மரத்தாள், மரியாளிடமிருந்து வந்த செய்தி:
யோவான் 11 : 3 “ அப்பொழுது அவனுடைய சகோதரிகள்; ஆண்டவரே, நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான் என்று சொல்ல, அவரிடத்திற்கு ஆள் அனுப்பினார்கள்.”
எருசலேமுக்கு சமீபமாய் உள்ள பெத்தானியா என்ற ஊரில், இயேசுவிடம் உண்மையான பக்தியுள்ள, அவரிடம் நெருக்கமான உறவு கொண்ட, அவரால் அன்பு கூறப்பட்ட குடும்பம் மார்த்தாள், மரியாள், லாசருவின் குடும்பம். அந்தக் குடும்பத்தின் ஒரே ஆண்மகனான லாசரு மரணமடை ந்தான். லாசருவின் கிரேக்கப் பெயர் எலியேசர். அதற்கு “தேவனிடமிருந்து உதவியைப் பெறுபவன்” என்று பொருள். தேவனிடமிருந்து மிகப்பெரிய அற்புதத்தைப் பெற்றுக்கொண்ட மனிதன் லாசருதான் என்பதில் சந்தேக மில்லை. இப்படிப்பட்டவர்களுக்குக் கூடவருத்தம், வேதனை, மரணம் இரு ந்ததை நாம் பார்க்கிறோம். தற்காலத்திலும் தேவனால் தெரிந்து கொள் ளப்பட்ட விசுவாசிகளுக்கும் இத்தகைய துன்பங்கள் நேரிடக்கூடும். லாசரு வின் சகோதரிகள் நீர் சிநேகிக்கிறவன் வியாதியாயிருக்கிறான்” என்ற செய்தியை இயேசுவுக்குச் சொல்லியனுப்பினர். அவனைக் குணமாக்க வரச்சொல்லி சொல்லியனுப்பவில்லை. இயேசு அதைக் கேட்டபோது,
இயேசுவின் பதிலும், காலதாமதமும்:
யோவான் 11 : 4 “இயேசு அதைக் கேட்டபொழுது: இந்த வியாதி மரணத்துக்கு ஏதுவாயிராமல் தேவனுடைய மகிமை விளங்குவதற்கு ஏதுவாயிருக்கிறது; தேவனுடைய குமாரனும் அதினால் மகிமைப்படுவார் என்றார்.”
அந்தச் செய்தி கிறிஸ்துவிடம் வந்து சேருவதற்கு முன்னமே லாசருவின் மரணம் சம்பவித்தது விடுகிறது. யோவான் 5:41 ல் “நான் மனுஷரால் மகிமையை ஏற்றுக்கொள்ளுகிறதில்லை” என்றும், யோவான்8: 50 ல் “நான் எனக்கு மகிமையைத் தேடுகிறதில்லை” என்றும் கூறுகிறார். மரித்த செய் தியறிந்தும் இரண்டுநாள் கழித்தே அந்த இடத்துக்கு இயேசு சென்றார். லாசரு மரணமடைந்ததை இயேசு தமது ஆற்றலால் அறிந்ததுமின்றி லாசருவைத்தான் மரணத்தினின்று உயிர் பெறச் செய்யப் போவதையும் முன்னறிந்திருந்ததாலும், அவர்களின் விசுவாசமும், சீஷர்களின் விசுவா சமும் பலப்படவும் அவர்களுக்குப் பெரிதான நன்மையைச் செய்வதற்கா கவே தாமதமாகச் சென்றார். அவர்களுடைய தேவையைக் காட்டிலும் இயேசுவின் நேரமும், திட்டமும் வித்தியாசமாக இருந்தன. தேவனுடைய தீர்மானம் மரணமடைந்த லாசருவை நான்கு நாட்களுக்குப் பின் உயிரோ டெழுப்பி அதன் மூலமாக பிதாவாகிய தேவனும், குமாரனாகிய இயேசு வும் மகிமைப்பட வேண்டுமென்பதுதான்.
