பரலோகராஜ்ஜியத்திற்குள் பிரவேசிக்க பிதாவின் சித்தம் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை இயேசு கூறுகிறார். “பிதாவின் விருப்பத்தின்படி நடக்கிறோமா?” என உங்களையே ஆராய்ந்து பாருங்கள். கர்த்தரின் நாமத்தில் தீர்க்கதரிசனம் உரைத்தல், பிசாசுகளைத் துரத்துதல், அற்புதங்களைச் செய்தல் ஆகியவை நல்லது தான். ஆனால் இவைகளின் அடிப்படையில் யாரும் பரலோகம் செல்ல முடியாது. ஏனெனில் இவர்கள் கூறுவதில் “நாங்கள் செய்தோம்” என்று தங்கள் செயல்களைப் பற்றி தெரிவிக்கப் படுகின்றன. பரலோகம் செல்வதற்கான தகுதி நம்முடைய நற்செயல்கள் மட்டும் அல்ல. இயேசுவிடமிருந்து பாவமன்னிப்பையும், ஆவியானவரின் அபிஷேகத்தையும் விசுவாசத்தினால் பெற்று, அவருடைய சித்தம் செய்வதே ஆகும். கொண்டிருப்பதே பரலோகம் செல்வதற்கான தகுதியாகும் – யோவான் 3:3-5
நாம் பரலோகம் செல்வதற்கு ஒரே வழி இயேசுவே நீர் எனக்காக இரத்தம் சிந்தினீர் அல்லவா, உமது இரத்தத்தால் பாவமற என்னைக் கழுவினீர் அல்லவா – வெளி 1:6, கிருபையினால் விசுவாசத்தைக் கொண்டு இரட்சித்தீர் அல்லவா, இது உம்முடைய ஈவு அல்லவா – எபே 2:8, பரிசுத்த ஆவியினால் அபிஷேகித்தீர் அல்லவா – யோவான் 3: 3-5 ராஜ்ஜியத்தைக் கொடுப்பதாகக் கூறினீர் அல்லவா – லூக்கா 12:32 உமது கிருபை எனக்குப் போதுமல்லவா – 2 கொரி 12: 9 என்று உள்ளத்தின் ஆழத்தில் உணர்ந்து கூறினால் இயேசு அளிக்கும் பதில் “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே என்பார்”