அப்போஸ்தலர் 5 : 1 “அனனியா என்னும் பேருள்ள ஒருவனும், அவன் மனைவியாகிய சப்பீராளும் தங்கள் காணியாட்சியை விற்றார்கள்.
வேதத்தில் 3 அனனியாக்களைப் பார்க்கிறோம். 1. இயேசுவின் சீஷனான அனனியா. இவன்தான் பவுலுக்கு இயேசு சொல்லி ஜெபம் பண்ணச் சென் றது (அப்போஸ்தலர் 9 : 10). 2. பிரதான ஆசாரியனான அனனியா. இவன் அப்போஸ்தலர் 23 : 1,2 ல் பவுலை அநியாயமாய்க் குற்றம் சாட்டினவன். மூன்றாவது இதில் கூறப்பட்டுக்குள்ள அனனியா. பெந்தேகோஸ்தே நாளுக்குப் பின் விசுவாசிகளாகிய திரளானகூட்டத்தார் ஒரே மனம் உடை யவர்களாக இருந்தனர். ஒருவனாகிலும் தனக்குள்ளவைகளில் ஒன்றை யும் தன்னுடையதென்று சொல்லாமல் சகலத்தையும் பொதுவாக வைத்து அனுபவித்தனர். எல்லார்மேலும் பூரண கிருபை உண்டாயிருந்தது. நிலங் களையும் வீடுகளையும் உடையவர்கள் அவைகளை விற்று, மனமுவந்து அப்போஸ்தலர்களின் பாதத்தில் வைத்துப் பொதுவாக அனுபவித்தனர். அப்போஸ்தலர்கள் அவர்களுக்குத் தேவையானதைக் கொடுத்து குறை வில்லாமல் நடத்தினர். ஏழைகளுக்கும் அதைப் பகிர்ந்து கொடுத்தனர். அவர்களில் ஒருவனுக்கும் ஒன்றும் குறைவாயிருந்ததில்லை. அங்கு அனனியா, சப்பிராள் என்ற தம்பதியர் வாழ்ந்து வந்தனர். இந்தக் கால த்தில் சபையிலனைவரும் இரட்சிப்படைந்தவர்களாக இருந்தனர். எனவே அனனியாவும், சப்பீராளும் இரட்சிப்பைப் பெற்றவர்கள். இயேசுவைத் தங்கள் இரட்சகராகவும், மீட்பராகவும் ஏற்றுக் கொண்டிருந்தனர். இந்தத் திருச்சபை மக்களிடையே அன்பும், கரிசனையும் காணப்பட்டது. அனனி யா வுக்கும், சப்பீராளுக்கும் நிலங்கள் இருந்தது. அவர்கள் அதை விற்றனர்.
அனனியா கூறின பொய்:
அப்போஸ்தலர் 5 : 2 “தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.”
அனனியாவும் சப்பீராளும் காணியாட்சியை விற்கவேண்டுமென்று தீர்மா னம் எடுத்தது, விசுவாசத்தின் அடிப்படையிலுமல்ல, கர்த்தரிடம் கொண்ட அன்பின் அடிப்படையிலுமல்ல. தங்கள் சபையிலுள்ளவர்கள் அவ்வாறு செய்தபடியால் இவர்களும் அதே போல் செய்தார்கள்.அப்போது பர்னபா என்ற லேவியன் தனக்குள்ள நிலத்தை விற்று அதன் கிரயத்தை அப்போ ஸ்தலரின் பாதத்தில் வைத்தான் (அப்போஸ்தலர் 4 : 32 – 37). அவன் தன் உதாரத்துவத்தால் பெயர் பெற்றான். அதேபோல் தாங்களும் பெயர்ப்பெற வேண்டுமென்று நினைத்து அனனியாவும், சப்பிராளும் தங்களுடைய காணியாட்சியை விற்றனர். சவுல் அமலேக்கியருடன் நடந்த யுத்தத்தில் கர்த்தருடைய வார்த்தையை மீறி ஆடுமாடுகளில் முதல் தரமானவைக ளையும், இரண்டாம் தரமானவைகளையும் அழிக்காமல் வைத்துக் கொண் டான்.எனவே கர்த்தர் சவுலை இஸ்ரவேலின் ராஜாவாயிராதபடி புறக்கணி த்தாரென்று சாமுவேல் கூறின பின்னும் சாமுவேலை சவுல் தன்னோடு வரும்படி கூப்பிட்டான். காரணம் மற்றவர்கள் அதே மதிப்பைத் தனக்குத் தரவேண்டும் என்பதற்காக (1சாமுவேல் 15 :9, 30).
