Menu Close

நானே மெய்யான திராட்சை செடி – யோவான் 15 : 1 – 5

யோவான் 15 : 1, 5 “நான் மெய்யான திராட்சச்செடி, என் பிதா திராட்சத் தோட்டக்காரர். நானே திராட்சச்செடி, நீங்கள் கொடிகள். ஒருவன் என்னிலும் நான் அவனிலும் நிலைத்திருந்தால், அவன் மிகுந்த கனிகளைக் கொடுப்பான்; என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது.”

என்று இயேசு கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இயேசு நானே மெய்யான திராட்சைச்செடி என்றும், பிதா தான் அந்த திராட்சைச் செடிகளுள்ள தோட் டத்தின் சொந்தக்காரர் என்றும், கொடிகள் இயேசுவின் விசுவாசிகள் என்றும் கூறுகிறார். இஸ்ரவேலின் வம்சம் தான் அந்தத் திராட்சைத் தோட்டம். இயேசு பரலோகத்திலிருந்து இறங்கி வந்த திராட்சைச்செடி. அதன் கொடிகளாக நாம் இருக்கிறோம். பரலோகத்துத் திராட்சைச்செடி பூலோகமான பாவ உலகில் இருந்த நம்மை, பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்த நம்மை, தேவ கிருபையி னால் கொடிகளாக ஏற்றுக்கொண்டார். இயேசுவின் ஒத்தாசையின்றி நம்மால் எந்த ஆவிக்குரிய பணியோ, நற்கிரியைகளோ செய்ய இயலாது. இதைத்தான் யாக்கோபு 4 : 8 ல் “தேவனிடத்தில் சேருங்கள் அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்” என்கிறார். கர்த்தர் தாம் உண்டாக்கின எண்ணற்ற கனிதரும் செடி களிலே, மரங்களிலே திராட்சைச் செடியின் மேல் அதிக அன்பு வைத்தார். இஸ்ரவேல் ஜனங்களைத் தன்னுடைய திராட்சைத் தோட்டமாகவும், உலர்ந்த திராட்சைச் செடியாகவும் கண்டார். அதைத்தான் ஏசாயா,

ஏசாயா 5 : 7ல் “சேனைகளின் கர்த்தருடைய திராட்சத்தோட்டம் இஸ்ரவேலின் வம்சமே; அவருடைய மனமகிழ்ச்சியின் நாற்று யூதாவின் மனுஷரே;” என்றார்.

கர்த்தர் எகிப்திலிருந்து ஒரு திராட்சைக் கொடியைக் கொண்டு வந்து, அங்குள்ள ஜாதிகளைத் துரத்திவிட்டு நாட்டி, அதற்குரிய இடத்தையும் ஆயத்தப் படுத்தி னார். அது வேரூன்றி எல்லாத் தேசமெங்கும் பரவப் பண்ணினார் என்பதை சங்கீ தம் 80 : 8, 9ல் பார்க்கிறோம். திராட்சைத் தோட்டத்தைக் குறி த்த ஒரு பாடலை ஏசாயா 5 : 1 – 7ல் பார்க்கிறோம். இதில் கூறப்பட்ட “என் நேசர்” என்பது இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறது. அவர் இஸ்ரவேலின் மேசியாவாகவும், உலகத்தில் இரட்சகராகவும் இருக்கிறார்.

நம் ஆண்டவருக்கு செழிப்பான ஒரு வீட்டிலே ஒரு அருமையான திரா ட்சைத்தோட்டம் இருந்தது.அவர் அதை வேலி அடைந்து கற்களைப் பொறுக்கி நற்குல திராட்சைச் செடிகளை நட்டார். அந்தத் தோட்டத்தின் நடுவிலே கோபுர த்தையும், அங்கே ஒரு ஆலையையும் உண்டு பண்ணினார். அது நல்ல பலன்க ளைத் தருமென்று காத்திருந்தார். தேவன் அவர்கள் மேல் அன்பு கொண்டு, இதைச் செய்தபடியினால் அவர்களிடமிருந்து நீதியின் கனியை எதிர்பார்த்தார். தன்னுடைய நாமத்தை அவர்கள் மகிமைப் படுத்துவார்கள் என்று தேவன் நினை த்தார். ஆனால் அவர்கள் முற்றிலும் தவறி விட்டனர். ஒரு காலத்தில் இஸ்ர வேல் தேசம் தேவனின் திராட்சைச்செடியாக இருந்தது. ஆனால் அது சரியான பலனைக் கொடுக்கவி ல்லை.இயேசுவோ நிழலான இஸ்ரவேலைப் போலல்ல, காட்டுத் திராட்சைச் செடியுமல்ல.மெய்யான திராட்சைச்செடி. இன்றைக்கும் இஸ்ரவேல் தேசம் திராட்சைச்செடியைத் தங்களுடைய தேசியச் சின்னமாகக் கருதுகிறது.மோசே கானான் எப்படிப்பட்டது என்றறிய 12 பேரைத் தெரிந்தெடு த்து அனுப்பினார்.அவர்கள் அந்தத் தேசத்திலிருந்து அதிக கனிகளைக் கொண்ட திராட்சைக் குலைகளை அறுத்து, இரண்டு பேராகத் தூக்கிக் கொண்டு வந்தனர். அத்தனை செழிப்புள்ள தேசமாக கானான் இருந்தது. தாவீது கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷனை ஆசீர்வதிக்கும் போது,

