Menu Close

அன்னாள்

எல்க்கானா:

1 சாமுவேல் 1 : 1 “எப்பிராயீம் மலைத்தேசத்திலிருக்கிற சோப்பீம் என்னப்பட்ட ராமதாயீம் ஊரானாகிய ஒரு மனுஷன் இருந்தான்; அவனுக்கு எல்க்கானா என்று பேர்; அவன் எப்பிராயீமியனாகிய சூப்புக்குப் பிறந்த தோகுவின் குமாரனாகிய எலிகூவின் மகனான எரோகாமின் புத்திரன்.”

எப்பிராயீம் என்ற மலை தேசத்தில் ராமதாயீம் என்ற ஊரில் எல்க்கானாவின் குடும்பம் வாழ்ந்து வந்தனர். எல்க்கானா என்றால் தேவன் உன்னை படைத்திரு க்கிறார் என்று பொருள். எல்க்கானா லேவி கோத்திரத்தில் கோராகின் வம்சத்தில் வந்தவன் (எண்ணாகமம் 16:1–4). லேவி கோத்திரத்தார் பிரதான ஆசாரியர்களுக்கு உதவியாக இருப்பவர்கள். கோராகின் வம்சத்தார் மோசேக்கு விரோதமாகக் கலகத்தை எழுப்பினர். எனவே கர்த்தர் அவர்களை அதுவரை யாரும் மரித்திராத வகையில் நிலத்தைப் பிளந்து உயிரோடு பாதாளத்தில் இறக்கினார். அதனால் இஸ்ரவேலர்கள் நிலத்தில் சுதந்திரம் கொடுக்கக் கூடாது என்றனர். ஏனெனில் கோராகின் பிள்ளைகள் சாகவில்லை (எண்ணாகமம் 26:11). இதை மோசேயோ கர்த்தரோ சொல்லவில்லை (27:1–4). எனவே எல்க்கானாவுக்கு லேவிய அந்தஸ்தும், ஆசாரியப் பட்டமும் கிடையாது. 16 தலைமுறையாக அவர்களுக்குச் சுதந்திரம் இல்லா மல் இருந்தது. மோசேயோ, யோசுவாவோ, அவர்களுக்குப் பின் வந்த 12 நியாயாதிபதிகளோ இந்த சாபத்தை மாற்ற முடியவில்லை. யாரோ செய்த செயலினால் வந்த சாபத்தை இந்த குடும்பம் அனுபவித்துக் கொண்டிருந்தது. 

எல்க்கானாவின் குடும்பம்:

