Menu Close

மேவிபோசேத்

சவுலின் குடும்பமும் தாவீதும்:

தாவீது யூதா கோத்திரத்தைச் சேர்ந்தவன். சவுல் பெஞ்சமின் கோத்திரத்தைச் சேர்ந்தவன். சவுல் ராஜாவின் குமாரன் யோனத்தான். யோனத்தானின் குமாரன் மேவிபோசேத். தாவீது கோலியத்தைக் கொன்றபோது, ஜனங்கள் சவுல் கொன்றது ஆயிரம். தாவீது கொன்றது பதினாயிரம் என்று பாட்டுப் பாடினார்கள். இதனால் பொறாமை கொண்ட சவுல் ராஜா தாவீதை ஏழு ஆண்டுகள் 3000 போர்சேவகர்களைக் கூட்டிக்கொண்டு கொலை செய்யத் துரத்தினான். இருவருக்கும் நெடுநாள் யுத்தம். தாவீது வரவர பலத்தான். சவுலோ வரவர பலவீனப்பட்டான். இவைகள் தெரிந்தும் சவுலின் மகனான யோனத்தானும் தாவீதும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தனர். இருவருடைய சிநேகமும் அளவற்றது. யோனத்தானின் ஆத்துமா தாவீதின் ஆத்துமாவோடு ஒன்றாய் இசைந்திருந்தது என்றும், யோனத்தான் தாவீதை தன் ஆத்துமாவை சிநேகித்தது போலவும், உயிரை சிநேகித்தது போலவும் தாவீதை சிநேகித்தான் என்றும் 1சாமுவேல் 18 : 1, 3, 20 :17 ல் பார்க்கிறோம். சவுல் அதற்காகப் போடுகிற திட்டங் களையெல்லாம் யோனத்தான் தாவீதுக்குத் தெரிவித்து, அவனைத் தப்புவிப்பான் (1சாமுவேல் 19 : 2, 3). அதனால்தான் தாவீது யோனத்தான் இறந்த செய்தியைக் கேட்டு 1சாமுவேல் 1 : 26 ல் ஸ்திரீகளின் ஸ்நேகத்தைப் பார்க்கிலும் உன்னு டைய சிநேகம் அதிகமாயிருந்தது என்று புலம்பினான். சவுல் ஈட்டியால் தாவீதைக் குந்த வந்த போதும் கர்த்தர் அவனைத் தப்புவித்தார். சவுல் ராஜா தாவீதிடம் சிக்கினாலும், தாவீது சவுலைக் கொலை செய்யவில்லை. சவுல் தாவீதைப் பார்த்துப் பொறாமைப் பட்டதால், அவனது வாழ்க்கை நாசமானது.

மேவிபோசேத்:

சவுல் ராஜா பெலிஸ்தியருடனுன் போரிடும் போது சவுலும் யோனத்தானும் இறந்து விட்டார்கள். அப்பொழுது யோனத்தானுக்கு 5 வயதுள்ள ஒரு குமாரன் இருந்தான். புது ராஜா பதவியேற்குமுன் பழைய ராஜாவின் சந்ததியிலிலுள்ள அனைவரையும் கொன்று போடுவர். அதனால் அவனையும் கொன்றுபோடுவர் என்று அவனுடைய தாதி அவனை எடுத்துக் கொண்டு ஓடினாள். அவள் ஓடிப் போகிற அவசரத்தில் அவன் விழுந்து முடமானான். அவனுக்கு மேவிபோசேத் என்று பெயர் (2சாமுவேல் 4 : 4). மேவிபோசேத் என்றால் வெட்கங்கெட்டவன் அல்லது அவமானம் என்று பொருள். இப்பொழுது அவன் லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிருந்தான் (2 சாமுவேல் 9 : 1 – 4). லோதேபார் என்ற இடம் பசுமையில்லாத, வறட்சியான, ஒரு புல்பூண்டு கூட முளைக்காத இடம். அந்த இடம் எருசலேமிலிருந்து வெகுதூரத்திலிருந்தது. இது கீலேயாத்தின் பக்கத்திலுள்ளது. யோர்தானுக்கு கிழக்கே காணப்பட்டது. இந்த இடம் மானாசேக்குக் கொடுக்கப்பட்ட இடம். அப்படிப்பட்ட இடத்தில் அவனை மறைத்து வைத்திருந்தனர். இருபது வருடங்கள் அந்த இடத்தில் அவன் மறைந்து வாழ்ந்தான். மேவிபோசேத்தோ நம்பிக்கையிழந்து மதிப்பையிழந்து, அவமா னத்துடன் அங்கிருந்தான். ராஜாவாக எருசலேமில் இருக்க வேண்டியவன் வனாந்தரமான ஓரிடத்தில் அடிமையாக வாழ்ந்து வந்தான். தேவனால் புறக்க ணிக்கப்பட்ட குடும்பம், வேலைக்காரன் வீட்டிலே வேலைக்காரனாக இருந்தான். ஒருகாலத்தில் வல்லமையான ராஜாவின் குடும்பத்தில் வாழ்ந்தான். ஆனால் இப்பொழுதோ அழிந்துபோன குடும்பமாக, மரணத்தைக் குறிக்கப் பட்டவனானான்.