அதேபோல் இந்தத் தம்பதியர்களுக்குப் பர்னபாவைப் போல் தாங்களும் பெயர் பெற வேண்டுமென்பதற்காக இவ்வாறு செய்தனர். அனனியா நிலத்தை விற்ற பணத்தில் ஒரு பகுதியை வஞ்சித்து வைத்து, மீதியை அப்போஸ்தலருடைய பாதத்தில் வைத்தான். சப்பீராளும் இதை அறிந்தி ருந்தாள்.இவள் தன் கணவனின் தவறைத் தடுத்து நிறுத்தவில்லை. மாறாக அவனோடு ஓத்திருந்தாள். ஏனெனில் இவர்களிடம் ஆவிக்கேற்ற அஸ்திபாரமில்லை. அதேபோல் இவர்களும் வஞ்சித்து வைத்தனர். இவர் கள் ஒரு பங்கை வைத்துக் கொண்டது தவறல்ல. அதற்கான அதிகாரம் அவருக்குண்டு. ஏனெனில் அந்த சொத்து அவர்களுக்குரியது. அவர்கள் தங்கள் சொத்தை விற்ற பணத்தைக் கொண்டு எப்படி வேண்டுமானா லும் செயல்படலாம். 2 சாமுவேல் 6 : 1 – 8 ல் அபினதாப் வீட்டிலிருந்து உடன்படிக்கைப் பெட்டியைத் தாவீது தன்னுடைய இடத்திற்கு கொண்டு வரவேண்டுமென்று நினைத்தது தவறல்ல. அதை இரத்தத்தில் ஏற்றிக் கொண்டு வந்ததுதான் தவறு.
அனனியாவுக்குப் பேதுருவின் பதில்:
அப்போஸ்தலர் 5 : 3, 4 “பேதுரு அவனை நோக்கி: அனனியாவே நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை வஞ்சித்துவைத்து, பரிசுத்த ஆவியினிடத்தில் பொய்சொல்லும்படி, சாத்தான் உன் இருதயத்தை நிரப்பினதென்ன? அதை விற்குமுன்னே அது உன்னுடையதா யிருக்கவில்லையோ? அதை விற்றபின்னும் அதின் கிரயம் உன் வசத்திலிருக்கவில்லையோ? நீ உன் இருதயத்திலே இப்படிப்பட்ட எண்ணங்கொண்டதென்ன நீ மனுஷரிடத்தில் அல்ல, தேவனிடத்தில் பொய்சொன்னாய் என்றான்.”
ஏனெனில் இப்பொழுது நாம் கிருபையின் காலத்திலிருப்பதால், ஒரு குறிப் பிட்ட தொகை சபைக்குக் கொடுக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தப் படுவதில்லை. அவர்கள் செய்த பாவம் என்னவெனில் அதைக் குறித்துப் துப் பொய் சொன்னதுதான். எல்லோரையும் போலச் செய்ய வேண்டுமெ ன்ற விருப்பமிருந்தது. அந்த விருப்பம் தீர்மானமானது. அந்தத் தீர்மானம் தனக்குள்ளே யாரிடமும் சொல்லக்கூடாத திட்டமாக மாறியது. தன்னு டைய திட்டத்தை செயல்படுத்த நினைத்தானேயொழிய, தேவனுக்கு உண்மையாக இல்லை. “நீ நேர்ந்து கொண்டதை செய் என்று பிரசங்கி 5 : 4லும்,கர்த்தருக்குக்கொடுக்க நினைத்ததைக் கொடுக்காவிட்டால் பாவம் என்று உபகாமம் 23 : 21லும் வேதத்தில் கூறியிருக்கிறது. ஏனெனில் யூதா சுக்குள் சாத்தான் புகுந்ததை போல (யோவான் 13 : 27) அனனியாவின் நல்ல எண்ணத்தைக் கெடுக்கச் சாத்தான் அவன் எண்ணத்துக்குள் புகுந் தான் . பேதுருவிடம் அனனியா ஒன்றும் கூறவில்லை. பேதுரு முதலில் அவனை நோக்கினான்.
