ஒரு மனுஷன் புறதேசத்துக்குப் பிரயாணமாய்ப்போக எத்தனிக்கும் போது தன் ஊழியக்காரனுக்கு வேலைகளைக் கொடுத்து விழித்திருக்கச் சொல்வான். அதேபோல கிறிஸ்து திரும்ப வருவது எந்த நேரம் என்பதை பிதா மட்டுமே அறிவார். இயேசு வரும் அந்த நேரத்தில் உண்மையான விசுவாசிகள் அத்தனை பேரும் இவ்வுலகத்திலிருந்து எடுத்துக் கொள்ளப் படுவார்கள். அவர் வரும் வேளை உங்களைத் தூங்குகிறவர்களாகக் கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள் என்று இயேசு கூறுகிறார்.
எனவே அவருடைய வருகை எதிர்பாராத நேரத்தில் இருக்கும் என்பதாலும், சீக்கிரம் வரப்போவதாலும் ஆவிக்குரிய நிலையில் விழிப்புடனும் உண்மையுடனும் இருக்க வேண்டும்.