சங்கீதம் 128 : 3 “உன் மனைவி உன் வீட்டோரங்களில் கனிதரும் திராட்சக்கொடியைப்போல் இருப்பாள்; உன் பிள்ளைகள் உன் பந்தியைச் சுற்றிலும் ஒலிவமரக் கன்றுகளைப்போல் இருப்பார்கள்.” என்றார்.

இயேசு என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது என்று திட்டவட்டமாகக் கூறுகிறார். இதைத்தான் பவுல், 

ரோமர் 8 : 29, 30 “தேவன் எவர்களை முன்னறிந்தாரோ அவர்களைத் தமது குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாயிருப்பதற்கு முன்குறித்திருக் கிறார்; எவர்களை முன்குறித்தாரோ அவர்களை அழைத்துமிருக் கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிரு க்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப் படுத்தியுமிருக்கிறார்.” என்கிறார்.

தேவன் அழைத்தால் மட்டுமே நாம் அவருடைய பிள்ளைகளாக மாற முடியும். 

 2) திராட்சை தோட்டம்

ஏசாயா 5 : 1 – 7ல் திராட்சைத் தோட்டத்தைக் குறித்த பாடலைப் பார்க்கிறோம். செழிப்பான மேட்டில் உள்ள திராட்சை தோட்டம் என்றிருக்கிறது. செழிப்பான தோட்டம் என்றால், நல்ல நீர் வளமும், நில வளமும், நல்ல சீதோஷ்ண நிலை யில் உள்ள தோட்டம் என்று பொருள். கர்த்தர் நமக்குக் கொடுக்கும் முதல் செழி ப்பு, அவருடைய பிள்ளைகளாக நம்மை ஏற்றுக் கொண்டதாகும். ஆவியும், ஜீவனு முள்ள வேதத்தை நம்முடைய கைகளில் கொடுத்தார். பாவமன்னிப்பையும், இரட்சிப்பின் சந்தோஷத்தையும் கொடுத்ததுமல்லாமல், தெய்வீக சமாதானத் தையும் நித்திய ஜீவனையும், பரிசுத்த ஆவியானவரையும் தேவன் நமக்கு கொடுத்தார். இதைத்தான்,

சங்கீதம் 66 : 12ல் “செழிப்பான இடத்தில் எங்களைக் கொண்டுவந்து விட்டீர்.” என்றும்,..

சங்கீதம் 16 : 6ல் “நேர்த்தியான இடங்களில் எனக்குப் பங்கு கிடைத்தது; ஆம், சிறப்பான சுதந்தரம் எனக்கு உண்டு.” 

என்றும் கூறினார். எவ்வளவுக்கெவ்வளவு செழிப்ப்பில் நம்மைத் தேவன் வைத்திருக்கிறாரோ அவ்வளவுக்கவ்வளவு கனிகளைத் தேவன் நம்மிட மிருந்து எதிர்பார்க்கிறார். கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை வேறு பிரித்துக் காண்பித்து, வேலிஅடைப்பதற்காக, பஸ்கா ஆட்டுக்குட்டியின் இரத்தத்தை நிலைக்கால்களில் பூசும்படி சொன்னார். அந்த இரத்தமே அவர்களுக்குக் கோட்டையாக விளங்கி யது. சங்காரதூதனால் அந்த வீடுகளுக்குள் பிரவேசிக்க முடியவில்லை. எகிப்தை விட்டு வெளியேறிய போதும் வனாந்தரத்திலே அவர்களைக்காக்க பகலிலே மேகஸ்தம்பத்தமும், இரவிலே அக்கினி ஸ்தம்பமும் அவர்களுக்கு மதிலாக சூழ்ந்து நிற்கச் செய்தார். இதைத்தான்,

சங்கீதம் 125 : 2ல் “பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்.”