தாவீதும், யோனத்தானும் பண்ணிய உடன்படிக்கை:

தாவீதுடன் கர்த்தர் கூடவே இருந்தார். தாவீதின் 16 வது வயதில் முதன்முதலில் சாமுவேல் தீர்க்கதரிசியால் அபிஷேகம் பண்ணப்பட்டான். இப்பொழுது 3 வது முறையாக தாவீதின் 40 வது வயதில் ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டு, சவுல் இறந்து விட்டதால் தாவீது இராஜாவானான். சில வருடங்களுக்குப் பின், ஏனெனில் யோனத்தான் உயிரோடிருக்கும் போது தாவீதும், யோனத்தானும் 1 சாமுவேல் 18 : 3, 20 : 14,15 ல் உடன்படிக்கை பண்ணியிருந்தனர். அது என்னவென்றால், 

“யோனத்தான் தாவீதைத் தன் ஆத்துமாவைப் போலச் சிநேகித்ததினால், அவனும் இவனும் உடன்படிக்கைபண்ணிக் கொண்டார்கள். “

“மேலும், நான் உயிரோடிருக்கையில், நான் சாகாதபடிக்கு நீர் கர்த்தரின் நிமித்தமாய் எனக்குத் தயைசெய்யவேண்டியதும் அல்லாமல், கர்த்தர் தாவீதின் சத்துருக்களாகிய ஒவ்வொருவரையும் பூமியின்மேல் இராதபடிக்கு, வேர் அறுக்கும்போதும், நீர் என்றைக்கும் உமது தயவை என் வீட்டைவிட்டு அகற்றிவிடாமலும் இருக்கவேண்டும் என்றான்.”

தாவீது பல வருடங்களுக்குமுன் தான் யோனத்தானுடன் பண்ணின இந்த உடன் படிக்கையை நினைவுகூர்ந்தான். இதேபோல் கர்த்தர் ஏற்படுத்திய 9 உடன்படிக் கைகளை இங்கு கூற விரும்புகிறேன். ஏதேன் உடன்படிக்கை ஆதியாகமம் 1 : 28 – 30, 2 : 16, 17, ஆதாமுடன் உடன்படிக்கை ஆதியாகமம் 3 : 14 – 19, ரோமர் 8 : 19 – 23, நோவாவுடன் உடன்படிக்கை ஆதியாகமம் 8 : 20 – 9 : 27, ஆபிரகாமுடன் உடன் படிக்கை ஆதியாகமம் 12 : 1 – 3, 13 : 14 – 17, 15 : 1 – 18, 17 : 1 – 8, மோசேயுடனான உடன்படிக்கை யாத்திராகமம் 20 : 1 – 31 : 18, பாலஸ்தீனிய உடன்படிக்கை உபாக மம் 30 : 1 – 10, தாவீதுடன் உடன்படிக்கை 2 சாமுவேல் 7 : 5 – 19, புதிய உடன்படி க்கை எரேமியா 31 : 31 – 33, மத்தேயு 26 : 28, எபிரேயர் 8 : 8 – 12லும் பார்க்கிறோம். தாவீது நன்றி மறவாதவனாயிருந்தான். தாவீது ஆடுகளின் பின்னே அலைந்து கொண்டிருந்த தன்னை ராஜாவாக தேவன் மாற்ற, யோனத்தான் ஒரு கருவியாக இருந்ததை நினைத்துப் பார்த்தான். 