எல்கானாவுக்கு இரண்டுமனைவிகள். மூத்தவள் பெயர் அன்னாள். அன்னாளுக்கு குழந்தைகள் இல்லாததால் இரண்டாவதாக பெனின்னாளை மனைவியாக்கி னான். பெனின்னாளுக்குக் குழந்தைகள் இருந்தனர். பிள்ளைகள் கர்த்தரால் வரும் சுதந்தரம். கர்ப்பத்தின் கனி அவரால் கிடைக்கும் பலன். அதைப் பெற்றுக் கொண்டவள் பெனின்னாள். அதனால் அவள் மிகவும் கர்வம் கொண்டவளாக இருந்தாள். தேவன் இரண்டு மனைவிகளை அனுமதித்ததில்லை. அன்னாள் என்றால் கிருபை பெற்றவள் என்று பொருள். பெனின்னாள் என்றால் விலையேறப் பெற்ற முத்து என்று பொருள். கர்த்தர் அன்னாளின் கர்ப்பத்தைத் தற்காலிகமாக அடைத்திருந்தார் (1சாமுவேல்1:6). குழந்தை பாக்கியத்தின் வாசல் அவளுக்கு அடைக்கப் பட்டிருந்தது. இதேபோல்தான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எரிகோ கானானுக்குள் பிரவேசிக்க முடியாதபடி தடையாக இருந்தது. கர்த்தரின் வார்த்தையின்படி யோசுவா செயல்பட்டு துதியினால் அந்தத் தடைகளைத் தகர்த்தெறிந்தார். கர்த்தர் அன்னாளுக்கும் இஸ்ரவேலு க்கும் பெரிய ஆசீர்வாதத்தையும் தமக்கு மகிமையையும் ஆயத்தம் பண்ணி வைத்திருந்தார். அன்னாள் இதை அறியாததால் வேதனைப்பட்டாள். பல வருட ங்கள் ஆகியும் அன்னாளுக்குக் குழந்தை இல்லாததால் பலர் பலவிதமாக பேசியிருப்பார்கள். மலடி என்ற பட்டமும் சூட்டியிருப்பார்கள். அது அவளைத் துக்கத்தில் கொண்டு போயிருக்கும். ஆனால் தேவனை நேசிக்கிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் என்று ரோமர் 8 : 28 ல் பார்க்கிறோம். லேயாளுக்குக் குழந்தை பிறந்தவுடன் ராகேல் பொறாமைப் பட்டதைப் போல அன்னாள் பொறாமைப் படவில்லை. ராகேல் யாக்கோபிடம் “எனக்குப் பிள்ளை கொடும் இல்லாவிட்டால் நான் சாகிறேன்.” என்று சண்டையிட்டதைப் போல (ஆதியாகமம்30:1) அன்னாள் தன் கணவரிடம் சண்டை போட வில்லை.. மேலும் பெனினாளிடம் வாக்குவாதம் செய்ததாகவும் கூறப்படவி ல்லை. பெனின்னாளின் பிள்ளைகளை வெறுத்ததாகவும் கூறப்படவில்லை. தன் கணவன் தன்னை அதிகமாக நேசித்ததினால் பெருமையினால் பெனின்னாளை அற்பமாகவும் எண்ணவில்லை. குணசாலியான ஸ்திரீயாகவே அன்னாள் இருந்தாள். 

சீலோவில் எல்கானாவின் குடும்பம்: 

ஆசரிப்புக் கூடாரம் சீலோவில் இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை இஸ்ரவேலில் ஆண் மக்கள் யாவரும் அங்கு செல்ல வேண்டும் என்று நியாயப் பிரமாணத்தில் எழுதப்பட்டுள்ளது (உபா16:16). எல்க்கானாவும் தன் குடும்பத் துடன் ஆண்டுதோறும் சீலோவுக்குச் சென்று தேவனைத் தொழுது கொள்வான். எப்பிராயீம் மலை தேசத்திலிருந்து சீலோவுக்கு செல்ல அதிக மைல்கள் பிரயா ணம் செய்ய வேண்டும். அங்கிருந்து பலி பொருட்களைக் கொண்டு செல்வதும் மிகவும் சிரமம். இருந்தாலும் அங்கு செல்லவும் தேவனைத் தொழுது கொள் வதிலும் எல்க்கானா தவறுவதே இல்லை.அங்கு ஏலி என்ற ஆசாரியன் இருந்தான். ஒரு காலத்தில் கர்த்தர் நியாயதிபதிகளைக் கொண்டு வழி நடத்தி வந்தார். பின்னால் ராஜாக்களை ஏற்படுத்தினார். இடைப்பட்ட காலத்தில் சிம்சோன் மரித்த பின் இஸ்ரவேல் ஜனங்களை வழிநடத்த நியாயாதிபதிகள் இல்லாத நிலையில் குழப்பமான காலகட்டத்தில் தேவனுடைய ஆலயத்தில் ஆசாரியனாக இருந்த ஏலி ஜனங்களை நியாயம் விசாரித்து வந்தான். எல்க்கானா தேவனுடைய சமூகத்தில் பலி செலுத்திவிட்டு அந்த விருந்தை தன்னுடைய இரண்டு மனைவிகளுக்கும், எல்லாபிள்ளைகளுக்கும் பங்கு போட்டுக் கொடுப்பான் அதில் அன்னாளை அவன் அதிகமாக நேசித்த படியினால் அவளுக்கு இரண்டு பங்கு கொடுப்பான். 