என்றார். கர்த்தருடைய வேலியானது அவருடைய பிள்ளைகளான இரட்சிக்கப் பட்டவர்களுக்கு மட்டுமே. எதற்காகக் கர்த்தர் வேலி அடைக்கிறார் என்றால் மற் றவர்களிடமிருந்து நம்மைப் பிரிக்க, நாம் கர்த்தருக்கென்று பிரித்தெடுக் கப்பட்டவர்கள் என்பதைக் காண்பிப்பதற்காகத் தான். கர்த்தர் ஆபிரகாமை அழை த்த போது வேறுபாட்டின் ஜீவியத்தை அவருக்குக் கற்க வைத்தார். வானமண்ட லத்திலுள்ள பொல்லாத சேனைகளும் நம்மை அணுகாமல் வேலி அடைத்துப் பாதுகாக்கிறார். அவருடைய வேலியைத் தாண்டி எந்த சத்துருவும் உள்ளே வர முடியாது. நம்முடைய ஆவிக்குரிய ஜீவியத்தில் வருகிற இடர்கள், தடைகள், கண்ணிகள் ஆகிய கற்களை தோட்டத்திலிருந்து பொறுக்கி தேவனே வீசி எறிந்து அப்புறப்படுத்துகிறார். நம்முடைய பாதம் கல்லில் இடறாதபடி கர்த்தருடைய தூதர்களின் கரங்களில் ஏந்திக் கொள்ளச் செய்கிறார். 

கனி தரும் செடி:

யோவான் பதினைந்தாம் அதிகாரம் முழுவதும் கனி கொடுப்பது எப்படி என்ற அருமையான உபதேசத்தை, ஆலோசனையைக் கிறிஸ்து கொடுத்திருக்கிறார். இயேசு கிறிஸ்து ஒரு கனிதரும் செடியாக இருந்தார்.. தேவன் அவரைப் பரிசுத்த ஆவியினாலும், வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார். அதனால் அவர் நன்மை செய்கிறவராகவும், பிசாசின் பிடியில் அகப்பட்ட யாவரையும் குணமாக்கு கிறவராகவும் சுற்றித் திரிந்தார் என்று அப்போஸ்தலர் 10 : 38ல் பார்க்கிறோம். யோசேப்பு கனிதரும் செடியாக இருந்ததினால் முழு எகிப்தியரும் பஞ்ச காலத் தில் யோசேப்பை நோக்கி ஓடி வந்தார்கள். யோசேப்பு கானான் எல்லையைத் தாண்டி எகிப்து தேசத்துக்குக் கொண்டு போகப்பட்டார். ஆனால் எகிப்து தேசத் திலும் அவருடைய கொடி பறந்தது. பார்வோனுக்கு அடுத்த உயர்ந்த ஸ்தான த்தில் உயர்த்தப்பட்டார். இயேசு, 

யோவான் 15 : 16ல் “நீங்கள் என்னைத் தெரிந்துகொள்ளவில்லை, நான் உங்களைத் தெரிந்துகொண்டேன்; நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனிகொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்.”

இதில் தேவன் நான் உங்களை ஏற்படுத்தினேன், உங்களைத் தெரிந்து கொண் டேன், உங்களிடம் எதிர்பார்க்கிறேன் என்று ஒரே ஒரு காரியத்தைப் பற்றிக் கூறுகிறார். அது தான் கனி கொடுக்கும் வாழ்க்கை. எல்லா சூழ்நிலைகளிலும் நாம் கர்த்தருக்கென்று கனி கொடுத்து, அவருடைய நாமத்தை மகிமைப் படுத் தும்படி அழைக்கப்பட்டிருக்கிறோம். கர்த்தர் நம்மை சிருஷ்டித்ததன் நோக்கமே அதுதான். நாம் கனியுள்ள வாழ்க்கை வாழ வேண்டும் என்பதுதான். நாம் உதடு களின் கனியாகிய ஸ்தோத்திரப் பலியை இயேசுவுக்குச் செலுத்த வேண்டும் என்பதுதான். அவ்வாறு நாம் செய்யும் போது தேவன் மகிழ்ச்சி அடைவார், மகிமைப்படுவார். இதைத்தான் ஏசாயா தீர்க்கதரிசி, 

ஏசாயா 43 : 21ல் “இந்த ஜனத்தை எனக்கென்று ஏற்படுத்தினேன்; இவர்கள் என் துதியை சொல்லிவருவார்கள்.”

