Menu Close

லீதியாள்

லீதியாள் என்பது அவளது பெயரல்ல. இவள் வாழ்ந்து வந்த ஊர் தியத்தீரா என்பதாகும். அந்த ஊர் லிதியா என்ற பகுதியிலுள்ளது. அதனால் அந்தப் பட்ட ணத்தின் பெயரால் லீதியாள் என்றழைக்கப்பட்டாள். இந்த ஊர் ஆசியா மைனரி லிலுள்ள சிறிய பட்டணம். இந்தத் தியத்தீராவில் நடக்கும் தொழில்கள் என்ன வெனில் துணி நெய்தல், துணிகளுக்குச் சாயம் போடுதல், மண்பாண்டங்கள் செய்தல், வெண்கலத்தில் பாத்திரங்கள் செய்தல் என்பவைகளாகும். லீதியாள் தன்னுடைய சொந்த ஊரான தியத்தீராவிலிருந்து, தன்னுடைய சொந்த ஜன த்தை விட்டு விட்டு பல மைல் அப்பாலுள்ள பிலிப்புப் பட்டணம் வந்து, அங்கே குடியிருந்து தன்னுடைய சொந்த ஊரில் செய்த தொழிலான இரத்தாம்பரத் துணிகளை நெய்து வியாபாரம் நடத்தி வந்தாள். இரத்தாம்பரம் என்பது செல்வந் தர்கள் பயன்படுத்தும் ஒரு பொருள். ஆகவே இந்த வியாபாரம் அதிகமான செல் வத்தைக் கொடுக்கும் வியாபாரம். பிலிப்பு பட்டணத்திற்குச் சென்றால் தன்னு டைய வியாபாரத்தை இன்னும் அதிகமாக விருத்தி பண்ணலாமென்றும், அங்கு இரத்தாம்பரத்தை விற்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதையும் அறிந்து குடும்ப மாக பிலிப்புப் பட்டணத்தில் வந்து குடியேறினான். 

இந்த ஊர் மக்கதோனியா பட்டணத்தைச் சேர்ந்தது. இவள் ஒரு கிறிஸ்தவ முதல் வியாபாரப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது. அவ்விடத்தில் இரத்தா ம்பரம் விற்பது பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்தது. அவள் தெரிந்தெ டுத்த அந்த வியாபாரம் அவளுக்குப் பெயரையும், புகழையும் கொடுத்தது. இவளு டைய பெயர் இரண்டு முறை மட்டுமே வேதாகமத்தில் வருகிறது (அப்போஸ்தலர் 16 : 13 – 15). இந்தப் பிலிப்புப் பட்டணம் ரோமர்கள் அதிகமாக வாழும் பட்டணம். இவள் ஒரு யூத மார்க்கத்தைச் சேர்ந்தவளாகவோ, அல்லது யூதமார்க்கத்திலிருந்து வந்தவளா கவோ இருந்திருக்கலாம். அதனால்தான் கர்த்தரை வழிபடுகிறவளாக இருந்தாள். தேவபக்தியுள்ள பெண்ணாக இருந்ததால், பக்தியுள்ளவர்களைத் தேவன் தமக் காகத் தெரிந்து கொள்வார் என்ற வேதவசனத்தின்படி லீதியாளைத் தேவன் தெரிந்தெடுத்தார் (சங்கீதம் 4 :3). பிலிப்புப் பட்டணத்தில் அநேக யூதர்கள் இல்லா ததால் அங்கு ஜெபஆலயம் இல்லை. இவளுக்கு உண்மையான ஜீவனுள்ள தேவனைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ஆர்வம் அதிகமாக இருந்தது. அவளது வாஞ்சையைப் பார்த்த கர்த்தர் பவுலையும், சீலாவையும் பிலிப்புப் பட்டணத்துக்கு அனுப்பி வைத்தார். 