இயேசு மார்த்தாள், மரியாளுடன்:
லாசருவை மார்த்தாளும் மரியாளும் இயேசுவிடம் “நீர் இங்கே இருந்தீ ரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான்” என்றனர். அவர்கள் கூறியது உண்மைதான் என்றாலும் அதைவிடப் பெரிய செயல் ஒன்று நடக்க விருப் பதை அவர்கள் அறியவில்லை. இதேபோல்தான் நாமும் நமது பிரச்சனை களின் போது கலங்குகிறோம். மேன்மையான ஒன்றை நமக்காகக் கர்த்தர் வைத்திருப்பதை உணர்வதில்லை. இயேசு சகோதரிகளிடம்“உன் சகோத ரன் உயிர்த்தெழுந்திருப்பான்” என்றார். அன்றைக்கே லாசருவை உயிரோ டெழுப்பப் போவதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அநேக சமயங்க ளில் நாமும் கர்த்தருடைய வார்த்தையைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் செயல்படுகிறோம். இந்நிலை மாறுவதற்கு ஆவியானவரின் வழிநடத்து தல் நமக்குத் தேவை. சகலமும் நன்மைக்கேதுவாக நடக்குதென்று முழு விசுவாசத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் (ரோமர் 8 : 28). அந்த நன்மை இன்னதென்று சில வேளைகளில் இவ்வுலகத்தில் வாழும் போதே அறிய லாம். சில நிகழ்ச்சிகள் நன்மையாக இருந்ததை நாம் பரலோகத்திற்குச் சென்றபின்னே அறிந்துகொள்ள முடியும். எனவே எல்லாவற்றிற்கும் நாம் நன்றி செலுத்த வேண்டும் (1தெசலோனிக்கேயர் 5 : 18).
அதன்பின் இயேசு “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்” என் றார். இவ்வாறு கூறுவதற்கு வேறு யாருக்கும் தகுதியோ, மன உறுதியோ, தைரியமோ கிடையாது. இயேசுவை விசுவாசிக்கிறவன் அவருடைய இரக சிய வருகைக்கு முன் மரணமடைந்தால் அவரால் அச்சமயத்தில் உயிர்த் தெழுதல் அடைவான். அச்சமயத்தில் உயிரோடிருந்தால் மரணமடைய மாட்டான் (1கொரிந்தியர் 15:51–54,1தெசலோனிக்கேயர் 4:14 – 17). மேலும் விசுவாசிக்கிறவன் நிலைபேறுடைய வாழ்வைப் பெற்றிருந்தால் என்றும் கிறிஸ்துவோடிருப்பான். விசுவாசியாதவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்னர் உயிர்த்தெழும்பி நியாயத்தீர்ப்படைவர் (யோவான்3:18,36, வெளிப் படுத்தல் 20 : 12, 13). மார்த்தாள் இயேசுவை தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று எந்த சந்தேகமுமில்லாமல் விசுவாசித்த போதிலும், அப்பொழுதே தன்னுடைய சகோதரனை உயிரோடெழுப்புவாரென்று எதிர்பார்க்க வில்லை.
இயேசு கண்ணீர் விட்டது:
யோவான் 11 : 33, 35 அவள் அழுகிறதையும் அவளோடேகூட வந்த யூதர்கள் அழுகிறதையும் இயேசு கண்டபோது ஆவியிலே கலங்கித் துயரமடைந்து:… இயேசு கண்ணீர் விட்டார்.”
இயேசு உலகத்தில் இருந்த 3 ஆண்டுகள் லாசருவையும் அவனது குடும் பத்தையும் அறிந்திருந்தார். அவர்கள் தன்னோடிருந்த ஐக்கியத்தையும், அந்த நான்கு நாட்களும் இரண்டு சகோதரிகளும் அனுபவித்திருந்த அவர் களது மன வேதனையையும், தாங்க முடியாத துயரத்தையும் உணர்ந்து இயேசு கண்ணீர் விட்டார். ஏனெனில் வெளிப்படுத்தல் 7 : 17 ல் “இவர்களு டைய கண்ணீர் யாவையும் துடைப்பார்” என்றுள்ளது. லாசரு இறந்ததற் காக அழவில்லை. இயேசு கண்ணீர் விட்டார்” என்ற வசனம் வேதத்தில் மிகச் சிறிய வசனம். பாவத்தாலும், மரணத்தாலும் மனிதகுலத்துக்கு ஏற்ப ட்ட வேதனைகளை நினைத்து அழுதிருப்பார். கர்த்தருடைய பிள்ளைகள் வேதனைப்படும் போதும், கண்ணீர் விடும்போதும் இயேசுவும் நம்மோடு சேர்ந்து கண்ணீர் விடுவார். இயேசு லாசருவை உயிருடன் எழுப்பப் போகி றார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. யாரும் அதற்காக அங்கு வந்த இயேசுவிடம் வேண்டவுமில்லை.இயேசு லாசருவின் கல்லறையின் பக்க த்தில் நின்று, சடலத்தை வைத்திருந்த குகையின் கல்லை எடுத்துக் போடு ங்கள் என்றார். எளிதான கல்லை எடுத்துப்போடும் வேலையை அவர்களு க்குக் கொடுத்து கடினமான யாரும் செய்ய முடியாத லாசருவை உயிரோ டெழுப்பும் செயலை இயேசு செய்தார். குகையில் வைத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டதால் நாறுமே என்று மார்த்தாள் கூறினாள். அதற்கு இயேசு திரும்பவும் “நீ விசுவாசத்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய்” என்றார். அப்பொழுது கல்லை எடுத்துக் போட்டார்கள்.