கர்த்தருடைய ஆலயத்துக்கு செல்லும் பொழுது பெனின்னாள் அன்னாளை வருத்தப்படும் படி பேசுவாள். வருஷா வருஷம் ஆலயத்துக்குச் சென்று வந்தாலும் அவளிடம் மாற்றம் எதுவும் காணப்படாமல் வாழ்ந்தாள். பெனின்னாள் ஆலயத்துக்குச் செல்லும் போது “தன்னை வருத்தப்படுத்தும்படி பேசுவாள் என்றோ, அவர்களுடன் தான் பலிசெலுத்த வரவில்லை என்றோ, கர்த்தர் தனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தபின் வருகிறேன்” என்றோ கூறாமல் அன்னாள் கூடவே செல்வாள். சாந்தமும் அமைதலுமுள்ள ஆவி அவளுக்குள் இருந்ததால் அவளுக்குப் பதில் ஏதும் கூறமாட்டாள். ஆனால் அங்கு சாப்பிடாமல் அழுது கொண்டிருப்பாள். அதனால் தேவன் அவளைக் கனம் பண்ணினார். எல்க்கானா அவள் அழுவதைப் பார்த்து அவளுக்கு ஆறுதலாக “பத்து குமாரரைப் பார்க்கிலும் நான் உனக்கு விசேஷித்தவன்” என்பான். பத்து குமாரர்களும் தரும் சந்தோஷம், சமாதானம், ஆறுதலை ஒரு புருஷனால் தர முடியும் என்று அன்னாளிடம் உறுதியளிப்பான். 

அன்னாளின் ஜெபம்: 

நம்முடைய சிக்கலைத் தீர்ப்பதற்கு எந்த மனிதனாலும் முடியாது. ஆனால் தேவ னால் எல்லாம்முடியும் என்ற விசுவாசத்தோடு அன்னாள் தனியாக நின்று மனங் கசந்து அழுது தேவனிடம் விண்ணப்பம் பண்ணினாள். 

1 சாமுவேல் 1 : 11 “சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைந்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண்பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று ஒரு பொருத்தனை பண்ணினாள்.”

அன்னாள் கர்த்தரை சேனைகளின் கர்த்தாவே என்று அழைத்ததைப் பார்க்கி றோம். இதன் பொருள் “பலுகிப்பெருகும் ஆற்றலுடையவர்” என்பதாகும். வானத் துக்குரிய சேனையையும், பூமிக்குரிய சேனையையும் படைத்தது கர்த்தரே. தான் பலுகிப் பெருகித் தன்னுடைய கர்ப்பத்தை திறக்க வல்லவர் கர்த்தர் ஒருவரே என்று விசுவாசித்தாள். தனக்குக் கொடுக்கப் போகும் குழந்தை ஆண் பிள்ளையாக இருக்க வேண்டுமென்கிறாள். அன்னாள் வீண் வார்த்தைகளைச் சொல்லி அலப்பாமல் ஒரே காரியத்திற்காக ஜெபித்தாள்.இந்த ஜெபத்தில் சுயநல மில்லாமல் தேவனுடைய ராஜ்ஜியத்துக்குப் பிரயோஜனமான ஜெபத்தை ஏறெ டுத்ததைப் பார்க்கிறோம். அவளுடைய ஜெபத்தில் அவள் இரண்டு காரியங்க ளைச் செய்வதாகக் கூறுகிறாள்.1.அவனுடைய வாழ்நாள் முழுவதும் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக் கொடுப்பேன் 2. கர்த்தருடைய பணிக்காகப் பிரித்தெடுக்கப் பட்டவனாக அவன் தலையின் மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்பதா கும்.ஜெபித்து முடித்தபின் அன்னாள் துக்கமுகமாக இருக்கவில்லை.கர்த்தர் பதிலளிப்பார் என்று விசுவாசித்தாள். ஜெபத்தோடு விசுவாசமும் சேர்ந்தால் தான் ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும்.