என்றார். நம்மை உண்டாக்கியதன் நோக்கமே தேவனை நோக்கி துதிப்பதும், தேவனை மகிமைப்படுத்துவதும், மிகுந்த கனிகளைக் கொடுப்பதும் தான். 

யோவான்ஸ்நானன் தன்னுடைய முதல் பிரசங்கத்தில், 

மத்தேயு 3 : 8 “மனந்திரும்புதலுக்கு ஏற்ற கனிகளைக் கொடுங்கள்.” ஒவ்வொரு செடியும் தன்னுடைய கொடிகளைப் பற்றி அக்கறை படும். கொடி யானது செடியினுடைய ஒரு அவயம். ஆதலால் அதனைத் தனது கனியின் இருப் பிடமாகக் கொள்கிறது. கொடியும் தன்னை அர்ப்பணிக்கிறது. சிறந்த கொடிகள் மிகுந்த பலனைக் கொடுத்து தோட்டக்காரரை மகிமைப்படுத்தும். கொடியானது தனக்கென்று கவலைப்படாது. செடியில் சுகமாக இளைப்பாறும். செடி அதனைப் பயன்படுத்துவதால் தான் அதிக பலனைக் கொடுக்கும். கொடியானது தன்னு டைய சுய முயற்சியால் எதையும் சாதிக்காது. அது செய்ய வேண்டியதும் இல்லை. அர்ப்பணம் மட்டுமே அதற்கு முக்கியம். அதேபோல் தேவனைச் சார் ந்து அவரில் நிலைத்திருந்தால் மட்டுமே நம்மால் கனி கொடுக்க முடியும். தேவன் நமக்குள் இருந்து கிரியை செய்யும்போது மட்டுமே நம்மால் கனி கொடுக்க முடியும். எல்லா கிறிஸ்தவர்களையும் கனி கொடுப்பதற்காகவே உலகத்தில் தேவன் தெரிந்து கொண்டிருக்கிறார். 

ஆவிக்குரிய கனிகளை நம்மில் பிரதிபலிக்கச் செய்ய வேண்டும். பரலோகம் மிகுந்த கனிகளை நம்மிடம் எதிர்பார்க்கிறது. கர்த்தர் நம்மிலும், நாம் கர்த்தரிலும் நிலைத்திருந்தால் மட்டுமே நல்ல கனிகளைக் கொடுத்து இயேசுவின் சீடர்களா வோம்.அப்பொழுது ஆண்டவருக்கு பிடித்தமான நல்ல கனிகளையும், அதே நேரத் தில் மிகுந்த கனிகளையும் கொடுக்க முடியும். அதனால் பிதா மகிமைப்படுவார். கனி கொடுக்கிறவர்கள் ஆண்டவருக்கும், மற்றவர்களுக்கும் பயனுள்ள வாழ் க்கை வாழ்வார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்வார்கள். ஆத்மாக்களை கர்த்த ருக்கென்று சேர்ப்பார்கள். இரட்சிக்கப் பட்டவர்களுக்கு வெகுமதியை தேவன் கொடுப்பதில்லை. நாம் அதிகக் கனிகளை கொடுக்கும் போது தான் அநேக வெகுமதிகளைப் பெறுகிறோம். கர்த்தருடைய வசனத்தின் படி செயல்படும் போது தான் கனி கொடுக்க முடியும். இதைத்தான் தாவீது, 

சங்கீதம் 1 : 2, 3 “கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்டு, தன் காலத்தில் தன் கனியைத் தந்து, இலையுதிராதிருக்கிற மரத்தைப்போலிருப்பான்; அவன் செய்வதெல்லாம் வாய்க்கும்.”

4) திராட்சைச் செடியில் நிலைத்திருத்தல்:

யோவான் 15 : 4 “என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திரா விட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.”

யோவான் 15ஆம் அதிகாரத்தில் 13முறை நிலைத்திருங்கள் என்ற வார்த்தை திரும்ப திரும்ப கூறப்பட்டிருக்கிறது. நிலைத்திருங்கள் என்று இயேசு சொல் லும்போது, அவ்வப்போது அவர் மேல் நம்பிக்கை வைப்பதினால் எந்த நன்மை யையும் ஏற்படப்போவதில்லை. என்பதை உறுதிப்படுத்துகிறார். அவரில் நிலைத் திருக்க உறுதியான தீர்மானம் எடுத்து அதின் அடிப்படையில் செயல்பட வேண் டும். இயேசுவாகிய திராட்சைச் செடியில் நாம் நிலைத்திருக்கும் போது பலவான் களாக, வல்லமை உள்ளவர்களாக மாறுவோம். அது மட்டுமல்லாமல் அவரு டைய மகிமையான ஆசீர்வாதங்களையும் சுதந்தரித்துக் கொள்ள முடியும். இதைத்தான்,

2 நாளாகமம் 15 : 2ல் “நீங்கள் கர்த்தரோடிருந்தால், அவர் உங்களோ டிருப்பார்; நீங்கள் அவரைத் தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.”