காயீன் கர்த்தருக்குக் காணிக்கை கொண்டு சென்றபோது கர்த்தர் காயீனின் காணிக்கையைப்பார்க்காமல் அவனுடைய இருதயத்தைப் பார்த்து அவனு டைய காணிக்கையை அங்கீகரிக்கவில்லை அதேபோல் பேதுரு அவன் செய்ததையும்,செய்து கொண்டிருப்பதையும் ஒன்றுகூட பிசகாமல் ஆவி யானவர் அவனுக்கு வெளிப்படுத்தினார். பேதுருவுக்கு அறிவை உணர்த் தும் வரத்தைத் தேவன் கொடுத்திருந்தார். நாமும் அறிவை உணர்த் துகிற வரம் வேண்டுமென்று தேவனிடம் கேட்க வேண்டும். நிலத்தின் கிரயத்தில் ஒரு பங்கை ஏன் வஞ்சித்தாய் என்று மட்டும் கேட்காமல், பரிசுத்த ஆவியானவரிடத்தில் பொய் சொல்லும்படி சாத்தான் உன் இருத யத்தை நிரப்பியதென்ன என்று கேட்டான். மேலும் அவனிடம் உன்னு டைய நிலத்தை விற்பதற்கு முன்னும், விற்றபிறகும் அது உன்னுடையது. அதை யாரும் உன்னிடம் கேட்கவில்லை. நீ மனுஷரிடத்திலல்ல தேவனி டத்தில் பொய் சொன்னாய் என்கிறார்.
அதேபோல் ஆயி பட்டணத்தை முறியடிக்க சின்ன பட்டணமாதலால் 3000 பேரை யோசுவா அனுப்பி வைத்தான். ஆனால் அங்கு ஆயியின் மனுஷர் 36 பேரைவெட்டிப் போட்டனர். அப்பொழுது யோசுவா கர்த்தரிடம் வேண்டினான். கர்த்தர் எரிகோ பட்டணத்தில் உள்ள சாபத்தீட்டான எதை யும் எடுத்துக் கொள்ள வேண்டாமென்று கட்டளையிட்டிருந்தார். ஆனால் அங்கு யோசுவாவுக்குத் தெரியாமல் ஆகான் சில பொருட்களை இச்சித்து எடுத்து, அதைக் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்து வைத்ததைக் கர்த்தர் யோசுவாவுக்கு வெளிப்படுத்தியதை யோசுவா 6 : 18, 7 : 11 ல் பார்க்கிறோம். அனனியாவும், சப்பீராளும் தங்களுக்கு மகிமை யும், மற்றவர்களிடமிருந்து அங்கீகாரமும் கிடைப்பதற்காகத் தாங்கள் கொடுத்த காணிக்கையைக் குறித்து திருச்சபைக்கு முன்னால் பொய் சொன்னார்கள். தேவன் இந்தப் பொய்யைப் பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமாகக் கூறப்பட்ட பொய்யாகக் கருதினார்.
மறுபிறப்படைந்து, ஆவியினால் நிரப்பப்பட்டவர்களிடத்தில் வஞ்சகமு ள்ள இருதயம் இருக்குமானால், அவர்களுக்கெதிராக தேவனுடைய மன நிலையும், நடவடிக்கையும் எப்படியிருக்கும் என்பதை அறிந்து கொள்ள இந்த அனனியா, சப்பீராளின் மரணநிகழ்ச்சி ஒரு முன்னுதாரணமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்கிறது. பரிசுத்த ஆவியானவருக்கு விரோதமா கப் பொய் சொல்லுதல், தேவனுக்கு விரோதமாகப் பொய் சொல்லுவத ற்குச் சமமாகும். இது தேவன் மேல் அவர்களுக்குப் பயமில்லாததைக் காட்டுகிறது. பரிசுத்தஆவியானவர் மீது மதிப்பும், மரியாதையும் இல்லை என்பதையும் காட்டுகிறது. தேவனுடைய நீதியையும், நியாயத்தீர்ப்பை யும் காட்டுகிறது. இவர்களுடைய பாவத்தின் மூல காரணம் அவர்களு டைய பண ஆசையும், மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டுமென்ற ஆசையுமாகும். இந்த ஆசை அவர்களைப் பரிசுத்த ஆவியானவருக்கு விரோ த மாகச் செயல்பட வைத்தது.
