இயேசு தெய்வீக புருஷனானவர். அவருக்குள் வழியும், வார்த்தையும், வாழ்வும் அடங்கியி ருக்கின்றது. அவருடைய வழியில் வருபவர்கள் அவர் வார்த்தையைக் கண்டடைவர். உலகத்தில் முக்தியடைவதைக் கூறும் பல வழிகள் இருக்கின்றன. ஆனால் இயேசு ஒருவரிடத்தில் மட்டுமே வழியும், வார்த்தையும், வாழ்வும் இருக்கின்றது. நித்தியஜீவனைப் பெற்றுக்கொள்ள அண்மையான வழி இயேசு ஒருவரே. அவரது ஜீவனைப் பெறாதவர் நித்தியஜீவனைப் பெறமுடியாது. மேலும் பிதாவிடம் செல்வதற்கு ஒரே வழி இயேசு ஒருவரே.