என்று கூறியிருப்பதைக் காணலாம். இயேசு நமக்கு ஏற்படுத்திக் கொடுத்த உறவு முறையில் நாம் நிலைத்திருக்க வேண்டும். அப்பா பிதாவே என்று கூப்பிடுகிற அவருடைய பிள்ளைகள் என்ற உறவு முறையிலும் (யோவான்1:12, ரோமர் 8:15). இயேசுவானவர் நமது மூத்த சகோதரன் என்ற உறவு முறையிலும் நிலைத் திருக்க வேண்டும். இதை யோவான்,

யோவான் 20 : 17ல் “இயேசு அவளை நோக்கி: என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு என்றார்.”

இதை மார்த்தாளிடம் இயேசு உயிர்த்தெழுந்த பின் கூறினார். இதில் சகோத ரர்கள் என்று இயேசு தன்னுடைய சீஷர்களைப் பற்றிக் கூறியிருப் பதையும், என் பிதா உங்கள் பிதா என்றும், என் தேவன் உங்கள் தேவன் என்றும் கூறியிருப் பதையும் பார்க்கிறோம் இந்த உறவு முறையானது இயேசுவாகிய திராட்சைச் செடியில் நாம் ஒட்டப்பட்டு இருப்பதால் கிடைத்தது. இயேசு நமக்காகத் தன் ஜீவனையே கொடுத்தார். அது நம் மீது காட் டிய அன்பினால் தான் தன்னையே அர்ப்பணித்தார். இப்படிப்பட்ட அன்பில் நாம் நிலைத்திருக்கும்போது சத்ருக்களை நேசிக்கும் உள்ளத்தைப் பெறுவோம். திரளான கனிகளைக் கொடுப்போம். ஆவி யின் கனிகளிலே (கலாத்தியர் 5 : 22) சிறந்த கனி அன்பாகும். இயேசு தன் வாயால்,

யோவான் 15 : 9ல் “பிதா என்னில் அன்பாயிருக்கிறதுபோல நானும் உங்களில் அன்பாயிருக்கிறேன்; என்னுடைய அன்பிலே நிலைத்திருங்கள்.”

என்று கூறினார். கிறிஸ்து யோவான்ஸ்நானனிடம் ஞானஸ்நானம் பெற்றபோது பிதா வானத்திலிருந்து தனது அன்பைத் தெரிவிக்க “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறான்” என்று மத்தேயு 3 : 17 ல்கூறினார். கர்த்தர் ஏசாயா மூலமாக “இதோ, நான் தெரிந்து கொண்டவர், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவர் என்று ஏசாயா 42 : 1ல் கூறுகிறார். பிதாவின் அன்பு கிறிஸ்துவின் மூலமாக வெளிப்பட்டு நம்மை வந்து சேருகிறது. பிதாவாகிய தேவன் தன்னுடைய குமாரனை மட்டும் நேசிக்கவில்லை. அவருக்குள் நம் அனைவரையும் நேசிக்கிறார். அவருடைய அன்பு தியாகமான அன்பு, அப்பாவியை அரவணைக்கும் அன்பு, மன்னிக்கும் அன்பு, இரத்தம் சிந்திய அன்பு, பரிந்து பேசும் அன்பு, தம்மண்டை வருகிற ஒருவரையும் தள்ளாத அன்பு, நம்மைத் தேடி வரும் அன்பு, நம்மை அரவணைக்கும் அன்பு, ஒரு தாயைப் போலத் தேற்றும் அன்பு, தந்தையைப் போல அரவணைக்கும் அன்பு அபிஷேகத்தைத் தந்து ஆவியினால் நிரப்பி வரங்களையும் கனிகளையும் கொடுக்கிற அன்பு, முள் முடி சூட்டப்பட்ட அன்பு, ஒன்றையும் எதிர்பார்க்காமல் முழுவதுமே தந்துவிட்ட தியாகமான அன்பு, முடிவுபரியந்தம் நிலைத்திருக்கும் அன்பு, இப்படிப்பட்ட தூய்மையான அன்பை இயேசுவிடம் மட்டும்தான் நாம் பார்க்க முடியும். அப்படிப்பட்ட கிறிஸ்துவின் அன்பில் நாம் நிலைத்திருக்கும் போது நம்மால் மிகுந்த கனிகளை நம்மால் கொடுக்க முடியும். நம்மைத் துன்பப் படுத்துகிறவர்களையும் நம்மால் நேசிக்க முடியும். இயேசு மேலும் தன் வாயால் நாம் எதில் நிலைத்திருக்க வேண்டுமென,

யோவான் 15 : 7 “நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.”