அனனியாவின் மரணம்:
அப்போஸ்தலர் 5 : 5, 6 “அனனியா இந்த வார்த்தைகளைக் கேட்கவே, விழுந்து ஜீவனை விட்டான். இவைகளைக் கேள்விப்பட்ட யாவருக்கும் மிகுந்த பயமுண்டாயிற்று. வாலிபர் எழுந்து, அவனைச் சேலையிலே சுற்றி, வெளியே எடுத்துக்கொண்டுபோய் அடக்கம்பண்ணினார்கள்.”
அனனியா தன்தவறை உணர்ந்து ஜீவனை விட்டான். அனனியாவும், சப்பீ ராளும் செய்த பாவத்துக்குத் தேவன் அளித்த தண்டனைத் தீர்ப்புதான் இந்த மரணம். அனனியா செத்து விழுந்தவுடன் அங்குள்ளவர்கள் ஆச்சரி யமடைந்தனர். பேதுருவும் ஆச்சரியப்பட்டிருப்பார். பேதுருவும் அவ்வாறு நடக்குமென்று நினைத்திருக்க மாட்டார். அவனை அடித்தது கர்த்தர். நம க்கு ஜீவனைக் கொடுக்கும் சக்தி கர்த்தருக்கு இருப்பதைப்போல், அதை எடுத்துக் கொள்ளும் அதிகாரமும் அவருக்கு உண்டு. அனனியாவின் மர ணம். சபை மக்கள் மத்தியில் ஒரு பயத்தையும், தாழ்மையையும் அதிக மாய் உண்டாக்கிற்று. அந்தக் காலத்தில் ஆதித்திருச்சபை பரிசுத்தமாக எழும்பிக் கொண்டிருந்தது. அந்த சபையைக் கரைபடுத்த ஒரு தம்ப தியினர் எழும்பிய போது, தேவன் அதை நீடிக்க விடாமல் பழைய ஏற்பா ட்டில் செய்ததைப் போல அனனியாவை அடித்தார். சங்கீதம் 5 : 6 ல் கூறியபடி பொய் பேசின அனனியாவைத் தேவன் அடித்தார். தேவனு டைய இராஜ்ஜியத்தில் நேர்மையற்ற தன்மையையும், வஞ்சகத்தையும் தேவன் பகைப்பதை வெளிப்படுத்தவே தேவன் இப்படிச் செய்தார். தேவன் நம்மைத் தெரிந்து கொண்டதன் நோக்கமே, நாம் அன்பில் பரிசுத்த முள்ள வர்களாகவும், குற்றமில்லாதவர்களுமாயிருக்க வேண்டுமென்று தான் (எபேசியர் 1 : 4).
தேவன் நீதியுள்ளவராக இருந்து உடனே அதற்குப் பரிகாரம் செய்ததை இதிலிருந்து அறிகிறோம். அனனியா தன்னுடைய தவறை உணர்ந்து திருந்துவதற்கான சந்தர்ப்பம் திரும்பவும் அவனுக்குக் கிடைக்கவில்லை. அவனுடைய அடக்க ஆராதனைக்கு அவனுடைய மனைவிகூட அழைக் கப்படவில்லை. அங்கிருந்த வாலிபர்கள் அனனியா மரித்து விட்டான் என்று நினைக்கவில்லை. அவனுடைய பக்கத்தில் வந்த பின் தான் தெரி ந்தது அவன் மரித்து விட்டான் என்று. பிணத்தை அடக்கம் செய்வது என் பது ஒருவரும் விரும்பாத வேலை.அங்குள்ள வாலிபர்கள் அர்ப்பணம் உள்ளவர்களாக இருந்ததால் அனனியாவைச் சீலையில் சுற்றி வெளியே கொண்டுபோய் அடக்கம் பண்ணினார்கள். அனானியாவை யூதர்கள் அடக் கம் பண்ணும் முறைமையின்படி சுகந்தவர்க்கங்களுடன் அடக்கம் பண்ண ப்படவில்லை (யோவான் 19 : 40).