தாவீதும், சீபாவும்:

சவுலின் வீட்டுவேலைக்காரியான சீபாவைத் தாவீது அழைத்துவரச் சொன்னான். அவன் வந்த பின் தாவீது அவனிடம் யோனத்தானிமித்தம் என்றும், இரண்டாவது தேவனிமித்தம் சவுல் வீட்டாருக்குத் தான் தயவு செய்ய நினைத்திருப்பதாகவும், அதனால் அவனுடைய வீட்டாரில் யாராவது மீதியாயிருக்கிறார்களா என்று கேட்டான். அப்பொழுது அவள் யோனத்தானுக்கு இரண்டு கால்களும் முடமான ஒரு குமாரன், லோதேபாரிலே அம்மியேலின் குமாரனாகிய மாகீரின் வீட்டிலிரு ப்பதாகக் கூறினான் (2 சாமுவேல் 9 :1 – 4). தாவீது யோனத்தானின் குமாரனைத் தேடினது போல, பாவத்திலும், அக்கிரமத்திலும் மரித்தவர்களாயிருந்த நம்மைத் இயேசு தேடி வந்து, தனது உயிரையே கொடுத்து, நமது பாவங்களை மன்னித்து கிறிஸ்துவுடனேகூட இரட்சித்து உயிர்ப்பித்தார் (ரோமர் 5 : 6, 8, 10, எபேசியர் 2 : 4, 5). தாவீது யாருக்கு இரக்கம் காட்டினாரென்றால் தன்னைக் கொலை செய்யப் பல வருடங்களாகத் தேடினவனின் பேரனுக்கு. பவுல் வேதத்தில் எபேசியர் 4 : 32 ல் பவுல் “கிறிஸ்து உங்களை மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்” என்றார். தாவீது எப்பொழுதும் தேவனைப் பற்றிக் கொண்டிருந் ததால் கிறிஸ்துவின் சிந்தை அவனிடமிருந்து. 

மேவிபோசேத்தின் நிலை:

மேவிபோசேத் தாவீதின் சமூகத்துக்கு கொண்டு வரப்பட்டான். 5வது வயதில் எருசலேமை விட்டு ஓடினவன் 20 வருடங்கள் கழித்துத் திரும்பி வருகிறான். தான் இன்று கொல்லப்படப் போகிறேன் என்று பயந்து நடுங்கி நின்றான். ராஜா பேசுவதற்கு முன் அவன் முகங்குப்புற விழுந்து வணங்கினான். இதேபோல் ஆபிரகாம் தேவன் பேசியவுடன் ஆதியாகமம் 17 : 3,17 லும், யோசேப்பு யாக்கோ பைப் பார்த்தவுடன் ஆதியாகமம் 48 : 26 லும், யோசேப்பின் சகோதரர்கள் யோசேப் பைப் பார்த்தவுடன் ஆதியாகமம் 33 : 3, 42 : 6, 43 : 26 லும், ரூத் போவாசைப் பார்த்து ரூத் 2 : 10 லும், தாவீது சவுலைப் பார்த்து 1சாமுவேல் 24 : 8லும், யோவாப், அப்ச லோம், நாத்தான், ஓர்னான் தாவீதை பார்த்து 2 சாமுவேல் 14 : 22, 14 : 33, 1இராஜா க்கள் 1 :23, 1 நாளாகமம் 21: 21 லும், நேபுகாத்நேச்சார் தானியேலைப் பார்த்து தானி யேல் 2 : 46 லும், தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவைப் பார்த்து 2 இராஜாக்கள் 2 : 15 லும், போர்சேவகர்கள் இயேசுவை சிலுவைக்குமுன் மாற்கு 15 : 19 லும், 24 மூப்பர்களும் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனைப் பார்த்து வெளிப்படுத்தல் 4 : 10, 5 : 14, 19 : 4 லும் , 24 மூப்பர்களும் 4 ஜீவன்களும் ஆட்டுக்குட்டியானவரைப் பார் த்து வெளிப்படுத்தல் 5 : 8 லும், யோவான் தூதனைப் பார்த்து வெளிப்படுத்தல் 19 : 10, 22 : 8 லும், முகங்குப்புற விழுந்து பணிந்து தொழுது கொண்டதைப் பார்க் கிறோம். 