என்றார். கிறிஸ்துவையும் அவருடைய வார்த்தையையும் ஒருவராலும் தனித் தனியே பிரிக்க முடியாது. கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்துவில் நிலைத்தி ருக்க வேண்டும். கிறிஸ்துவின் வார்த்தைகள் நம்மில் நிலைத்திருக்க வேண்டும். கிறிஸ்துவில் நாம் நிலைத்திருந்தால் நம்முடைய ஜெபங்களுக்கு உடனடியாகப் பதில் வரும் (யோவான் 15 : 7). அதனால் கனி கொடுக்கும் வாழ்க்கையைப் பெறு வோம் (யோவான் 15 : 8). நம்முடைய சந்தோஷம் நிலைத்தும், நிறைவாகவும் இருக்கும் (யோவான் 15 : 11). இயேசுவின் வார்த்தைகள் நம்மை ஆற்றுகிறது, தேற்றுகிறது. மேலும் இயேசுவின் உபதேசங்கள் நம்முடைய ஆவிக்குரிய ஜீவி யத்தைக் கட்டி எழுப்புகிறது. நாம் கனி கொடுக்க வேண்டுமானால் ஆண்டவரு டைய வார்த்தையிலும் உபதேசத்திலும் நிலைத்திருக்க வேண்டும். கிறிஸ்துவில் நாம் நிலைத்திருக்கும் போது வேத வசனத்தின் படி ஏற்றுக்கொள்ள வேண்டிய காரியங்களும் உண்டு, விட்டுவிட வேண்டிய காரியங்களும் உண்டு சங்கீதம் ஒன்றாம் அதிகாரத்தில் இந்த இரண்டும் உள்ளது. அதேபோல் யாக்கோபு 4 : 7 லும் இரண்டும் உண்டு. எனவே இயேசு என்ற திராட்சை செடியோடு ஒட்டப்பட்டு, அவருடைய வசனத்தின் படி வாழ்ந்து காட்ட வேண்டும். யோவான்,

1யோவான் 2 : 24ல் “ஆகையால் ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருக்கக்கடவது; ஆதிமுதல் நீங்கள் கேள்விப்பட்டது உங்களில் நிலைத்திருந்தால், நீங்களும் குமாரனிலும் பிதாவிலும் நிலைத்திருப்பீர்கள்.” என்கிறார்.

5) செடியோடு நிலைத்திருக்காவிட்டால்:

மத்தேயு 7 : 19 “நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.”

யோவான் 15 : 2ல் “என்னில் கனிகொடாதிருக்கிற கொடி எதுவோ அதை அவர் அறுத்துப்போடுகிறார்; கனிகொடுக்கிற கொடி எதுவோ, அது அதிக கனிகளைக் கொடுக்கும்படி, அதைச் சுத்தம்பண்ணுகிறார்.”

இதில் இரண்டு வகை கொடிகளை பற்றிக் கூறுகிறார். ஒன்று கனி கொடுக் கும் கொடிகள். இரண்டாவது கனி கொடுக்காத கொடிகள். கனி கொடுக்காதவர்கள் கிறிஸ்துமிடம் விசுவாசமில்லாமல் போனவர்கள் திராட்சைச் செடியிலிருந்து உயிர் எவ்வளவு காலம் செடிக்குள் செல்கிறதோ, அது வரை தான் கொடி உயி ரோடு இருக்கும். அதேபோல் கிறிஸ்துவின் ஜீவன் எவ்வளவு காலம் விசுவாசி க்குள் பாய்கிறதோ அவ்வளவு காலம் தான் விசுவாசிக்குள் ஜீவன் இருக்கும் (யோவான் 15 : 4). கனி கொடுக்காத கொடிகளை அறுத்து போடுகிறார் என்றால், கனி கொடுக்கிற இடத்திலிருந்து அறுத்துப் போடுகிறார். அதாவது கிறிஸ்துவி னிடத்திலுள்ள தொடர்பிலிரு ந்து கனி கொடுக்காதவர்களைப் பிரித்து விடுகிறார். ஏனெனில் கனி கொடுக்கக் கூடிய நல்ல இடத்தில் வைத்திருந்த போதிலும், அதைப்பற்றி அக்கறை இல்லாதவர்களாக இருந்ததால், அந்த இடத்திலிருந்து அப்புறப் படுத்துகிறார். மத்தேயு 3 : 11ல் யோவான்ஸ்நானன் “நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியில் போடப்படும்” என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம்.