பாவத்தைக் கண்டிக்கவும் வேதனையோடு இருப்பவர்களுக்கு ஆறுதல் கூறவும் பிரதான ஆசாரியனான ஏலி கவனமாய் இருந்தார். ஊழியத்தில் இவ்விரண்டும் தேவை. அன்னாள் வெகுநேரம் ஜெபம் பண்ணிக்க கொண்டிருந்ததால் ஏலி அவளைக் கவனித்துக் கொண்டிருந்தார். அவளிடமிருந்து சத்தம் ஏதும் வராமல் உதடுகள் மட்டும் அசைந்ததால் அவள் குடித்திருப்பதாக நினைத்தார். எனவே அவளைப் பார்த்து “குடியை உன்னை விட்டு விலக்கு” என்கிறார். இதிலிருந்து குடிக்கிறவர்களில் சிலரும் அந்த இடத்துக்கு வந்திருக்கிறார்கள் என்றறிகி றோம். அதற்கு அன்னாள் தான் குடிக்கவில்லையென்றும், கர்த்தருடைய சந்நிதியில் தன்னுடைய இருதயத்தை ஊற்றுவதாகவும் கூறினாள் . உடனே ஏலி தன் தவறை உணர்ந்து அவளைப் பார்த்து, 

1 சாமுவேல் 1 : 17 “அதற்கு ஏலி சமாதானத்துடனே போ; நீ இஸ்ரவேலின் தேவனிடத்தில் கேட்ட உன் விண்ணப்பத்தின்படி அவர் உனக்குக் கட்டளையிடுவாராக என்றான்.”

அதன்பின் அன்னாள் விருந்தைப் புசித்தாள். அப்புறம் துக்கமுகமாய் இருக்க வில்லை. 

அன்னாள் பொருத்தனையை நிறைவேற்றியது:

அன்னாளின் விண்ணப்பத்தைக் கேட்ட கர்த்தர் அவளை நினைத்தருளினார். சிலநாள் சென்றபின்பு அன்னாள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று அவனுக்கு சாமுவேல் என்று பெயரிட்டாள். பிள்ளை வளர்ந்து பால் மறந்த பின் தான் பண்ணிய பொருத்தனையை நிறைவேற்றத் துணிந்தாள். அன்னாள் தான் மிகவும் விரும்பி கேட்டு பெற்றுக் கொண்ட ஆண்மகனை தன்னுடைய பொருத்தனையின் படி கர்த்தருடைய ஆலயத்தில் கொண்டு வந்து விட்டாள். அப்போது சாமுவேலுக்கு மூன்றிலிருந்து ஐந்து வயதிற்குள் இருந்திருக்கலாம். அவனைப் பிரிவது அன்னாளுக்கு வேதனையாக இருந்த போதிலும் தான் தேவனிடம் பண்ணிய பொருத்தனையை நிறைவேற்றினாள். தனக்குப் பிரியமானதை, அருமையானதை கர்த்தருக்குக் கொடுத்தாள். அக்கம் பக்கத்தார் இவளை பைத்தியம் என்றும், இன்னொரு பிள்ளை பிறக்காவிட்டால் என்ன செய்வாள் என்றும் கூறியிருப்பார்கள். ஏலியின் பிள்ளைகள் நல்லவர்கள் அல்ல என்றும் அன்னாளுக்குத் தெரியும் ஆனாலும் அவள் அவனைக் கொண்டு ஆலயத்தில் விட்டு விட்டாள். ஏலியை நம்பி சாமுவேலை விடவில்லை. தேவனை நம்பி சாமுவேல் என்ற பிள்ளையை அங்கு ஒப்படைத்தாள். தாய்மையுணர்வு மேற்கொள்ள அன்னாள் அனுமதிக்க வில்லை. அதன்பின்னும் ஒவ்வொரு வருடமும் ஒரு சின்ன சட்டையைத் தைத்துக் கொண்டு சாமுவேலைப் பார்த்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தாள். சாமுவேல் ஏலியிடம் வருவதற்கு முன்னே கர்த்தர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி 

1சாமுவேல் 2 : 35 ““நான் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்ளுவான்.” 