தாவீது அவனைப் பார்த்து மேவிபோசேத் என்று கூப்பிட்டவுடன் இதோ அடியேன் என்றான் மேவிபோசேத் தான் காண்கிறது கனவா, நினைவா என்று நினைத்திருப்பான். அந்தநாள் அவனது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையின் நாள். இதிலிருந்து அவனுடைய தாழ்மையைப் பார்க்கிறோம். நம்மையும் பேர் சொல்லி அழைக்கும் தேவன்தான் நம் தேவன். ஆபிரகாமே ஆபிரகாமே என்று ஆதியாகமம் 22 : 11லும், யாக்கோபே யாக்கோபே என்று ஆதியாகமம் 46 : 2 லும், மோசே மோசே என்று யாத்திராகமம் 3 : 4 லும், சாமுவேலே சாமுவேலே என்று 1 சாமுவேல் 3 : 10 லும், சவுலே, சவுலே என்று அப்போஸ்தலர் 9 : 4 லும், மார்த் தாளே , மார்த்தாளே என்று லூக்கா 10 : 41 லும், ஆகாரே என்று ஆதியாகமம் 16 : 8 லும், பேர் சொல்லி அழைத்த தேவன் நம் தேவன். நம்முடைய பெயர் அவரால் மறக்கப்படுவதில்லை. தாயின் கருவில் நாம் உருவாகும் முன்னே, நம்முடைய எலும்புகளும், நரம்புகளும் உருவாகும் முன்னே நம்மைப் பெயர் சொல்லி அழைத்த தேவன் நம் தேவன். உலகத்தோற்றத்திற்கு முன்னே நம்மைத் தெரிந்து கொண்ட தேவன் நம் தேவன் (எபேசியர் 1 : 4). 

தாவீது கொடுத்த சலுகைகள்:

தாவீது அவனைப் பார்த்து,

2சாமுவேல் 9 : 7 “ தாவீது அவனைப் பார்த்து: நீ பயப்படாதே; உன் தகப்பனாகிய யோனத்தான் நிமித்தம் நான் நிச்சயமாய் உனக்குத் தயைசெய்து, உன் தகப்பனாகிய சவுலின் நிலங்களையெல்லாம் உனக்குத் திரும்பிக் கொடுப்பேன்; நீ என் பந்தியில் நித்தம் அப்பம் புசிப்பாய் என்றான்.”

தாவீது மேவிபோசேத் தன்னைப்பார்த்து தான் கொல்லப்படப் போகிறேனோ என்று பயந்து நடுங்குவதைப் பார்த்து முதலில் பயப்படாதே என்றார். இதே போல் வேதத்தில் அநேக முறை தேவன் பயப்படாதே என்று கூறியிருப்பதைப் பார்க்கிறோம். வேதத்தில் 365 முறை பயப்படாதே என்று வருகிறது. அதில் முக்கியமான சிலவற்றை இங்கு பார்ப்போம். கர்த்தர் ஆபிரகாமைப் பார்த்து ஆதியாகமம் 15 : 1 லும், ஈசாக்கைப் பார்த்து ஆதியாகமம் 26 : 24 லும், யாக்கோ பைப் பார்த்து ஆதியாகமம் 46 : 3 லும், யோசுவாவைப் பார்த்து யோசுவா 8 : 1 லும், கர்த்தருடைய தூதன் சகரியாவைப் பார்த்து லூக்கா 1 : 12, 13 லும், மரியா ளைப் பார்த்து லூக்கா 1 : 30 லும், பவுலைப் பார்த்து அப்போஸ்தலர் 27 : 24 லும், இயேசு சீஷர்களைப் பார்த்து மத்தேயு 14 : 27 லும், கர்த்தர் ஜனங்களைப் பார்த்து ஏசாயா 44 : 8 லும் பயப்படாதே என்று தைரியம் கொடுத்திருப்பதைப் பார்க்கி றோம். 