சப்பீராளும் பேதுருவும்:
அப்போஸ்தலர் 5:7,8,9 “ஏறக்குறைய மூன்று மணி நேரத்துக்குப் பின்பு, அவனுடைய மனைவி நடந்ததை அறியாமல், உள்ளே வந்தாள். பேதுரு அவளை நோக்கி: நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள், எனக்குச் சொல் என்றான். அவள்: ஆம், இவ்வளவுக்குத்தான் என்றாள். பேதுரு அவளை நோக்கி: கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீங்கள் ஒருமனப்பட்டதென்ன? இதோ, உன் புருஷனை அடக்கம் பண்ணினவர்களுடைய கால்கள் வாசற்படியிலே வந்திருக்கிறது, உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள் என்றான்.”
சப்பீராள் தன்னுடைய கணவன் இறந்து போனதையோ, அவனைத் தனக் குத் தெரியாமல் அடக்கம் பண்ணியதையோ அறியவில்லை. இந்த சபை மிகவும் ஒழுக்கமுள்ள சபையாகவும், கட்டுப்பாடுள்ள சபையாகவும் இரு ந்தது. அதனால்தான் அனனியா மரித்து 3 மணி நேரங்கள் ஆனபின்னும் அவனுடைய மனைவிக்கு அந்தச் செய்தி போகவேயில்லை. சபையார் அவர்களுக்கு நடந்ததைப்பார்த்து மிகவும் பயந்ததினால் அவளிடம் சொல் லாமல் அமைதியாக இருந்திருப்பார்கள். மூன்றுமணி நேரத்திற்குப் பின் நடந்ததை அறியாமல் பேதுரு இருக்குமிடத்துக்கு சப்பீராள் வந்தாள். பேதுரு அவளைப் பார்த்து “நிலத்தை இவ்வளவுக்குத்தானா விற்றீர்கள்?” என்று கேட்டதற்கு சற்றேனும் தயங்காமல் ஆம் என்று பதிலுரைத்தாள். பேதுரு அனனியாவின் மனைவிக்கு நடக்கப் போவதை நன்கு அறிந்தி ருந்தார். ஏனெனில் அனனியா சொன்ன பொய்யை இவளும் சொன்னபடி யினால் இவளுக்கும் சாவு நேரிடும் என்று தெரியும். எனவே அவளிடம் “கர்த்தருடைய ஆவியைச் சோதிக்கிறதற்கு நீயும் உன் கணவரும் ஒரும னப்பட்டதென்ன?” என்று கேட்டுவிட்டு “உன் கணவரை அடக்கம் பண்ணி யவர்கள் வாசற்படியில் நின்று கொண்டிருக்கிறார்கள். உன்னையும் வெளியே கொண்டுபோவார்கள்” என்றான். ஆதியாகமம் 3 : 17 ல் ஏவாள் சொன்னதற்கு இசைந்து கர்த்தர் கூறிய வார்த்தைக்கு விரோதமாக ஆதாம் மறுப்புஎதுவும் தெரிவிக்காமல் அவள் கொடுத்த பழத்தைச் சாப்பி ட்டான். சப்பீராளும் அனனியாவுக்கு மறுப்பு எதுவும் கூறாமல் அவன் சொல்லச் சொன்னதைச் சொன்னாள்.
சப்பீராளின் மரணம்:
அப்போஸ்தலர் 5 : 10, 11 “உடனே அவள் அவனுடைய பாதத்தில் விழுந்து ஜீவனை விட்டாள். வாலிபர் உள்ளே வந்து, அவள் மரித்துப்போனதைக் கண்டு, அவளை வெளியே எடுத்துக் கொண்டுபோய், அவளுடைய புருஷனண்டையிலே அடக்கம் பண்ணினார்கள். சபையாரெல்லாருக்கும், இவைகளைக் கேள்விப்பட்ட மற்ற யாவருக்கும், மிகுந்த பயமுண்டாயிற்று.