இயேசு பிதாவிடம் பேசியது:
யோவான் 11 : 41, 42 “இயேசு தம்முடைய கண்களை ஏறெடுத்து: பிதாவே, நீர் எனக்குச் செவிகொடுத்தபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன்.’
நீர் எப்பொழுதும் எனக்குச் செவிகொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்துநிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன் என்றார்.”
கல்லறை வைத்திருந்த குகையின் கல்லை எடுத்துக் போட்டவுடன் கிறிஸ்துவின் கண்கள் பிதாவை நோக்கிப் பார்த்தன. இயேசு தன்னுடைய ஜெபம் பிதாவினால் உடனடியாக அங்கீகரிக்கப்படுமென்ற நம்பிக்கை அவ ரிடமிருந்தது. கல்லறையைச் சுற்றியிருக்கும் திரளான ஜனங்கள் கேட்கும் விதத்தில் கிறிஸ்து பிதாவுடன் பேசிக்கொண்டிருக்கிறார். தான் உலகத்தில் வாழ்ந்த நாட்களில் தன்னிச்சையாக தன்னுடைய சுய விருப்பத்தின் அடிப் படையில் எதையுமே இயேசு செய்யவில்லை, செய்யப்போவதுமில்லை என்பதைக் கல்லறையைச் சுற்றியிருக்கும் ஜனங்கள் கண்டுகொள்ளும் விதத்தில் பிதாவோடு பேசினார்.நீர்தான் என்னை அனுப்பினீர் என்பதை இந்த யூத ஜனங்கள் கண்டுகொள்ள வேண்டும் என்பதற்காகவே பிதாவிடம் இயேசு பேசிக்கொண்டிருக்கிறார். “லாசருவே வெளியே வா” என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட் டார்.“ இந்த ஜெபத்தை ஏறெடுப்பதற்கு முன்னே பிதாவி டம் ஜெபித்துப் பதிலைப் பெற்றிருந்தார். நீர் எப்பொழுதும் எனக்குச் செவி கொடுக்கிறீர் என்று நான் அறிந்திருக்கிறேன்; ஆனாலும் நீர் என்னை அனுப்பினதைச் சூழ்ந்து நிற்கும் ஜனங்கள் விசுவாசிக்கும்படியாக அவர்கள் நிமித்தம் இதைச் சொன்னேன்” என்றார்.
இயேசு பிரேதத்துக்குக் கொடுத்த கட்டளை:
யோவான் 11 : 43, 44 “இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.”
“ அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார்.”
மரணமடைந்து நான்கு நாட்களுக்குப் பின் அடக்கம் பண்ணப்பட்ட மனி தனை உயிரோடிருப்பவனைக் கூப்பிடுவதைப் போன்று இயேசு லாசருவே வெளியே வா என்று உரத்த சத்தமிட்டுக் கூப்பிட்டதைப் பார்க்கிறோம். இதேபோல் இயேசு சிலுவையிலிருக்கும் போதும் “பிதாவே உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேனென்று மகாசத்தமிட்டுச் சொன் னார் (லுக்கா3:46). மரித்த சடலத்துடன் இயேசு பேசினது மட்டுமல்ல, கட்ட ளையும் கொடுத்ததைப் பார்க்கிறோம். யோவான்6:63ல் இயேசுதான் சொல் லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனுமாய் இருக்கிறது என்றார். அவரு டைய வார்த்தையில் ஆவியும் ஜீவனுமிருப்பதால் மரித்தவன் உயிரோடு வந்தான். லாசருவினுடைய ஆவி,ஆத்துமா, சரீரம் அந்தக் கட் டளைக்குக் கீழ்படிந்ததது. இந்தச் சத்தத்தைக் கேட்ட மரித்த லாசரு கட்டுகளுடன் நட ந்து வெளியே வந்தான்.