மேவிபோசேத் தாவீதின் பயப்படாதே என்ற சொல்லைக் கேட்டுத், திரும்ப தாவீதை வணங்கி செத்தநாயைப் போல தான் இருப்பதாகவும், நீர் தன்னை நோக்கிப் பார்க்கிறதற்கு தான் எம்மாத்திரம் என்றான். உயிரோடிருக்கிற நாயையே யாரும் மதிக்க மாட்டார்கள். செத்த நாயையோ திரும்பிக்கூட பார்க்க மாட்டார்கள். 1பேதுரு 5 : 5 ல் தாழ்மையுள்ளவர்களுக்குத் தேவன் கிருபை யளிக்கிறார் என்றுள்ளது. நாமும் நமது பழைய வாழ்க்கையை நினைத்துப் பார்க்க வேண்டும். நாம் மனந்திரும்பி, இரட்சிக்கப்பட்டு, ஆவிக்குரிய ஜீவியத்தில் ஆசீர்வதிக்கப்பட்டாலும், பழைய வாழ்க்கையை மறக்கக்கூடாது. நாம் எவ்வாறு பாவச் சேற்றிலிருந்து நம்மைத் தேவன் தன்னுடைய அன்பினால் தூக்கி யெடுத்து பாவங்களறச் சுத்திகரித்ததை நினைத்துப் பார்க்க வேண்டும். எந்த இடத்திலிருந்து ஓடினானோ, அதே இடத்திற்கு 20 வருடங்களுக்குப் பின் தேவனுடைய தயவினால் திரும்ப அழைத்து வரப்பட்டான். 

அவன் கீழே விழுந்ததால் முடமாக்கப்பட்டான். ஆனால் தாவீதினால் அவனது வாழ்க்கை மாறியது. அதேபோல் நாமும் ஆவிக்குரிய வாழ்க்கையில் எந்த இடத்தில் செயல்படாமல் முடமாக்கப்பட்டிருக்கிறோம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும். கர்த்தர் எதிர்பார்த்த வாழ்க்கை வாழாமல் , அவருடைய சித்தத்தின்படி செயல்படாமல் வாழ்கிறோமா என்று நினைத்துப் பார்த்து, நமக்கு மீண்டும் வாழ்க்கைத் தரவிருக்கும் இயேசுவண்டை சென்றால் போதும், அவர் அனைத் தையும் மாற்றுவார். உடனே தாவீது சவுலின் வேலைக்காரனாகிய சீபாவை அழைத்து யோனத்தானுடையது மட்டுமல்ல, அவனுடைய தகப்பனாக சவுல் ராஜாக்குமுள்ள சொத்துக்கள் அனைத்தையும் மேவிபோசேத்துக்குக் கொடுத் தேன் என்றும், நித்தமும் தன்னோடுகூட தன்னுடைய பந்தியில் அப்பம் புசிப்பான் என்றும் கூறினார். ஒருநாள் இரண்டு நாள் அல்ல, நித்தமும் தன்னுடனே அப்பம் புசிப்பாய் என்று அவனைத் தன்னோடு உயர்த்தினார்.