என்று ஏற்கெனவே கூறியிருந்தார் 

அன்னாளின் நன்றி பாடல்:

இந்த குழந்தைக்காக அன்னாள் உளமாற நன்றி செலுத்தித் துதிபாடலும் பாடி னாள். அவருக்கு நிகரானவர் இல்லையென்ற சாட்சியோடு பாடினாள். கர்த்தர் பரிசுத்தமுள்ளவரென்றும்,கன்மலையானவரென்றும், கொல்லுகிறவரும் உயிர்ப் பிக்கிறவருமென்றும், பாதாளத்தில் இறங்கவும் ஏறவும் பண்ணுகிறாரென்றும், தரித்திரம் அடையச் செய்கிறவரும் ஐசுவரியம் அடைய பண்ணுகிறவரென் றும், தாழ்த்துகிறவரும் உயர்த்துகிறவரென்றும், எளியவர்களைக் குப்பையி லிருந்து உயர்த்தி அவர்களைப் பிரபுக்களோடு உட்கார பண்ணுகிறவரென்றும், பரிசுத்தவான்களின் பாதங்களைக் காப்பவரென்றும், தாம் ஏற்படுத்தின ராஜாவு க்குப் பெலன் அளித்து, தாம் அபிஷேகம்பண்ணினவரின் கொம்பை உயரப் பண் ணுவாரென்றும் பாடினாள். இஸ்ரவேலில் அரசர்கள் தோன்றுவதற்கு முன்பா கவே இதை அன்னாள் தீர்க்கதரிசனமாக கூறினாள். தேவனது இரட்சிப்பு, பரிசுத் தம், மேலும் அவரது கிரியைகளுக்கு நிகராக வேறொருவரும் செய்யப்பட முடி யாது. என்று சவாலிட்டுப் பாடினாள். 2 : 6, 10 ல் மேசியாவைப் பற்றி கூறுகி றாள். சாமுவேல் ஏலிக்கு முன்பாக கர்த்தருக்குப் பணிவிடை செய்து கொண்டிருந்தான்.

அன்னாளின் பின்மாரி ஆசிகள்:

அன்னாள் பிள்ளையில்லாமல் பல வருஷங்கள் இருந்தபின்னும் தனக்குப் பிறந்த முதல் குழந்தையைத் தான் பொருத்தனை பண்ணியபடி தேவனுடைய ஆலயத்தில் விட்டுவிட்டபடியால் தேவன் அவளுக்கு இன்னும் மூன்று குமார ர்களையும், இரண்டு குமாரத்திகளையும் கொடுத்தார் (1சாமுவேல்2:21). ஆரோ னின் குடும்பத்தைச் சேர்ந்த ஆசாரிய பணி எப்பீராயீமியரான எல்க்கானா, அன்னாளின் மகனான சாமுவேலுக்குக் கர்த்தர் கிடைக்கச் செய்தார். அது மட்டுமல்லாமல் நியாயாதிபதியாகவும், ஆசாரியனாகவும். தீர்க்கதரிசியாகவும், ராஜாக்களுக்கு அபிஷேகம் பண்ணுகிறவனாகவும் கர்த்தர் அவனை ஆக்கினார். சாமுவேல் செய்கின்ற ஊழியத்தை அவனது தாயான அன்னாளே கண்டு சந்தோஷப்பட சொந்த ஊரிலேயே பணி செய்தான் (1 சாமுவேல் 7 : 16, 17). 