கனி கொடாதிருந்த அத்திமரத்தை இயேசு பார்த்த போது “இனி ஒருக்காலும் உன்னிடத்தில் கனி உண்டாகாதிருக்கக்கடவது என்றார்;உடனே அத்திமரம் பட்டுப் போயிற்று” என்று மத்தேயு 21 : 19 லும், “இதுமுதல் ஒருக்காலும் ஒருவ னும் உன்னிடத்தில் கனியைப் புசியாதிருக்கக் கடவன்” என்று மாற்கு 11 : 14லும், “முள்செடிகளையும் முள்பூண்டுகளையும் முளைப்பிக்கிற நிலமோ தகாததாயும் சபிக்கப் படுகிறதற்கேற்றதாயுமிருக்கிறது; சுட்டெரிக்கப்படுவதே அதின் முடிவு” என்று எபிரேயர் 6 : 8 லும் வாசிக்கிறோம். தேவன் அவர்களை நியாயந்தீர்த்து புறக்கணித்து விடுகிறார்.பயனில்லாதவைகளை வெட்டிப்போடுவதுபோல, பயனு ள்ளவைகளைச் சுத்தம் பண்ணுகிறார். எவ்வாறு சுத்தப்படுத்துகிறாரென்றால் நமக்குப் பிரியமாக அல்ல. கர்த்தருக்குப் பிரியமாக இருந்தால் அதை எடுத்து சுத் தம் பண்ணுகிறார். ஏனென்றால் அவைகள் இன்னும் நல்ல கனிகளைக் கொடுக்க வேண்டுமென்பதற்காகச் சுத்திகரிக்கிறார். இஸ்ரவேல் ஜனங்கள் நீதியான கனிகளைக் கொடுக்க வேண்டும் என்று தான் தேவன் அனைத்தையும் செய்தார். 500 ஆண்டுகளாக இஸ்ரவேல் தேசத்தைச் சுற்றிலும் வேலியடைத்துக் காத்து வந்தார். மற்ற நாடுகளுக்கு இரையாக இஸ்ரவேலைத் தேவன் ஒப்புக் கொடுக்கவில்லை.இஸ்ரவேலைத் தொடக் கூட தேவன் அனுமதிக்கவில்லை. ஏசாயா தீர்க்கதரிசி,

ஏசாயா 5 : 5ல் “இப்போதும் நான் என் திராட்சத்தோட்டத்துக்குச் செய்வதை உங்களுக்கு அறிவிப்பேன்; அதின் வேலியை எடுத்துப்போடுவேன், அது மேய்ந்துபோடப்படும்; அதின் அடைப்பைத் தகர்ப்பேன், அது மிதியுண்டுபோம்.”

இதில் வேலியை எடுத்து போடுவேன் என்பது, கர்த்தர் அவனுக்கு கொடுக்கும் பாதுகாப்பை எடுத்துப்போடுவார் என்பதாகும். ஆண்டவரே போய் அந்த அடைப் பைப் பிடுங்க வேண்டும் என்பது அதனுடைய அர்த்தம் அல்ல. தேவன் துயரத் தோடு விலகிப் போய்விடும் போது அடைப்பு தானாக விலகிவிடும். தோட்டமா னது திறந்து விடும் நிலைமைக்கு வந்து விடுவதால் ஆடு, மாடுகள், காட்டு மிருகங்கள் அனைத்தும் உள்ளே நுழைந்து தோட்டத்தை நாசமாக்கி விடும். கர்த்தர் நமக்கு ஜீவனைக் கொடுத்து, சுகத்தைக் கொடுத்து, படிப்பைக் கொடுத்து, ஞானத்தைக் கொடுத்து, நல்ல நிலைமையில் தேவன் நம்மை வைத்திருக்கும் போது, நம்மிடம் கனி இல்லையென்றால், குடும்பங்களில் சந்தோஷமில்லாமல், சமாதானமில்லாமல் சாபங்கள் வரும். மேலும் ஏசாயா 5 : 6 ல் “அதின் மேல் மழை பெய்யாதபடி மேகங்களுக்குக் கட்டளையிடுவேன்” என்கிறார். இஸ்ரவேல் தேசத்தில் இப்போதும் போதுமான பின்மாரி மழை இல்லை. தேவன் இஸ்ர வேலரிடம் நியாயம் இருக்குமென்றுநினைத்தார்.ஆனால்அவர்களிடம் கொடுமை தான் இருந்தது. நீதிக்குப் பயந்து செயல்படுவர் என்றெண்ணினார். ஆனால் அவர்களின் செயல்கள் நேர் மாறாகவே இருந்தது (ஏசாயா 5 : 7).எனவே தான் இயேசு,

யோவான் 15 : 6ல் “ஒருவன் என்னில் நிலைத்திராவிட்டால், வெளியே எறியுண்ட கொடியைப்போல அவன் எறியுண்டு உலர்ந்து போவான்; அப்படிப்பட்டவைகளைச் சேர்த்து, அக்கினியிலே போடுகிறார்கள்; அவைகள் எரிந்துபோம்.” என்றார். 