பவுல்

பவுல் தனது இரண்டாவது மிஷினெரிப் பயணத்தில் இருக்கும்போது பல பட்ட ணங்களில் சுவிசேஷத்தை அறிவித்து விட்டு கலாத்தியா, பிரிகியா பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்க முயற்சியெடுத்தனர். ஆனால்ஆவியானவர் ஆசியாவிலே வசனத்தைச் செல்லாதபடி அதற்குத் தடை பண்ணினார். ஒருநாள் பவுல் ஒரு தரிசனம் பார்த்தார். அதில் மக்கதோனியா தேசத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அவர்களுடைய பகுதிகளில் வந்து ஊழியம் செய்ய வேண்டுமென்று கேட்டதாக இருந்தது. இதனால் தேவ ஆவியானவர் அவர்களை மக்கதோ னியா தேசத்துக்குத் தங்களைப் போகச் சொல்லுகிறார் என்பதைக் குறிப்பால் உணர்ந்தார். அதனால் பவுல் தன்னோடு சேர்ந்தவர்களுடன் மக்கதோனியாவின் தலைமைப் பட்டணமான பிலிப்பு என்ற பட்டணத்துக்குப் போய்ச் சேர்ந்தனர். சில நூற்றாண்டுகளுக்கு முன் ரோமர்கள் அதைக் கைப்பற்றியதால், அந்தப் பட்டணம் மிகவும் செழிப்பாக இருந்தது. அதனால் அங்கு ரோமர்கள் அதிகமா கக் குடியிருந்தனர். அங்கு ஜெபஆலயமில்லாததால் அங்குள்ளவர்கள் ஆற்றங் கரை யில் கூடி ஜெபித்து வந்தனர். அன்றைய யூத வழக்கத்தின்படி அவர்கள் ஒரு ஜெப ஆலயத்தை உருவாக்க வேண்டுமானால் குறைந்தது 10 அங்கத் தினர்களாவது சேர்ந்திருக்க வேண்டும். அப்படியில்லாத பட்சத்தில், தங்கள் ஓய்வு நாளை பொதுவாக ஒரு இடத்திலோ அல்லது தங்கள் வீடுகளிலோ கருத்தாக ஆசரித்து வந்தனர். 

பவுலும் அவரோடு சேர்ந்தவர்களும் தேவ ஆவியானவரின் தூண்டுதலின்படி ஆலயமில்லாததால் அவர்கள் ஜெபிக்குமிடமான ஆற்றங்கரைக்குச் ஜெபிக்கச் சென்றனர். இதுவரை பவுல் சென்ற இடங்களிலெல்லாம் யூதர்கள் அதிகமாக வாழ்ந்ததால் அங்கு ஜெபஆலயம் இருந்தது. ஆனால் இந்தப் பிலிப்புப் பட்ட ணத்தில் ஜெபஆலயமில்லாததால் ஆற்றங்கரையில் கூடி ஜெபித்துக் கொண்டி ருந்தனர். அவ்வாறு ஒரு ஓய்வுநாளில் பவுல் அங்கு சென்று ஜெபித்து சுவிசே ஷம் அறிவித்த போது அங்கு கூடியிருந்த பெண்களும் கேட்டுக் கொண்டிருந் தனர். பவுலின் பிரசங்கத்தை லீதியாளும் கேட்டுக் கொண்டிருந்தாள். எல்லோரா லும் மதிக்கப்பட்ட ஸ்திரீயாக லீதியாள் இருந்தாலும் ஆற்றினருகே நடக்கும் ஜெபத்திற்கு தன்னைத் தாழ்த்தி அங்கு தேவனை ஆராதிக்கச் சென்றதைப் பார்க் கிறோம். இயேசு பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்பார் தாழ்மையுள்ளவர் களுக்குக் கிருபையளிப்பார் என்று கூறிய வார்த்தையின்படி, லீதியாளுக்குக் கிருபையளித்தார். லீதியாளோடிருந்த மற்றப் பெண்கள் பவுலின் உபதேசத்தில் உள்ள உண்மையை, அதாவது ஜீவனுள்ள தேவன் யாரென்றும், நமக்காக மரித் தவர் யாரென்றும், பாவங்களை மன்னிக்கிறவர் ஒருவரே என்றும் புரிந்து கொண் டார்களோ இல்லையோ, லீதியாளின் உள்ளார்ந்த இருதயம் திறந்தது. 

