Menu Close

மரமும், கனியும் பற்றி இயேசு: மத்தேயு 7:15,16,18-20 லூக்கா 6:43-45

கள்ளத்தீர்க்கதரிசிகளை கெட்டமரத்துக்கும், கணிகொடாத மரத்துக்கும் இயேசு

ஒப்பிடுகிறார். அவர்கள் கொடுக்கிற கனி அல்லது உபதேசங்களில் அவர் எப்படிப்பட்ட தீர்க்கதரிசி என்று அறிந்து கொள்ள முடியும். நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்காதது போல நல்ல தீர்க்கதரிசிகள் தீய உபதேசங்களை உபதேசிப்பதில்லை. அதேபோல் கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்காதது   போல கள்ள தீர்க்கதரிசிகள் நல்ல உபதேசங்களை உபதேசிக்க மாட்டார்கள் என இயேசு கூறுகிறார்.

கள்ளப்போதகர்கள் வெளித்தோற்றத்தில் நீதிமான்களைப் போல ஆட்டுத்தோலை போர்த்திக்கொண்டு வருவார்கள். ஆனால் அவர்கள் உள்ளத்திலோ  பட்சிக்கிற ஓநாய்கள் என்று இயேசு கூறுகிறார். நற்கனிகளாகிய திராட்சையும், அத்திப்பழமும் முட்செடிகளாகிய கள்ளத்தீர்க்கதரிசிகளிடமிருந்து வெளிப்படவே செய்யாது. கள்ளப் போதகர்களின் கனிகள் அவர்களிடம் காணப்படும் துர்குணங்களாகும். அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்திற்குச் செவிகொடுக்கு மாட்டார்கள். தேவனுடைய மகிமைக்கும், கனத்துக்கும் முதலிடம் கொடுக்காமல் தங்கள் ஆசைகளும், விருப்பங்களும் நிறைவேற்றுவதற்கே முக்கியத்துவம் கொடுப்பார்கள்.

கள்ளத்தீர்க்கதரிசிகளும், கள்ளப்போதகரும் உலகின் அநேகப் பகுதிகளில் எல்லாக் காலத்திலும் இருந்து வந்திருக்கின்றனர். அவர்களுடைய இறுதி முடிவு அக்கினிக்கடல். வாழ்க்கையில் ஆவியின் கனி காணப்படாத, ஆத்துமா ஆதாயம் செய்யாத ஊழியர் கள்ளப்போதகரே – லூக் 11:23 செல்வம் சேர்த்தல், புகழ் பெறுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு உழைப்பவர்கள் கள்ளப்போதகர்களே

இதிலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடம் என்னவெனில் நல்லது, கெட்டது என கண்டுபிடிக்கும் ஆவிக்குரிய கண்கள் திறக்கப்பட வேண்டும் என ஜெபிக்க வேண்டும்

Related Posts