Menu Close

சிமிர்னா சபையிலுள்ள ஜெயம் கொள்ளுகிறவர்கள் பெறுவது

வெளிப்படுத்தல் 2 : 11 “…ஜெயங்கொள்ளுகிறவன் இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றெழுது.”.

இந்த வசனம் சிமிர்னா சபைக்காக எழுதப்பட்டது. அலெக்ஸ்சாண்டரால் எபேசு வுக்கு வடக்கே சுமார் 35 மைல் தொலைவில் சிமிர்னா பட்டணம் உருவாகியது. எபேசு துறைமுகம் வண்டல் மண்ணினால் சேதமடைந்த பின் சிமிர்னா வியாபாரத் தொடர்புடைய முக்கிய பட்டணமாகச் செயல்பட்டது. இன்று துருக்கி யில் காணப்படும் இந்தப் பட்டணம் இஸ்மிர் என்று அழைக்கப்படுகிறது. இப்போது துருக்கியின் துறைமுகமாகவும், அதன் மூன்றாவது பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது. இந்த அழகிய நகரம் ஆசியாவின் கிரீடம் என்று அழைக்கப்படுகிறது. ரோமர் ஆட்சியின் போது சிமிர்னா சபை மிகுந்த உபத்திரவத்தை சந்தித்தது. இங்குள்ள ஜனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் கிறிஸ்தவர்கள். சிமிர்னா சபையின் விளக்குத்தண்டு நீக்கப்படவில்லை. ஏழு சபைகளுக்கு எழுதப்பட்டதிலும் சிமிர்னாவுக்கு எழுதப்பட்டதே மிகவும் சுருக்கமானது. வெளிப்படுத்தல் 1 : 17 ல் யோவானுக்குக் கர்த்தர் வெளிப்படுத்தியது போல, சிமிர்னா சபைக்கும் தன்னை “முந்தினவரும், பிந்தினவரும், மரித்திருந்து பிழைத்தவர்” என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார். இதைத்தான் பவுல் இயேசு மாம்சத்தின் படி தாவீதின் சந்ததியில் பிறந்தவரென்றும், பரிசுத்தமுள்ள ஆவியின்படி தேவனுடைய சுதனென்றும், மரித்தோரிலிருந்து உயித்தெழுந்ததினால் பலமாய் ரூபிக்கப்பட்ட தேவ குமாரென்றும் கூறுகிறார் (ரோமர் 1 : 5). 

இந்த சபையில் இயேசு எந்தக் குற்றமும் காணவில்லை. ஏழு சபைகளிலும் சிமிர்னா சபை மட்டுமே தரித்திர நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சபைக்கு வெளிப்படுத்தல் 2 : 8 லிருந்து 2 : 11 வரையுள்ள வசனங்கள் கூறப்பட் டுள்ளது. சிமிர்னா சபைக்கு எதிராகச் செயல்படுபவர்கள் யூதர்கள். யூதரென்று கூறிக் கொண்டு, யூதராயிராமல் சாத்தானுடைய கூட்டமாயிருந்து செயல்படு வதை இயேசு அறிந்திருப்பதாகக் கூறுகிறார். அவர்கள் தங்களை யூதரென்று அழைத்துக் கொண்டாலும், உண்மையில் அவர்கள் யூதர்கள் அல்ல என்கிறார். கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் புறஜாதியரை விட அவர்கள் அதிகமாக செய ல்பட்டார்கள். “ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன்” (மத்தேயு 3 : 9), “நாங்கள் ஆபிர காமின் சந்ததியாயிருக்கிறோம்” (யோவான் 8 : 33) என்பது யூதர்களின் நம்பிக்கை. தங்கள் மாம்சத்தில் செய்யப்பட்ட விருத்தசேதனத்தில் நம்பிக்கை கொண்டு, பவுல் கூறின கிருபையின் உபதேசத்தை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் அவர்களை சாத்தானின் கூட்டத்தார் என்கிறார். கிறிஸ்துவின் சுவிசேஷத்தை வேத வார்த்தையின் அடிப்படையில் பிரசங்கியாமல் தங்களுடைய பாரம்பரிய கோட்பாடுகளின் அடிப்படையில் உபதேசிப்பவர்களும், அதை ஏற்றுக் கொள்பவர்களும் சாத்தானுடைய கூட்டத்தார். இங்குள்ள ஜெப ஆலயம் என்பது யூதர்களின் கூடுகை இடமாகும். இங்கு ஆராதனை நடந்தாலும் அவர்கள் ஆராதிப்பது தேவனையல்ல சாத்தானைத்தான். 