கொடியானது செடியில் நிலைத்திராவிட்டால் அதற்குத் தனியான செயல்பாடு எதுவும் இல்லை. அது தனியாக வேர் விட்டு கனியைக் கொடுக்க முடியாது. செடியிலிருந்து கொடிகள் அறுக்கப்பட்டு விட்டால் அவை சில மணி நேரங்களில் உலர்ந்து போகும். அதற்குப்பின் அந்தக் கொடிகளினால் யாருக்கும் எந்தப் பிரயோஜனமும் கிடையாது. இறுதியில் சுட்டெரிப்பர். இதே போல் கிறிஸ்துவில் நிலைத்திராவிட்டால் நரகத்தில் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவர். அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும் (மத்தேயு 8 : 12, 22 : 13, 25 : 30). இதைத்தான், 

2 யோவான் 8,9ல் “உங்கள் செய்கைகளின் பலனை இழந்துபோகாமல், பூரண பலனைப் பெறும்படிக்கு எச்சரிக்கையாயிருங்கள். கிறிஸ்துவின் உபதேசத்திலே நிலைத்திராமல் மீறி நடக்கிற எவனும் தேவனை உடையவனல்ல; கிறிஸ்துவின் உபதேசத்தில் நிலைத்திருக்கிறவனோ பிதாவையும் குமாரனையும் உடையவன்.” 

என்று எச்சரிக்கிறார். கர்த்தரிலும் அவரது வார்த்தைகளிலும் நிலைத்திருப் பவனுடைய ஜெபங்கள் கேட்கப்படும். 

முடிவுரை

நாம் ஒவ்வொருவரும் திராட்சை செடியான கர்த்தரோடு நிலைத்திருக்க வேண்டு மென்ற எண்ணத்தோடு இருக்க வேண்டும். அவரோடு நிலைத்திருக்கும் போது, அவரது வசனங்களைக் கைக்கொள்ளும்போது, தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் போது கனிகளைக் கொடுப்போம், அதுவும் அதிக கனிகளைக் கொடு ப்போம். இங்கு நிலைத்திருத்தல் என்பது, தொடர்ச்சியாக, தொடர்புடையதாக வாழ்வதாகும். நாம் நம்முடைய பாவங்களை அறிக்கை செய்து அவரின் நிலைத் திருக்க வேண்டும். நாம் கனி கொடுக்க வேண்டுமென்றால் கர்த்தருக்குள் வளர வேண்டும். அவருடைய ஊழியத்தைச் செய்ய வேண்டும். கர்த்தருக்கென்று மிகுதியான கனிகளைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும், நினைவும் எப்பொழுதும் நமக்கு இருக்க வேண்டும். இயேசுவாகிய திராட்சைச் செடியோடு நாம் நிலைத்திருக்கும் போது, அவருடைய திவ்விய சுபாவங்கள், தெய்வீக குணாதிசயங்கள் நமக்குள் வந்துவிடும். அவரோடு நாம் இணைக்கப்பட்ட பின்பு உன்னதங்களுக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் நம்மால் சுதந்தரிக்க முடியும். நாம் கனி தராமல் போனால் நியாயத்தீர்ப்பாகிய கோடாரி அந்த மரத்தின் மேல் விழும். இதைத்தான் யோவான்ஸ்நானன்,

மத்தேயு 3 : 10ல் “இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது. ஆகையால் நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும்.”

என்றார். நாம் கர்த்தரோடு வைத்திருக்கும் தொடர்பிலும், ஐக்கியத்திலும் ஏதோ ஒரு சிறிய துரு ஏறி விட்டாலும் அவரோடுள்ள ஐக்கியத்தை இழந்து விடுவோம். நமது உன்னத வாழ்வு தடுமாற ஆரம்பிக்கும். எனவே நாம் இயேசுவையே சார்ந்திருக்கப் பழகுவோம். (ரோமர் 6 : 14). ஆமென்.

Related Posts