இயேசு ஜீவஅப்பமாய் வெளிப்பட்டார். மக்கள் உண்ணும் அப்பமானது அவர்களது
வாழ்க்கைக்கு பலனையும், உயிர் வாழ்வதற்கு சக்தியையும் உண்டாக்குகிறது. இயேசுவோ உயிர் வாழ்வதற்கான அப்பமாக அன்றி, உயிர் கொடுக்கக் கூடிய அப்பமாக வந்தார். நமது உள்ளம் இயேசுவை உண்ணும் போதுதான் மெய்யான நித்திய உயிரைப் பெற்றுக் கொள்கிறது. பூமிக்குரிய அப்பம் சரீரத்தைக் குறிப்பிட்ட காலத்திற்கு வாழ வைக்கிறது. வானத்திற்குரிய ஜீவ அப்பமோ ஆத்மாவை நித்தியமாக பிழைக்க வைக்கிறது.