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் உலகத்தில் இருந்த நாட்களில் இந்தச் சாத்தானுடைய கூட்டத்தாரால் ஜனங்களை வஞ்சிக்கிறவர் (யோவான் 7 : 12), பிசாசு பிடித்தவர் (யோவான் 8 : 48), தேவ தூஷணம் பேசுகிறவர் (மத்தேயு 26 : 65), போஜனப்பிரியர் (லூக்கா 7 : 34), மதிமயங்கியவர் (மாற்கு 3 : 21), பெயல்செபூலைக் கொண்டு பிசாசைத் துரத்துகிறவர் (மாற்கு 3 : 22) என்றெல்லாம் கூறினர். இதைத்தான் இயேசு “உலகம் உங்களை பகைத்தால், உங்களைப் பகைக்கி றதற்கு முன்னே என்னைப் பகைத்ததென்று அறியுங்கள்” என்று யோவான் 15 : 18 ல் கூறினார். இயேசு அவர்களிடம், அவர்கள் படப்போகிற பாடுகளைக் குறித்துப் பயப்பட வேண்டாம் என்று தைரியம் கொடுக்கிறார். பிசாசானவன் சில ரைக் காவலில் போடுவதினால் பத்துநாட்கள் உபத்திரவப்படுவீர்கள் என்கிறார். அந்த உபத்திரவத்தை நீக்குவேன் என்றோ, உபத்திரவத்தை மத்தியில் தன்னுடைய கிருபை வெளிப்படும் என்றோ கூறவில்லை. அவைகளின் மத்தியில் மரணபரியந்தம் உண்மையாயிரு என்கிறார். அப்பொழுது ஜீவ கிரீடத்தைத் தருவேன் என்கிறார். நாம் ஒவ்வொருவரும் இலவசமாக தேவனுடைய கிருபையினால் இரட்சிக்கப்படுகிறோம் (எபேசியர் 2 : 8 -10) அதன் அடிப்படையில் ஜீவகிரீடத்தைப் பெறுகிறோம். உண்மையில் ஜீவகிரீடமென்பது நித்திய நித்தியமாகப் பரிசுத்தமான நிலையில் தேவனோடு சஞ்சரிக்கும் உன்னதமான அனுபவத்தைக் குறிக்கிறது. 

ஏழு வகையான கிரீடங்களைப் பற்றி வேதத்தில் கூறப்பட்டுள்ளது. அவைகள் என்னவென்றால், 1. ஜீவ கிரீடம் (வெளிப்படுத்தல் 2 : 10), 2. அழிவில்லாத கிரீடம் (1கொரிந்தியர் 9 : 25), 3. மகிழ்ச்சியின் கிரீடம் (1தெசலோனிக்கேயர் 2 : 19), 4. நீதியின் கிரீடம் (2 தெசலோனிக்கேயர் 4 : 8), 5. வாடாத கிரீடம் (1பேதுரு 5 : 4), 6. பவுலின் கிரீடமாகிய விசுவாசிகள் (பிலிப்பியர் 4 : 1), 7. மூப்பர்களின் கிரீடம் (வெளிப்படுத்தல் 4 : 4) என்பதாகும். . சிமிர்னா சபைக்கு மட்டுமல்ல, வாழ்க்கையில் கடினமான பாதையில் வேதனையோடும், வருத்தத்தோடும், வாழ்நாட்களைக் கழித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவருக்கும் தேவன் கொடுக்கும் ஆலோசனை என்னவென்றால் பயப்படாதே என்றும், மரணபரியந்தம் உண்மையாயிரு என்பதும் தான். பவுல் 2 தீமோத்தேயு 3 : 12 ல் “கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்” என்கிறார். இயேசு பவுலை அழைக்கும்போது அனனியா தீர்க்கதரிசியிடம் “அவன் என்னுடைய நாமத்தினிமித்தம் எவ்வளவாய்ப் பாடுபட வேண்டுமென்பதை நான் அவனுக்குக் காண்பிப்பேன்” என்கிறார். ஜெயம் கொள்ளுகிறவர்கள் இரண்டாம் மரணத்தினால் எந்த சேதமும் அடைவதில்லை என்று இயேசு வாக்களிக்கிறார். அவர்கள் இரண்டாவது மரணத்தைச் சந்திக்கப் போவதும் இல்லை. 