இந்த அதிகாரத்தில் மூ ன்று முறை தாவீது தன்னுடைய பந்தியில் மேவிபோசேத் சாப்பிடுவான் என்றுள்ளது (2சாமுவேல் 9 : 7, 10, 17). தாவீது யோனத்தானின் மகனைத் தன்னுடைய மகனாகப் பார்த்தார்.அந்த நிலங்களைப் பயிரிட்ட பலனை சேர்க்கக் கூறினார். சீபாவுக்கு பதினைந்து குமாரரும் இருபது வேலைக்காரரும் இருந்தார்கள். சீபா தாவீதிடம் தாவீது கூறினபடி செய்வேன் என்றான். மேவிபோ சேத்திற்கு மீகா என்று குமாரன் இருந்தான். அந்த நாளிலிருந்து மேவிபோசேத்து எருசலேமில் இருந்தான். சீபாவின் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் மேவிபோ சேத்துக்கு வேலைக்காரர்களாயிருந்தார்கள் (2 சாமுவேல் 9 : 9 – 13). இதில் மேவி போசேத் திரும்பி வந்த போது இழந்துபோன ஆசீர்வாதங்களையும், நித்தமும் ராஜாவின் சமூகத்தை அனுமதிக்கும் பாக்கியத்தையும் தேவதயவினால் பெற் றான். நாமும் ஒவ்வொருவருவரும் இயேசுவினிடத்தில் திரும்பி வந்த போது, பாவத்தினிமித்தம் இழந்துபோன ஆசீர்வாதங்களை திரும்பப் பெற்றுக் கொள்வோம். 

முடிவுரை:

தாவீது தன் மகன் அப்சலோமினிமித்தம் தப்பியோடி, பின்பு சமாதானத்துடன் திரும்பி வந்தபோது மேவிபோசேத் துக்கத்துடன் தாவீது வருகிற வரை தன் கால்களைச் சுத்தம் பண்ணாமல், தன் தாடியை சவரம் பண்ணாமல், தன்னுடைய வஸ்திரங்களை வெளுக்காமலும் இருந்தான் என்று 2 சாமுவேல் 19 : 24 ல் பார்க் கிறோம். அதாவது தாவீது திரும்பி வருகிற வரை மேவிபோசேத்து உலகப்பிரகா ரமான சௌகரியங்களையும், சந்தோஷங்களையும், சிற்றின்பங்களையும் அனுப விக்காமலிருந்தான். இயேசு சிலுவையில் இரத்தத்தினால் பண்ணின உடன்படி க்கையினால் தான் நம்மை மீட்டெடுத்தார். அதனால்தான் இன்றும் நாம் ஜீவிக்கி றோம். யாராவது குடும்பத்தில் அவமானப்படுத்தப்பட்டு, நிந்திக்கப்பட்டு, சிறு மை ப்படுத்தப்படுத்தப்பட்டு வெளியே தலை காட்ட முடியாமல் மேவிபோசேத்தைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறீர்களா கர்த்தர் உங்களை அழைத்து அனைத் தையும் மாற்றி தலை நிமிரச்செய்வார். வேதம் லூக்கா 19 : 10 இழந்து போன தைத் தேடவும் இரட்சிக்கவுமே தேவகுமாரன் வந்தாரென்று பார்க்கிறோம். நாமும் இழந்துபோன சமாதானத்தை, சந்தோஷத்தை, சொத்துக்களை, இயேசு வால் இரட்டைத்தனையாய்ப் பெற்றுக் கொள்வோம். மேவிபோசேத்துக்கு தகப்ப னின் ஆஸ்தி, மூதாதையரின் ஆஸ்தி அனைத்தும் இருக்கிறதும் தெரியாமல் போனாலும், உறவினர்கள் அவனை விட்டுப் போனாலும், யாருமறியாத வறட்சி யான இடத்தில் இருந்தாலும் தேவனுடைய தயவு தாவீதின் மூலம் ஆசீர்வாத த்தைக் கொண்டு வந்தது. ஆகாருக்குத் தயை காட்டின கர்த்தர், மேவிபோசேத் துக்குத் தயை காட்டின கர்த்தர் நமக்கும் தயை காட்டுவார். இயேசுவைபோல நாம் தாழ்மையாய் ஜீவித்து, உலகத்தின் சிற்றின்பங்களை அனுபவியாமல் நம்முடைய ஜீவியத்தை இயேசுவுக்கே அர்பணிப்போம். ஆமென்.

Related Posts