லாசருவின் சரீரம் முழுவதும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்ட நிலை யிலிருந்தது. அதோடு வெளியே நடந்து வருவது எளிதான காரியமல்ல. அதற்கு மேல் நடந்து கல்லறைக்கு வெளியே வர அவனால் முடியாது என் பதினால் அங்கு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த யூதர்களிடம் கட்டு களை அவிழ்த்து விடுமாறு கட்டளையிடுகிறார். பாவத்தின் ஆளுகை யிலிருந்து முழுமையாக விடுதலை பெற வேண்டுமானால் நம்மை ஆளு கைக்குள் வைத்திருக்கும் பாவக் கட்டுகளிலிருந்து விடுதலை பெற வேண் டும். இயேசு விதைத்த கண்ணீரின் விதைகள் மரித்த லாசருவை உயிரோ டெழுப்பிற்று. லாசரு தான் இழந்துபோன ஜீவனை மறுபடியும் பெற்றுக் கொண்டான். லாசரு உயிர்த்தெழுந்த அற்புதம், இயேசு உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறார் என்பதற்கு அடையாளமாயிருக்கிறது. இது மரித்த எல்லா விசுவாசிகளும் மரித்தோரிலிருந்து எழுப்பப்படுவார்கள் என்று தேவன் நிரூபித்துக் காட்டும் செயல்முறையாக உள்ளது (1தெசலோ னிக்கேயர் 4 : 13 – 16).
அற்புதத்தைப் பார்த்த அநேகர் விசுவாசிகளாயினர்:
லாசருவின் மரணத்தினிமித்தம் மரியாளிடம் துக்கம் விசாரிக்கும்படி பக்க த்து ஊர்களிலிருந்து பல யூதர்கள் குடும்பத்தை ஆறுதல்படுத்தும்படி பெத் தானியாவுக்கு வந்திருந்தார்கள். துணிகளால் கட்டப்பட்ட லாசருவின் சரீரம் இயேசுவின் கட்டளைக்கு கீழ்ப்படிந்து கல்லறையை விட்டு வெளி யே வருவதைக் கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்திருப்பார்கள். அவர்களு டைய ஆவிக்குரிய கண்கள் இதன் விளைவாகத் திறக்கப்படுகிறது. இதற்கு முன்பாக அவர்கள் இயேசுவை அறிந்திருக்கலாம். சந்தித்திருக்கலாம். ஆனாலும் இரட்சிப்பின் அனுபவத்தைப் பெற்று விசுவாசிகளாக அப்போது மாறுகிறார்கள்.
கல்லறையை மூடியிருந்த கல்லை எடுத்துக் போடுவதும், உயிரோடெழு ந்தவனைச் சுற்றியிருந்த துணிகளைக் கட்டவிழ்ப்பதும் மற்றவர்களின் செயலாகும். மரித்தவனை உயிரோடெழுப்பியது இயேசுவின் செயலாகும். இவ்வாறே ஒரு மனிதனை இரட்சிப்புக்குள் நடத்துவதற்கு நாம் முயற்சி கள் செய்ய வேண்டும். இயேசுவானவர் அவனை பாவத்திலிருந்து உயிர் தெழச் செய்து அவனை இரட்சிப்பார். அதற்குப் பின் அவனுக்குத் தேவை யான ஆலோசனைகள் கொடுத்து வழிநடத்துவது நமது கடமையாகும். இயேசு பெத்தானியாவுக்கு மறுபடியும் வந்தபோது உயிரோடெழுந்த லாசருவும் அவரோடிருந்தான். நாமும் கண்ணீரோடு ஜெபிக்கக் கற்றுக் கொள்வோமாக. ஆமென்.