முதலாம் மரணம் என்பது எல்லாருக்கும் சம்பவிக்கும் சரீர மரணத்தைக் குறிக்கிறது. மனிதன் ஆவி ஆத்துமா சரீரம் என்ற நிலையில் படைக்கப் பட்டவன். ஆவியும் ஆத்மாவும் சரீரத்தில் வாசமாயிருக்கிறது. சரீரத்திலிருந்து ஆவியும் ஆத்துமாவும் பிரியும்போது முதலாம் மரணம் சம்பவிக்கிறது (லூக்கா 12 : 20). இந்த சரீர மரணம் துன்மார்க்கர், நீதிமான் யாவருக்கும் பொதுவானது. மனித னின் சரீரம் மட்டுமே மண்ணாலானது. எனவே மண்ணுக்குத் திரும்புவது மனிதனின் சரீரம் மட்டுமே. ஆவி, ஆத்துமாவான உள்ளான மனிதன் மண்ணானவல்ல. எனவே உள்ளான மனிதன் மண்ணுக்குத் திரும்புவதில்லை. இரண்டாவது மர ணம் ஒரு மனிதனுடைய ஆவியும் ஆத்மாவும் நித்திய நித்தியமாக தேவனிடமிருந்து பிரியும் வேதனையான அனுபவத்தைக் குறிப்பிடுகிறது. ஜீவ புத்தக த்தில் பெயரெழுதப்படாதவர்கள் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டு, அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலாகிய நரகத்தில் பங்கடைவதை இரண்டாம் மரணம் என்று வேதம் கூறுகிறது (வெளிப்படுத்தல் 20 : 15, 21 : 8). இவர்கள் நரகத்தில் தள்ளப்பட்டவர்கள் என்றும், கொடிய வேதனைகளை அனுபவிப்பார்கள் என்றும் வேதம் பலதடவை தெளிவாகக் கூறுகிறது (மாற்கு 3 : 29, 9 : 43 – 48, தானியேல் 12 : 2, மத்தேயு 18 : 8, 25 : 41, 46).

அக்கினிக்கடல் எப்படிப்பட்டது என்றால் அழுகை, பற்கடிப்பு (மத்தேயு 22 : 13, 25 : 30), நித்திய அழிவு (2 தெசலோனிக்கேயர் 1 : 9), அக்கினிச்சூளை (மத்தேயு 13 : 42, 50), அந்தகாரச் சங்கிலி (2 பேதுரு 2 : 4), அவியாத அக்கினி (மாற்கு 9 : 43), அக்கினியும் கந்தகமும் எரிகிற கடல் (வெளிப்படுத்தல் 19 : 20), அக்கினிச் சூளையின் புகை (வெளிப்படுத்தல் 14 : 11), நித்திய தண்டனை (மத்தேயு 25 : 46) ஆகியவைகள் நிறைந்த இடம். சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்குப் பயப்பட வேண்டாம். ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்பட வேண்டும் என்று மத்தேயு 10 : 28 ல் இயேசு கூறியிருப்பதைப் பார்க்கிறோம். இரண்டாம் மரணத்துக்குத் தப்புவித்துக் கொள்ள வேண்டுமெனில் இவ்வுலகில் வாழும்போதே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டாகும் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனவே தேவ வாக்குப்படி ஜெயம் கொள்ளுகிறவர்கள் மட்டுமே இரண்டாம் மரணத்தினால் சேதப்படுவதில்லை என்றறிகிறோம். நாமும் ஜெயங் கொண்டவர்களாக இரண்டாம் மரணத்தில் சேதப்படாதவர்களாக இருக்கப் பிரயாசப்படுவோம். ஆமென்.

Related Posts