இயேசு ஜனங்களை இரட்சிப்பதற்காகவே இந்த உலகத்திற்கு வந்தார் என்று விசு வாசித்து முழுமனதுடன் இயேசுவை தன் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண் டாள். லீதியாளைப் பார்த்து அவள் குடும்பத்திலுள்ள அனைவரும் இயேசுவை ஏற்றுக்கொண்டனர். அப்போஸ்தலர் 16 : 15ன் படி அவளும், அவள் குடும்பத்தா ரும் ஞானஸ்நானம் பெறறார்கள். பவுலின் ஊழியத்தினால் ஐரோப்பா கண்டத் தின் லீதியாள் முதல் விசுவாசியானாள். மேலும் லீதியாள் பவுலிடம் தன்னைக் கர்த்தரிடம் விசுவாசமுள்ளவென்று எண்ணினால் தன்னுடைய வீட்டில் அனைவ ரும் தங்கவேண்டுமென்று வருந்திக் கேட்டுக் கொண் டாள் (அப்போஸ்தலர் 16 : 15). அவர்களும் அவளுடைய அன்பான அழைப்பை ஏற்றுக்கொண்டு அவளு டைய வீட்டில் தங்கினார்கள். ஆலயமில்லாத பிலிப்பி பட்டணத்தில் லீதியாளின் வீடு சபை கூடுமிடமாக மாறியது. அவளுடைய வீடு கர்த்தருடைய ஊழிய ர்களுக்காக, பரிசுத்தவான்களுக்காக எப்போதும் திறக்கப்பட்டிருந்தது. பவுலும் சீலாவும் சிறைச்சாலையிலிருந்து வந்ததினால், அவர்கள் கொடுக்கப்பட்ட தண்ட னையில் அவர்கள் உடம்பில் காயங்கள் இருந்திருக்கலாம். ஆனால் லீதியாளோ அவைகளோடும் அவர்களை ஏற்றுக்கொண்ட நற்பண்பை அவளிடம் பார்க்கி றோம். பவுல் பிலிப்புப் பட்டணத்திலுள்ள பரிசுத்தவான்களுக்கு எழுதிய கடிதத் தில் லீதியாலும் ஒரு பரிசுத்தவாட்டியாக அந்தக் குழுவிலிருந்தாள் என்பதில் சந்தேகமில்லை. பிலிப்பியர் 4 : 3 ன்படி பவுலோடு பிரசாங்கத்தைப் பிசங்கிக்க லீதியாளும் பாடுபட்டாள். அவள் தன்னுடைய அநேக வேலைகளோடு ஆண்டவ ருக்கு ஊழியமும் செய்தாள். தன்னுடைய சம்பாத்தியத்தை ஊழியர்களு க்காகவும், ஊழியத்திற்காகவும் இன்முகத்தோடு செலவழித்தாள். 

முடிவுரை:

பொதுவாக வியாபாரம் வளர்ந்து பெருகிவிட்டால் கர்த்தரைத் தேடவும் ஆலய த்துக்குச் செல்லவும் நேரமில்லை என்பார்கள். ஆனால் லீதியாள் புகழ்பெற்ற இரத்தாம்பரத் தொழில் செய்தாலும் கர்த்தரைத்தேட நேரம் ஒதுக்கிய பெண் மணியாக இருந்தாள். அதோடு ஆண்டவருக்கு ஊழியம் செய்ததையும் பார்க்கி றோம். இயேசு உங்கள் வாசல்படியில் நின்று கதவைத் தட்டுகிறார். நீங்கள் அந்தச் சத்தத்தைக் கேட்டு உங்கள் இருதயக் கதவைத் திறந்தால், அவர் வந்து உங்களோடு போஜனம் பண்ணுவார். அப்பொழுது உங்கள் ஜீவனுள்ள நாளெல் லாம் நன்மையையும் கிருபையும் உங்களைத் தொடரும் (சங்கீதம் 23 : 6). இன்னும் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளாமலிரு ந்தால் லீதியாளைப் போல உங்கள் இருதயத்தைத் திறந்து இன்றே இயேசு தான் உண்மையான தேவனென்றும், நம்மோடு ஜீவிக்கிற தேவன் என்றும், நம்முடைய பாவங்களை நீக்கும் ஒரே தேவன் என்றும் விசுவாசியுங்கள். உங்கள் இருதயத்தை திறந்து சுவிசேஷத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Related Posts