முடிவுரை:

சாமுவேல் பெரியவனாக வளர்ந்து கர்த்தரிடத்தில், மனுஷரிடத்திலும் தயவு பெற்றவனாகவும், கர்த்தருக்கும், மனுஷருக்கும் பிரியமாகவும் நடந்து கொண் டான். அவன் சணல்நூல் ஏபோத்தைத் தரித்தவனாக தேவனுக்கு முன்பாகப் பணி விடை செய்து கொண்டிருந்தான். கர்த்தர் சாமுவேலை இஸ்ரவேல் ஜனங்க ளுக்குப் பெரிய தீர்க்கதரிசியாக்கினார். பெனின்னாளின் பிள்ளைகள் நியாயப் பிரமாணத்தின் சந்ததியாகக் காணாமல் போனது. அன்னாளின் சந்ததி விசுவா சத்தின் சந்ததியாக சாமுவேல் புகழ் பெற்றான். பல ஆண்டுகளுக்குப் பின் இஸ்ர வேல் ஜனங்களை தேவனோடு ஒப்புரவாக்கினான். சிறுவனாயிருந்த போதே தேவன் அவனுக்குத் தரிசனம் தந்தார். தேவன் அவனோடு பேசினார். சவுலை யும், தாவீதையும் இராஜாவாக அபிஷேகம் பண்ணும் பாக்கியத்தைப் பெற்றான். ராஜாங்கத்தின் முறையை ஜனங்களுக்குத் தெரிவித்து , அதை ஒரு புஸ்தகத் தில் எழுதி கர்த்தருடைய சந்நிதியில் சாமுவேல் வைத்தான் (1 சாமுவேல் 10 :25). அவன் ஜனங்களுக்காக திறப்பில் நின்று போராடும் ஜெபவீரனாயிருந்தான் (1சாமுவேல்12:23). ஜெபிக்கும் தாய்மார்கள் பிள்ளைகளுக்குப் பெரிய ஆசீர்வா தம். யோவான்ஸ்நானன், தீமோத்தேயு, மோசே போன்றவர்களின் தாய்மார்கள் ஜெபிக்கிறவர்கள். 

அன்னாள் ஒரு ஜெப வீராங்கனை. அவளுடைய சுபாவம் தனித்தன்மை வாய்ந்த தாக இருந்தது. தேவ சமூகத்தை மிகவும் நேசித்து தன்னுடைய குறைவுகளை தேவன் நிறைவேற்றாவிட்டாலும் தவறாமல் சீலோவுக்குச் சென்றவள். தீமை யோடு எதிர்த்து நிற்காமல் அமைதியாக இருந்தவள். கலகம் பண்ணுகிற ஆவி அவளிடத்தில் இல்லை.அவளுடைய சுபாவம் தேவன் விரும்பத்தக்கதாய் இருந் தது. நீண்ட நேரம் ஜெபம் செய்து யாரும் செய்ய முடியாத பொருத்தனையைச் செய்தவள். அந்தப் பொருத்தனையையும் உண்மையாய் நிறைவேற்றியவள். தேவனோடு ஒப்புரவாக்கபட்ட ஜீவியத்தை செய்து வாழ்ந்தவள். பாசத்திற்கு அடிமையானவள். பெண்களுக்கு அன்னாள் ஒரு மாதிரியாக இருந்து வாழ்ந்து காட்டினவள். நாம் அன்னாளைப் போல தாழ்மையுள்ள ஆவியோடு தேவனை மட்டுமே சார்ந்து இருக்க பழகி, தேவனுடைய ஆசியைப் பெறுவோம். நம்மு டைய வாழ்க்கையிலுள்ள ஒவ்வொரு குறையையும் நிவிர்த்தி செய்கிறவர் கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவே. ஆமென்.

Related Posts