மாற்கு 15 : 2 – 5 “பிலாத்து அவரை நோக்கி: நீ யூதருடைய ராஜாவா என்று கேட்டான். அதற்கு அவர்: நீர் சொல்லுகிறபடிதான் என்றார். பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங்குற்றங்களைச் சாட்டினார்கள். அவரோ மாறுத்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது, பிலாத்து மறுபடியும் அவரை நோக்கி: இதோ, இவர்கள் உன்மேல் எத்தனையோ குற்றங்களைச் சாட்டுகிறார்களே, அதற்கு நீ உத்தரவு ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்று கேட்டான். இயேசுவோ அப்பொழுதும் உத்தரவு ஒன்றும் சொல்ல வில்லை; அதினால் பிலாத்து ஆச்சரியப்பட்டான்.”
பிரதான ஆசாரியரும், வேதபாரகரும், ஆலோசனை சங்கத்தார் அனைவரும் கூடி பிலாத்துவினிடத்தில் இயேசுவை ஒப்படைத்தனர். பிலாத்துவின் வீட்டிற்குள் சென்றால் தீட்டுப்பட்டதாகக் கருதப்படும். அவ்வாறு தீட்டுப் பட்டால் அன்று இரவு பஸ்கா பண்டிகையில் கலந்து கொள்ள இயலாது. பண்டிகை வாரத்தில் யூதர்களில் எவனும் புறஜாதியரின் வீட்டுக்குள் பிரவே சிப்பானேயாகில், ஏழு நாட்களுக்குத் தன்னைத் தீட்டுப்படுத்திக் கொள்கிறான். எனவே யூதர்கள் பிலாத்துவின் வீட்டிற்குள் செல்லவில்லை. அந்நியரின் வீட்டிற்குள் சென்றால் தீட்டு என்று கருதியவர்களுக்குக், கொலை செய்வது தீட்டாகத் தெரியவில்லை. அதனால் பிலாத்து வெளியே வந்து இயேசுவை நோக்கி “நீ யூதருடைய ராஜாவா” என்று கேட்டான். இந்த உலகில் தனக்கென்று ஒரு ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்க முடியாத ஒரு மனிதன், எப்படித் தன்னை ராஜா என்று அழைத்துக் கொள்ள முடியும் என்பதுதான். ரோம ராஜ்ஜியத்திற்கு எதிராக இயேசு செயல்படுகிறார் என்று நிரூபிக்க வேண்டும் என்ற நிர்பந்தத் தில் பிலாத்துவிடம் இவ்வாறு கூறுகின்றனர். அவன் கேள்வி கிறிஸ்துவுக்கு எதிரான குற்றச்சாட்டாக இருந்தது, யூதர்கள் பிலாத்துவிடம் அவர் தன்னை ராஜாவாக்கிக் கொள்ளப் பார்க்கிறார் என்பதுதான். பழைய ஏற்பாட்டில் இயேசு கிறிஸ்து ஒரு ராஜாவாக வெளிப்படுவாரென்றும், புதிய ஏற்பாட்டிலும் பல முறை வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. எரேமியா தீர்க்கதரிசி 23 : 5 லும், ஏசாயா 9 : 7லும், சகரியா 9 : 9 லும், மத்தேயு 2 : 2 லும், யோவான் 1 : 49 ல் நாத்தான் வேலும் இயேசுவை ராஜா என்று குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்க்கிறோம்.
அதற்கு இயேசு “நீர் சொல்லுகிறபடி நான் யூதருடைய ராஜா தான்” என்றார். இந்த உலகத்தில் ஸ்தாபிக்கப்படவிருக்கும் ஆவிக்குரிய பேரரசின் ராஜா அவரென்பதை இயேசு தேசாதிபதியிடம் ஒத்துக் கொள்கிறார். அந்த ராஜ்ஜியத்தை ஸ்தாபிக்கும்படியாகவே பிதாவாகிய தேவன் தன் ஒரே பேறான குமாரனை இந்த உலகத்துக்கு அனுப்பி வைத்தார். தான் ராஜா தான் என்றாலும், தான் இந்த உலகத்துக்கு வந்ததின் நோக்கம் அதை ஆளுகை செய்யும்படியாக அல்ல. என்பதை இயேசு உடனடியாக அறிவிக்கிறார். யோவான் 18 : 37 ல் “சத்தியவான் எவனும் என் சத்தத்தைக் கேட்கிறான்” என்றார். சத்தியவான் ஒரு யூதனாகவோ, புறஜாதி மனிதனாகவோ, சமாரிய னாகவோ இருக்கலாம். அவன் கிறிஸ்துவை அறிந்து அவரை ஆண்டவரா கவும், இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டால் இரட்சிக்கப்படுவது நிச்சயமென் பதை யோவான் 8 : 12 ல் பார்க்கிறோம். மேலும் பிலாத்து இயேசுவை நோக்கி “இவர்கள் அனைவரும் உன்னைப் பற்றி அனேக குற்றச்சாட்டுகளைக் கூறுகி றார்களே நீ அதற்கு ஏதேனும் பதில் சொல்லுகிறதில்லையா” என்று கேட்டான். இயேசுவோ ஒரு பதிலும் கூறவில்லை. அதனால் பிலாத்து மிகவும் ஆச்சரியப்பட்டான்.