய ஊழியத்தைச் செய்யச் சித்தமானார். பயன்படுத்தினார். ஏனென்றால் இயேசுவும்கூட பூமியிலிருந்த நாட்களில் அற்பமாய்த்தான் எண்ணப்பட்டார். அதைத்தான் வேதம் ஏசாயா 53 : 3 ல் “அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்;” என்கிறது. எனவே நாமும் லேயாளைப் போலப் பொறுமையாகவும், கர்த்தர்மேல் நம்பிக்கையுட னும் காத்திருந்து அவருடைய ஆசியைப் பெற்றுக்கொள்வோம். ஆமென்.

Related Posts