திமிர்வாதக்காரனின் நண்பர்கள் இயேசுவினால் அவனை சுகமாக்க முடியும் என்று பூரணமாய் நம்பினார்கள். எனவே அவர்கள் அவனை எவ்வகையிலாகிலும் இயேசுவுக்கு முன்பாகக் கொண்டு வந்து சேர்க்க முயற்சித்தார்கள். அங்கு ஜனக்கூட்டம் மிகுதியாயிருந்தபடியால் வீட்டின் மேலேறி தட்டோடுகள் வழியாய் ஜனங்களின் மத்தியில், இயேசுவுக்கு முன்பாக அவனை படுக்கையோடு இறக்கினார்கள். அவர்களுடைய விசுவாசத்தைப் பார்த்த இயேசு “உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.” அப்பொழுது வேதபாரகரும், பரிச்சேயரும் “பாவங்களை மன்னிக்கிறதற்கு இவன் யார்?” என்றனர். அடுத்தாற்போல் இயேசு திமிர்வாதக்காரனை நோக்கி” நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக் கொண்டு உன் வீட்டுக்குப் போ” என்றார். அவன் “நான் நடக்க முடியாமல் பல வருடங்கள் கிடக்கிறேனே, என்னால் எப்படி முடியும்” என்று கூறாமல் தேவனின் வார்த்தைக்குக் கீழ்படிந்து உடனே எழ முயற்சித்தான். வெற்றி பெற்றான்.
இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் என்னவெனில்: நோயாளியைவிட தூக்கி வந்தவர்களின் விசுவாசம் நோயாளிக்கு சுகம் கொடுத்தது அதேபோல் நாமும் விசுவாசமில்லாதவர்களையும், இயேசுவை அறியாதவர்களையும் இயேசுவண்டை அழைத்து வந்து, அவர்கள் விடுதலை பெறும் பொழுது அவர்கள் தேவனுடைய பிள்ளைகளாவார்கள்.