அவள் தன் தவறைக் கண்டுபிடித்துத் திருத்தும்படியான வாய்ப்பு சப்பீரா ளுக்குக் கொடுக்கப்பட்டது. ஆனால் அதை அவள் உணரவில்லை. கணவ னோடு சேர்ந்து பொய் சொன்னாள். சங்கீதம் 63 ; 11 ல் “பொய் பேசுகிற வர்களின் வாய்அடைக்கப்படும்”என்றதைப் போல் சப்பீராளின் வாய் அடை க்கப்பட்டது. நீதிமொழிகள் 19 : 9 ல் “பொய்களைப் பேசுகிறவன் நாசம டைவான்” என்று கூறியுள்ளதைப் போல் அவர்கள் வாழ்க்கை நாசம டைந்தது. கணவன் மனைவிக்கு ஒருமனப்பாடு தேவை. ஆனால் ஒரு மனதுடன் கூடிய செயல்பாடுகள் அழிவிற்கல்ல. ஆக்கத்திற்கே நம்மை வழிநடத்த வேண்டும். பேதுரு கூறியதைக் கேட்டவுடன் பேதுருவின் பாத த்தில் விழுந்து சப்பீராள் தன் ஜீவனை விட்டாள். அனனியா, சப்பீராளின் மரணத்தைக் கேள்விப்பட்ட சபையாரெல்லாருக்கும், மற்ற யாவருக்கும் பயமுண்டாயிற்று. இதேபோல் அப்போஸ்தலர் 2 : 43 ல் அப்போஸ்தலர் களாலே அற்புதங்களும், அடையாளங்களும் செய்யப்பட்டதைப் பார்த்த எல்லோருக்கும் பயமுண்டாயிற்று. சபையில் வல்லமை அதிகரித்தது. அநேகஜனங்கள் இரட்சிக்கப்பட்டனர். சபையிலிலுள்ள வாலிபர்கள் அனனியாவை அடக்கம் பண்ணி விட்டு அப்பொழுதுதான் (3 மணிநேரம் கழித்து) வந்தனர். உடனே அவனுடைய மனைவியின் அடக்கம். வாலிப ர்கள் முறுமுறுக்காமல் அவளையும் அடக்கம் செய்ததைப் பார்க்கி றோம். நினிவேபட்டணத்தார் யோனாவின் பிரசாங்கத்தைக் கேட்டு தங்கள் பாவ வாழ்க்கையை விட்டு மனந்திரும்பினர். ஆனால் அனனியாவும் சப்பீரா ளும் ஆவிக்குரிய சபையிலிருந்தும், பேதுருவோடிருந்தும் சரியான மனநிலையிலில்லை. அதனால் தேவனை விட்டுத் தூரம் போனார்கள்.
1 தீமோத்தேயு 6 : 10ல் “பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; …”
என்று பவுல் கூறியுள்ளதைப் போல பண ஆசை அனனியா, சப்பீராளை பரிசுத்தஆவிக்கு விரோதமாகப் பொய்சொல்ல வைத்தது. எதிர்காலத்திற் குப் பணம் தேவை என்ற எண்ணத்துடன் செயல்பட்டதால், கர்த்தர் பேரில் விசுவாசமில்லாமல் இப்படிப்பட்ட காரியங்களை இருவரும் ஒருமனப் பட்டு செய்தனர். பொய்நாவைக் கர்த்தர் வெறுக்கிறார் என்று தெரிந் தும் அனனியாவும், சப்பீராளும் பொய் சொன்னார்கள். தேவனிடம் பொய் பேசி ஏமாற்ற வேண்டியதில்லை. நமது தகுதிக்கு ஏற்பவும், முழு மனது டனும், நம்மால் இயன்றதைக் கொடுக்கவே தேவன் பிரியப்படுகிறார் (2 கொரிந்தியர் 9 : 7). நமக்குப் பணஆசையும், மற்றவர்கள் தங்களைப் புகழ வேண்டுமென்ற எண்ணமும் வந்தால் நாம் சாத்தானின் சொல்லுக்குக் கீழ்படிந்து தேவனுக்குப் பிடிக்காத, சத்தியத்திற்கு விரோதமான செயல்கள் செய்யத் துணிந்து விடுவோம். நாம் பண ஆசையுள்ளவர்களாக இருந்தால் தேவனை நேசிக்கவும், ஊழியம் செய்யவும் முடியாது (மத்தேயு 6 : 24, யோவான் 5 : 41 –44). சப்பீராளும் கணவனின் தோல்விக்குத் துணை நின்று தங்கள் வாழ்க்கையைக் கெடுத்தாள். இவர்களின் வாழ்க்கை நமக்கு ஒரு பாடமாக, எச்சரிப்பாக இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் தன்னு டைய கணவருக்கு உதவ விவேகமுள்ள பெண்ணாக வாழக் கர்த்தர் உதவி செய்வாராக. ஆமென்.